உலகளாவிய மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்து கொழும்பில் மதத் தலைவர்கள் கலந்துரையாடல்

மனித உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான சர்வதேச அமர்வொன்றிற்காக செப்டெம்பர் 11ஆம் திகதி கொழும்பில் மதத் தலைவர்கள் ஒன்றுகூடினர். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட Beautiful Bridge Project அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 27 பேர் பங்கேற்றதுடன், கிறிஸ்தவம் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், மத சுதந்திரம் மற்றும் தென்கொரியாவில் மதத் தலைவர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

உலகளாவிய மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்து கொழும்பில் மதத் தலைவர்கள் கலந்துரையாடல்

கொழும்பு, இலங்கை — "மனித உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் சாராம்" என்ற தலைப்பிலான சர்வதேச அமர்விற்காக, மதத் தலைவர்கள் செப்டம்பர் 11 அன்று கொழும்பில் உள்ள மிராஜ் ஹோட்டலில் ஒன்றுகூடினர்.

நியூயோர்க்கை மையமாகக் கொண்ட Beautiful Bridge Project அமைப்பினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகளாவிய கிறிஸ்தவம் எதிர்கொள்ளும் சமகால சவால்களைப் பற்றி விவாதிக்கவும், தென்கொரிய மதத் தலைவரான தலைவர் லீ மான்-ஹீக்கு ஒத்துழைப்பினை வெளிப்படுத்தவும் இந்த நிகழ்வு 27 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.

ஜனநாயக சமூகங்களில் மத ஒடுக்குமுறை நிகழ்வுகளை ஆராய்வதற்கும், குறிப்பாக தென்கொரியாவில் எதிர்கொள்ளப்படும் சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை மையப்படுத்துவதற்கும் இந்த ஒன்றுகூடல் உள்நாட்டு மதத்தலைவர்களுக்கு ஒரு மேடையை வழங்கியது.

மத சுதந்திரம் குறித்த உலகளாவிய கவலைகள் 

காலை அமர்வின்போது, பங்கேற்ற மதகுருமார்கள் வரலாற்று ரீதியான மதத் துன்புறுத்தல்களுக்கும், மதத் தலைவர்கள் மீதான தற்கால சட்டரீதியான அழுத்தங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சுயாதீன போதகர் ஒருவர், தற்போதைய சூழ்நிலையின் பரந்த ஆன்மீகப் பின்னணியை எடுத்துரைத்தார். "கொரியா அதன் கிறிஸ்தவ அடித்தளத்தின் மூலம் ஒரு வலிமையான தேசமாக வளர்ந்தது, ஆனாலும் அங்கு மதத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்," என்று அவர் அந்த கருத்தரங்கில் கூறினார். சமூக அழுத்தத்தை, ஆரம்பக்ககால கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட வரலாற்று சவால்களுடன் அவர் ஒப்பிட்டுக்கட்டினார்.

 சமயங்களுக்கிடையிலான ஆதரவும் எதிர்கால நடவடிக்கைகளும்

 
இந்தக் கருத்தரங்கானது பரந்த அளவிலான பல சமயங்களுக்கிடயிலான எதிர்விளைவுகளையும் எடுத்துக்காட்டியுள்ளது; தென்கொரியாவில் மதத் தலைவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்த பிராந்திய தென்கொரிய பௌத்தத் தலைவர்கள் உட்பட, பல்வேறு மதக் குழுக்களிடமிருந்து நீதி கோரி எழுந்த பொது அழைப்புகளை போதகர் ராஜா அவர்கள் எடுத்துக்காட்டினார்.

"தென்கொரியாவில் காணப்படும் சவால்கள், இக்காலத்தில் எந்தவொரு நாட்டிலும் எழக்கூடிய பிரச்சினைகளைப் பிரதிபலிக்கின்றன," என்று கூறிய போதகர் பெரேரா அவர்கள், உலகளாவிய கிறிஸ்தவத் தலைவர்கள் ஒன்றிணைந்து, வழிபாட்டுச் சுதந்திரத்திற்காகவும் சட்டத்தின் கீழ் நியாயமான நடத்தைக்காகவும் வாதிடுவதற்கு இந்த நிலைமை ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று வலியுறுத்தினார்.

இந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து, வருகை தந்த மதத்தலைவர்களிடமிருந்து நேர்மறையான ஈடுபாடு கிடைத்ததாக நிகழ்வு அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தொடர் பின்னூட்டல் கூட்டங்களும் உள்ளூர் ஆய்வுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன.