அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella Video Awards-இல் இலங்கை கலைஞர் hachajah இரட்டை விருதுகள் வென்று சாதனை

Sri Lankan A cappella artist hachajah has achieved international recognition after winning two major awards at the A Cappella Video Awards (AVA) held in Los Angeles. His music video “Mind Gag” won the awards for Best Electronic/Experimental Video and Best Indie Video.

அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella Video Awards-இல் இலங்கை கலைஞர் hachajah இரட்டை விருதுகள் வென்று சாதனை

இலங்கையில் பிறந்த A cappella கலைஞரான hachajah, சர்வதேச ரீதியில் இரு விருதுகளை சுவீகரித்ததை தொடர்ந்து கணிசமான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜெலிஸ் நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த A Cappella வீடியோ விருதுகள் (AVAs) நிகழ்வில் ‘Best Electronic/ Experimental Video’ மற்றும் ‘Best Indie Video’ ஆகியவற்றுக்கான கௌரவிப்புகளை A cappella இசை வீடியோவான Mind Gag என்பதற்காக இவர் பெற்றுக் கொண்டார். 

A Cappella சங்கத்தினால் (CASA) வருடாந்தம் வழங்கப்படும் A Cappella Video விருதுகள், உலகளாவிய a cappella சமூகத்தின் சிறந்த காணொளி தயாரிப்புகளைக் கௌரவிக்கின்றன. இந்த விருதுகள், இத்துறை சார்ந்த புத்தாக்கம், ஆக்கத்திறன் மற்றும் தொடர்ச்சியான கலை வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த இத்துறையில், Mind Gag காணொளிக்காக hachajah இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், ஆறு பரிந்துரைகளையும் பெற்று ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன், ‘Outstanding Special/Visual Effects’, ‘Outstanding Video Editing’, ‘Best Video by a Non-Scholastic Group’ மற்றும் ‘Best Alternative Video’ ஆகிய நான்கு பிரிவுகளில் அவர் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டார்.

கொழும்பில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் சரித் பீரிஸ், “hachajah” எனும் புனைப்பெயரில் கலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். பிரதான பொப் இசை வடிவங்களுடன் இலங்கையின் தாள நயங்கள், குரல் நுணுக்கங்கள் மற்றும் இசைத் தாக்கங்களை இணைத்து தனித்துவமான A cappella இசைக்கோவைகளை உருவாக்குவதில் இவர் பெயர்பெற்றவர். இவரது படைப்புகள் கலாசார அடையாளத்தையும் சமகால உலகளாவிய இசையையும் ஒன்றிணைப்பதோடு, இலங்கையின் இசைக்கூறுகளை சர்வதேச ரீதியில் ரசிக்கத்தக்க ஒரு வடிவத்தில் நிலைநிறுத்துகின்றன.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தமது EP தொடர்பில் hachajah கருத்துத் தெரிவிக்கையில், “What Lies Within’ எனும் பெயரிலான புதிய EP, பல இடங்களிலும் வெளிப்படுத்தப்படாத ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள ‘Mind Gag’ மற்றும் ‘Tan Q’ ஆகிய பாடல்கள் மனநலம் சார்ந்த விடயங்களையும், ‘Desensitized’ எனும் பாடல் மனவடு குறித்த விடயங்களையும் ஆழமாக ஆராய்கின்றன. இவை மிகவும் முக்கியமானவை எனக் கருதப்பட்டாலும், அவசியமான கவனத்தைப் பெறுவதில்லை என்பதே எனது கருத்தாகும். எனது முந்தைய பாடல்களைப் போலவே, இவை இலங்கையில் நான் பெற்ற தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளாக அமைந்திருந்தாலும், அவை எனது கதையையும் தாண்டிய பரந்த கருத்துக்களைக் கொண்டுள்ளன.” என்றார்.


AVA இல் இரண்டு வெற்றிகளுக்கு மேலதிகமாக, Mind Gag காணொளியானது 2025 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற IMVA விருதுகளில் ‘Best Drama Music Video' விருதையும், 2025 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய இசைக்காணொளி விருதுகளில் ‘Best Pop Music Video’ விருதையும் வென்றுள்ளது.

இவ்வருடம் முழுவதும் வெளியிடுவதற்காகப் பல புதிய தனிப்பாடல்களை hachajah தயாரித்து வருகின்றார். மேலும், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவரது மூன்றாவது EP வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அவரது எதிர்வரும் படைப்புகள், hachajah இசைக்கேயுரிய தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு, falsetto, பரீட்சார்த்தமான குரல் நுணுக்கங்கள், மாறுபட்ட தாளக்கட்டுகள் மற்றும் தாள மாதிரிகள் ஆகியவற்றின் ஊடாக அவரது இசை எல்லையை மேலும் விரிவுபடுத்துகின்றன. முக்கிய சர்வதேச இசைக்காணொளித் தளங்களில் அதிகரித்து வரும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, இந்த அடுத்த கட்டமானது அவரது தொடர்ச்சியான கலை வேகத்தைக் குறிப்பதோடு, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் இலங்கை கலைஞராக hachajah ஐ நிலைநிறுத்துகின்றது. அத்துடன், இது உலகளாவிய A cappella மற்றும் இசைக்காணொளித் துறையில் அவரது நிலையான மற்றும் பரிணாம வளர்ச்சியடைந்த பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்றது.

விருது வென்ற இலங்கையின் A Cappella கலைஞர் – hachajah, எனும் சரித் பீரிஸ்

AVAs வெற்றியாளர் - hachajah