இந்தியா மற்றும் இலங்கை ஏற்றுமதி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து 

The High Commission of India in Colombo facilitated talks between FIEO and NCE to strengthen bilateral trade and MSME cooperation in June 2025.

இந்தியா மற்றும் இலங்கை ஏற்றுமதி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து 

இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக குறுகிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) ஆதரவளிக்கும் நோக்குடன், இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் இல் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி (19-08- 2025) அன்று, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) ஆகிய இரண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தகவல் பரிமாற்றம், முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டாளர்களை இணைத்தல் உட்பட புதிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதாகும்.

மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில், FIEO அமைப்பின் பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் சஹாய் மற்றும் NCE அமைப்பின் தலைவர் இந்திர கௌஷல் ராஜபக்ஷ ஆகியோர் தங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பங்கேற்றனர். கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.