கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை Brand Ambassador ஆக இணைத்துக்கொண்ட GHR
Global Housing & Real Estate (Pvt) Ltd (GHR), இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை தனது Brand Ambassador ஆக இணைத்துக்கொண்டுள்ளது. கொழும்பு Cinnamon Life இல் செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் “Two Gamechangers, A New Beginning” என்ற தொனிப்பொருளில் இந்தக் கூட்டாண்மை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் ஆடம்பர ரியல் எஸ்டேட் துறையில் புதிய கட்டத்தை நோக்கி நகரும் GHR, தென் கடற்கரையை நோக்கி தனது Hotel Residency திட்டங்களை விரிவுபடுத்துவதுடன் புதிய உயர்மாடி திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இலங்கையில் சொகுசு ரியல் எஸ்டேட் துறையில் தனது புதிய பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் குளோபல் ஹௌசிங் அன்ட் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை தனது வர்த்தக நாம தூதராக இணைத்துக் கொண்டுள்ளதன் மூலம் ஒரு முக்கிய கூட்டாண்மை தொடர்பான விடயங்களை அறிவித்துள்ளது.
இக் கூட்டாண்மை, “இரு மாற்றத்தை உருவாக்கியவர்களின், ஒரு புதிய ஆரம்பம் ” என்ற கருப்பொருளின் கீழ், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி கொழும்பிலுள்ள சின்னமன் லைப் இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இக் கூட்டணி, தங்களது துறைகளில் வழக்கமான நடைமுறைகளுக்கு சவால் விடுத்த இரு பெயர்களை ஒன்றிணைக்கிறது: தனது அச்சமற்ற அணுகுமுறையால் சர்வதேச கிரிக்கெட்டின் இயக்கவியலை மாற்றியமைத்த சனத் ஜயசூரிய மற்றும் இலங்கையில் சொத்து முதலீடு மற்றும் சொகுசு வாழ்க்கை முறைக்கு புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் ஜி எச் ஆர் இனையும் ஒன்றினைத்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, தரம், கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் நீண்டகால முதலீட்டு மதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஜி எச் ஆர் ஆனது இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் தனது வலுவான இடத்தை உருவாக்கியுள்ளது.
நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 2016 ஆம் ஆண்டில் ஜி எச் ஆர் இலங்கை சந்தையில் ஹோட்டல் ரெசிடென்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. இம் மாதிரி, சொகுசு விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டை ஒன்றிணைத்து, முதலீட்டு வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகளுடன் சொத்து உரிமைக்கான வாய்ப்புகளை உருவாக்கியது. அதேவேளை, நாட்டின் உயர்தர சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் இது பங்களித்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முக்கிய இடங்களிலான தனது திட்டங்களையும் ஜி எச் ஆர் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
இந்த அறிவிப்பின் போது உரையாற்றிய குளோபல் ஹௌசிங் அன்ட் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தசுன் விக்ரமரத்ன கூறுகையில், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் சொத்து மேம்பாட்டின் மூலம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கான எல்லைகளை விரிவுபடுத்த குளோபல் ஹௌசிங் அன்ட் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்தும் முயன்று வருகிறது. 2016 ஆம் ஆண்டிலேயே ஹோட்டல் ரெசிடென்சி கருத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளாக, எங்களது நோக்கம் எப்போதும் தெளிவாகவே இருந்துள்ளது: எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதுடன், இலங்கையின் கொண்டோமினியம் துறையை ஒரு புதிய எல்லைக்குக் கொண்டு செல்வதாகும்” என்றார்.
சனத் ஜயசூரியவுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்ட தீர்மானம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “GHR இன் அடிப்படை கொள்கைகளையும் தனித்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குரலைத் தேடியபோது, சனத் ஜயசூரிய இயல்பான தேர்வாக இருந்தார். சனத் பாரம்பரிய சர்வதேச கிரிக்கெட் முறைகளை மாற்றி, தொடக்க ஓவர்களை உலகம் பார்க்கும் விதத்தை மறுவரையறை செய்ததைப் போலவே, ஜி எச் ஆர் ரியல் எஸ்டேட் துறையின் பாரம்பரிய அணுகுமுறைகளுக்கு சவால் விடுத்து, சொகுசு வாழ்க்கை முறையில் ஒரு புதிய தரநிலையை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டாண்மை உண்மையான ஒரு சங்கமத்தை பிரதிபலிக்கிறது; இரு மாற்றத்தை உருவாக்கியவர்கள், ஒரு புதிய தொடக்கம்” என்றார்.
சனத் ஜயசூரியவைப் பொறுத்தவரை, இக் கூட்டாண்மை தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் நிலைநிறுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு சவால் விடும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் உள்ள பகிரப்பட்ட நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அவர் கூறுகையில், “என் வாழ்நாள் முழுவதும், தொலைநோக்கு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டின் போக்கையே மாற்ற அஞ்சாத முன்னோடிகளுக்கு ஆதரவளிப்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். குறிப்பாக ஹோட்டல் ரெசிடென்சி துறையில் அவர்கள் மேற்கொண்ட முன்னோடியான பணிகளின் மூலம், ஜி எச் ஆர் இலங்கையின் ரியல் எஸ்டேட் சந்தையில் உண்மையான தொலைநோக்குப் பார்வையாளர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. சிறப்பிற்கான எனது ஆர்வத்தையும் தேசிய பெருமையையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு அணியுடன் இணைந்து செயல்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.
இந்த அறிவிப்பு, இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியில் தனது தடத்தை விரிவுபடுத்த நிறுவனம் தயாராகி வரும் நிலையில், ஜி எச் ஆர் இன் அடுத்த முக்கியமான மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஒரு முன்னோட்டத்தையும் வழங்கியது.
“எதிர்காலத்தை நோக்கிம் இத் தருணத்தில், அடுத்து வரவிருப்பதைப் பற்றிய ஒரு சிறிய முன்னறிவிப்பை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கு கடற்கரைப் பகுதியில் உண்மையிலேயே அசாதாரணமான ஒரு உயர்மாடி அடையாளக் கட்டிடத்தை அறிமுகப்படுத்தும் தருவாயில் GHR உள்ளது. இந்தத் திட்டம் இலங்கையில் சொகுசு வாழ்க்கை மற்றும் முதலீட்டுக்கான ஒரு புதிய தரநிலையை உருவாக்கப் போகிறது,” என ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, சிகிரியா, நுவரெலியா மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வளர்ந்து வரும் ஹோட்டல் ரெசிடென்சி திட்டங்களுடன், சுற்றுலாத் துறையால் உருவாகியுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் அடுத்த வளர்ச்சிக் கட்டமாக இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதிகளை நோக்கி தனது விரிவாக்கத்தை மேற்கொள்ள ஜி எச் ஆர் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் வளர்ந்து வரும் சொகுசு சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சொத்து முதலீடுகளைத் தேடும் உள்ளூர் முதலீட்டாளர்கள், சர்வதேச வாங்குபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் கருதுகிறது.
ஜி எச் ஆர் தனது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் நிலையில், சனத் ஜயசூரியவுடனான இக் கூட்டாண்மை வெறுமனே ஒரு புதிய பிராண்ட் இணைப்பை மட்டும் குறிக்கவில்லை. வழக்கமான நடைமுறைகளுக்கு சவால் விடும் துணிவு, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணம் மற்றும் விளையாட்டின் போக்கையே மாற்றும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இரு கதைகளை இது ஒன்றிணைக்கிறது. பொருத்தமாகவே, மாற்றத்தை உருவாக்கிய இருவருக்குமான ஒரு புதிய தொடக்கத்தை இது குறிக்கிறது.
குளோபல் ஹௌசிங் அன்ட் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. தசுன் விக்ரமரத்ன உடன் உலகப் புகழ்பெற்ற பிரபலமும் வர்த்தக நாம தூதருமான சனத் ஜெயசூரிய
editor