தெஹிவளையில் Be Dapper ஆண்கள் நாகரீக ஆடை விற்பனை நிலையம் மீண்டும் திறப்பு

Be Dapper, Dehiwala’s leading men’s fashion store, reopens with a modern, two-level shopping experience. Explore premium urban menswear, shoes, and accessories featuring global brands like Davido London and Verge Milan.

தெஹிவளையில் Be Dapper ஆண்கள் நாகரீக ஆடை விற்பனை நிலையம் மீண்டும் திறப்பு

தனித்துவமான கலாசார அடையாளத்திற்கும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச வர்த்தகநாமங்களுக்கும் பெயர் பெற்ற ஆண்கள் நவநாகரீகமான ஆடைவகைகளுக்கான விற்பனை நிலையமான Be Dapper, பாரிய விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு தெஹிவளையில் புதுப்பிக்கப்பட்ட தனதுவிற்பனை நிலையத்தை அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறந்துள்ளது. 

இந்த மாற்றமானது,தெஹிவளை பகுதியில் உள்ள அதிகபட்ச அளவிலான ஆண்கள் நவநாகரீக தெரிவுகளைக்கொண்ட இடமாக இந்த விற்பனை நிலையத்தை உருவாக்கிய நிலையில், வர்த்தகநாமத்தின் வளர்ச்சியில் முக்கியமான ஒரு கட்டத்தை குறிக்கிறது.

புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த விற்பனை நிலையமானது, இரு மாடிகளைக் கொண்ட விற்பனை அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆடை, காலணி மற்றும் அணிகலன்களின் விரிவான தொகுப்பு வழங்கப்படுவதுடன், மேலும் முழுமையானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான ஒரு சிறந்த ஷொப்பிங் அனுபவமும் கிடைக்கிறது.

புதிய தரைத் தள அனுபவம் 

தரைத் தளமானது Be Dapper நிறுவனத்தின் தனித்துவமான சாதாரண, சௌகரியமான மற்றும் கலாசார அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் நவீன நகர்ப்புற நாகரீகத்தை பிரதிபலிக்கும் சாதாரண, சௌகரியமான ஆடைகள், காலணிகள் மற்றும் தனித்துவமான அணிகலன்கள் உள்ளிட்ட விரிவான சமகால ஆண்கள் ஃபாஷன் வகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சௌகரியம், தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை மதிக்கும் ஆண்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தளமானது அன்றாடநாகரீகத்தில் வர்த்தகநாமத்தின் முக்கிய அடையாளத்தை முன்னிலைப்படுத்துகிறது.

முதற்தர ஷேர்ட் வர்த்தகநாமங்களுக்கான தனிப்பிரிவு

மறுசீரமைக்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்தின் முதல் தளமானது முழுவதும் முதற்தர ஆண்களுக்கான ஷேர்ட்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் Davido London மற்றும் Verge Milan போன்ற சர்வதேச வர்த்தகநாமங்கள் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றன.

இந்த பிரிவானது தொழில்சார் நிகழ்வுகளுக்கும் நேர்த்தியான சாதாரணதர சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமான உயர்தர ஷேர்ட் வகைகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு நுட்பமான மற்றும் தரமான ஷொப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.

Be Dapper உருவான பயணம்

Be Dapperஉருவான கதையானது, சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதன் ஸ்தாபகர்களால் தொடங்கப்பட்ட Jaya Apparels (Pvt) Ltd. என்றஷேர்ட் உற்பத்தி நிறுவனத்தின் உருவாக்கத்துடன் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில், அதிகமாக மீதமிருந்த கையிருப்பு பொருட்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சிகள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

நடைமுறை தீர்வாக தொடங்கிய இந்த முயற்சியானது, காலப்போக்கில் சில்லறை வர்த்தகமாக வளர்ச்சியடைந்தது. முதலில் Warehouse Club என்ற பெயரில்இணையத்தில் அறிமுகமான இந்த வர்த்தகநாமமானது, பின்னர் MOFO என மறுபெயரிட்டு, இறுதியில் Be Dapper ஆக வளர்ச்சி பெற்று, சாதாரண சௌகரியமான ஆடைகள், கலாசார மற்றும் முதற்தர ஆண்கள் நாகரீக ஆடைகள் உள்ளிட்ட முழுமையான ஆண்கள் ஆடைகள் தொகுதியாக விரிவடைந்தது.

“ஆண்கள் தம்முடைய நேர்த்தியான தோற்றத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கு உதவுவதே Be Dapper இன் பிரதான நோக்கமாகும் ,” என்று Be Dapper நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் Infinite Business Ventures நிறுவனத்தின்முகாமைத்துவப்பணிப்பாளரான இப்ஸால்இக்பால் தெரிவித்தார்.

“இந்த மறுசீரமைப்பானது , விற்பனை அனுபவத்தை மேலும் உயர்த்துவதோடு, கலாசாரத்தையும் சர்வதேச முதற்தர நாகரீகத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர எமக்கு வாய்ப்பளிக்கிறது.”


Be Dapper, இலங்கை முழுவதும் பல வாழ்க்கைமுறை மற்றும் சில்லறை வர்த்தகநாமங்களை நிர்வகிக்கும் Infinite Business Ventures (IBV) குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதில் வேகமாக வளர்ந்து வரும் நாகரீக ஆடைகளுக்கான வர்த்தகநாமமான Be Desiயும் அடங்கும்.

எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள்

Be Dapper தனது விரிவாக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெள்ளவத்தை Plaza Mall இல் தனது இரண்டாவது கிளையைத் திறக்கத் தயாராகிறது. விரிவுபடுத்தப்பட்டவிற்பனை நிலைய அமைப்பு மேலும் பரந்த தயாரிப்பு தொகுதிகள் மூலம், நவீன ஆண்கள் நாகரீக ஆடைகளுக்கான முக்கிய இடமாக Be Dapper தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.