தொடர்ந்து நான்காவது ஆண்டாக MAGNATE 2026 இன் உத்தியோகபூர்வ Title பங்காளராக First Capital
First Capital நிறுவனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக MAGNATE 2026 இன் உத்தியோகபூர்வ Title பங்காளராக இணைந்து, இளம் நிதித்துறைத் திறமையாளர்களையும் கல்வி–தொழில்துறை ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது.
JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் முன்னோடியாகச் செயற்படும் நிறுவனமுமான First Capital Holdings PLC, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப்பீடத்தின் நிதி மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதன்மை நிகழ்வான MAGNATE 2026 இன் உத்தியோகபூர்வ Title பங்காளராகத் தொடர்ந்து நான்காவது வருடமாக மீண்டும் இணைந்துள்ளது.
இத் தொடர்ச்சியான இணைவு, கல்வித்துறைக்கும் நிதிச்சேவைத் துறைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்கால நிதித்துறை நிபுணர்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மீது First Capital கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
MAGNATE ஆனது நிதித்துறையில் புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், நிதித்துறை சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் தளமாக விளங்குகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில், தொழில்துறை நிபுணரின் சிறப்புரை, கலந்துரையாடல்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விவாதப் போட்டி என்பன இடம்பெற்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், தொழில்துறையின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ளவும் மற்றும் மாறிவரும் நிதித்துறையின் போக்குகளை ஆராயவும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்நிகழ்வில் First Capital Holdings சார்பில் கலந்துகொண்ட அதன் சொத்து முகாமைத்துவப் பிரிவின் துணைத் தலைவர் குமரவரன் கனகசூரியர், “Barter to Bitcoin: Global Shift in Finance Beyond Borders” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிதி முறைமைகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுவரும் உலகளாவிய நிதிச்சூழலை வடிவமைக்கும் காரணிகள் குறித்து அவர் இதன் போது ஆராய்ந்தார்.
First Capital இன் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த First Capital Holdings PLC இன் மனித வளப்பிரிவின் தலைவர் சாமர புசெல்ல, “வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுடனான இணைவு முக்கிய பங்கு வகிக்கிறது. MAGNATE போன்ற தளங்கள்,
எதிர்கால நிதித்துறை நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், இத்துறை மற்றும் அது வழங்கும் வாய்ப்புகள் குறித்த சிறந்த புரிதலை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கின்றது. பணியமர்த்துநர் என்ற வகையில், கல்வித்துறையுடனான உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதை நாம் மதிக்கிறோம். இத்தகைய தொடர்புகள் இளம் திறமையாளர்கள் கற்றுக்கொள்ளவும், வளர்ச்சியடையவும், தமது திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.” என்றார்.
மேலும் First Capital இன் பங்களிப்பு, சாத்தியமான பயிற்சிப் பணிவாய்ப்புகளுக்காக (internship) வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. MAGNATE நிகழ்வில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதன் ஊடாக முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்துடனான தனது உறவை ஒரு பணியமர்த்துநர் என்ற வகையில் மேலும் வலுப்படுத்துவதுடன், அறிவுப் பகிர்வு, நிதித்துறைப் புத்தாக்கம் மற்றும் கல்வித்துறைக்கும் நிதிச்சேவைத் துறைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேம்படுத்துவதையும்
First Capital நோக்கமாகக் கொண்டுள்ளது.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது.
மூலதனச் சந்தைத் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட First Capital, தொழில்துறை சார்ந்த நிபுணத்துவத்தையும் சந்தையில் தனது இருப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. First Capital Holdings PLC மற்றும் அதன் துணை நிறுவனமான First Capital Treasuries PLC ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. First Capital Holdings PLC, 2026 ஆம் ஆண்டில், World Economic Magazine Awards விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில், Superbrands அந்தஸ்தைப் பெற்ற இலங்கையின் முதலாவது முதலீட்டு நிறுவனமாக விளங்கியமை அதன் வலுவான வர்த்தகநாம இருப்பையும் சந்தை நிலைப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
First Capital Holdings PLC, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE), இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைகளுக்கு அமைவாக, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் கீழ் செயற்படுகிறது.
First Capital Holdings PLC, MAGNATE 2026 இன் உத்தியோகபூர்வ Title பங்காளராக மீண்டும் இணைந்துள்ளதுடன், அதன் சொத்து முகாமைத்துவப் பிரிவின் துணைத் தலைவர் குமரவரன் கனகசூரியர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.
editor