ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) விபுல் மிஸ்ரா செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் பொறியியல் மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், Air India, Vistara, IndiGo, SpiceJet, Kingfisher Airlines மற்றும் Air Deccan உள்ளிட்ட முன்னணி வர்த்தக விமான சேவை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ரா இன்று புதன்கிழமை (9) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப் பொறியியல் மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள விபுல் மிஸ்ரா, இந்தியாவின் முன்னணி வர்த்தக விமான நிறுவனங்களான Air India, Vistara, IndiGo, SpiceJet, Kingfisher Airlines மற்றும் Air Deccan ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மரபு முறை விமான நிறுவனங்கள், முழுமையான சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் என பல்வேறு வகையான விமான சேவை நிறுவனங்களில் அவர் பெற்றுள்ள பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுபவம், இடைக்கால பதவிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு வலுவான தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயல்திறனை மேம்படுத்தி, நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரது அனுபவம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.