Xiaomi இன் புதிய Redmi Note 17 ஸ்மார்ட்போன் வரிசை மற்றும் அதிநவீன ஸ்மார்ட் சாதனங்கள் இலங்கையில் அறிமுகம்

Xiaomi தனது புதிய Redmi Note 17 ஸ்மார்ட்போன் வரிசை மற்றும் அதிநவீன ஸ்மார்ட் சாதனங்களை விசேட சலுகைகளுடன் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi இன் புதிய Redmi Note 17 ஸ்மார்ட்போன் வரிசை மற்றும் அதிநவீன ஸ்மார்ட் சாதனங்கள் இலங்கையில் அறிமுகம்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் ஸ்மார்ட் தயாரிப்பு வர்த்தக நாமமான Xiaomi, தனது புதிய Redmi Note 17 தயாரிப்பு வரிசையை அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனுடன், பொழுதுபோக்கு, ஸ்மார்ட் வீட்டுத் தொழில்நுட்பம், தனிப்பட்ட பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உடற்தகுதி, சமையலறை உபகரணங்கள் மற்றும் வாழ்க்கை முறை சாதனங்கள் அடங்கிய விரிவான ஸ்மார்ட் சாதனத் தொகுப்பையும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அனைவருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான Xiaomi இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் இந்த அறிமுகமானது, இலங்கை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் சாதன வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.


Redmi Note 17 தயாரிப்பு வரிசையானது Redmi Note 17 Pro Max 5G, Redmi Note 17 Pro 5G, Redmi Note 17 5G மற்றும் Redmi Note 17ஆகிய நான்கு பிரதான மாதிரிகளைக் கொண்டுள்ளது. இவை வாடிக்கையாளரி தேவைகளுக்கு ஏற்ற நீண்டகாலம் இயங்கும் பேட்டரிகள், தெளிவான பெரிய திரைகள், உயர் உறுதித்தன்மை மற்றும் பல AI வசதிகளை வழங்குவது இதன் சிறப்பம்சமாக விளங்குகின்றன. 


இந்த வரிசையில் உள்ள Redmi Note 17 Pro Max 5G மாதிரியானது, 100W HyperCharge மூலம் சார்ஜ்
செய்யக்கூடிய 10,000mAh பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் இதனை மூன்று நாட்கள் வரை தடையின்றிப் பயன்படுத்த முடியும். மேலும், 120Hz வரை refresh rate கொண்ட 6.83 அங்குல 1.5K CrystalRes AMOLED திரை, OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP பிரதான கெமரா, Snapdragon 6 Gen 5 processor மற்றும் Google Gemini ஆல் இயக்கப்படும் Xiaomi HyperAI தொழில்நுட்பம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.


இதன்போது அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 17 Pro 5G கையடக்கத் தொலைபேசியானது 67W
HyperCharge உடன் 8,340mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 17 5G மற்றும் Redmi Note 17 ஆகிய இரண்டு மாதிரிகளிலும் 7,700mAh பேட்டரிகளும் 45W வேகமான சார்ஜர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒவ்வொரு கையடக்கத் தொலைபேசியிலும் உயர்ந்த refresh-rate கொண்ட AMOLED திரைகள், மேம்பட்ட கெமரா அமைப்பு மற்றும் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாப்புப் பெறும் IP66, IP68, IP69 மற்றும் IP69K சான்றிதற்களைப் பெற்றுள்ள இதன் Pro மாதிரியானது, 3 மீற்றர் உயரம் வரை தரையில் விழுந்தாலும் தாக்குப்பிடிக்கக்கூடிய வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.


இந்த விசேட அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த Xiaomi ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான தலைவர் கைன் வாங் கருத்து தெரிவிக்கையில்,

“Xiaomi என்ற முறையில், வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள புதிய புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம். புதிய Redmi Note 17 மாதிரி வரிசை மூலமாக, வாடிக்கையாளர்களின் நாளாந்தம் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உயர் செயல்திறன், உறுதித்தன்மை, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல AI சிறப்பம்சங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். எமது ஸ்மார்ட் சாதன வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவது, ஒன்றோடொன்று இணைக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானதாகவும், இலகுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான எங்களது அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்துகிறது.” என்றார்.


ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிமாக, Xiaomi நிறுவனம் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொழுதுபோக்குப் பிரிவின் கீழ் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட் வீட்டுத் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் பாதுகாப்பு கெமராக்கள், smart locks, LED விளக்குகள், robot vacuum cleaners, air purifiers மற்றும் tower fans ஆகியவை அதில் அடங்குகின்றன.


அத்துடன், earbuds, watches, smart bands, headphones மற்றும் audio glasses ஆகியவற்றுடன் hair dryers,
straightener brushes, trimmers மற்றும் shavers போன்ற தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளும் இதில் அடங்குகின்றன. சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் எடைக் கருவிகள், உடலின் நிலைகளை அளவிடும் தராசுகள் மற்றும் மசாஜ் கன்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 


சமையலறைப் பயன்பாட்டிற்காக blenders, air fryers, microwave ovens மற்றும் water dispensers போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், Xiaomi Tags, power banks மற்றும் scooters ஆகியவை அன்றாட போக்குவரத்து மற்றும் வாழ்க்கைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 


இந்த நிகழ்வில், Xiaomi ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான தலைவர் கைன் வாங் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் சதானி கஜதீர ஆகியோரால் புதிய தயாரிப்புகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. அங்கு கலந்துகொண்டவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மாதிரியின் அம்சங்கள், அவற்றின் விலைகள், அறிமுக சலுகைகள் மற்றும் ஏனைய பரந்த ஸ்மார்ட் சாதனங்கள் பற்றிய தெளிவான புரிதல் வழங்கப்பட்டது. வருகை தந்த விருந்தினர்கள் தயாரிப்புகளைத் தாங்களே பரிசோதித்துப் பார்ப்பதற்காக ஒரு ஊடாடும் அனுபவ மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நவம்பர் 2 முதல் 18 வரை தகுதிபெறும் Redmi Note 17 Series சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், 12,000 ரூபா வரை முதல் மாத கட்டணம் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். இத்துடன், 18 மாத கால உத்தரவாதமும், முதல் வருடத்தில் ஒருமுறை இலவசமாகத் திரையை மாற்றித் தரும் வசதியும் கிடைக்கும். தெரிவு செய்யப்பட்ட 5G சாதனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 275GB இலவச Data சலுகையும் வழங்கப்படுகிறது.


இவ்அறிமுகத்தின் மூலம் Xiaomi, ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட சாதனங்களை ஒரு விரிவான தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்பின்கீழ் ஒருங்கிணைத்து, இலங்கையிலான தனது சந்தைப் பங்களிப்பையும் வாடிக்கையாளர் வரம்பையும் தொடர்ந்து விரிவாக்கி வருகிறது.