இலங்கையில் விளைவிக்கப்பட்ட 100% உள்ளூர் சோளத்தில் Nutriline Corn Flakes அறிமுகம்

100% உள்ளூர் இலங்கைச் சோளத்தில் தயாரிக்கப்பட்ட Nutriline Corn Flakes-ஐ CBL குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதுடன் ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவையும் வழங்குகிறது.

இலங்கையில் விளைவிக்கப்பட்ட 100% உள்ளூர் சோளத்தில் Nutriline Corn Flakes அறிமுகம்

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சோளத்தின் நன்மைகளை காலை உணவு மேசைகளுக்குக் கொண்டு வரும் Nutriline


உள்நாட்டு மூலப்பொருட்களுக்கு பெறுமதி சேர்ப்பை வலுப்படுத்தி, உணவு உற்பத்தித் துறையையும் நுகர்வோரின் தேவைகளையும் இணைக்கிறது


CBL குழுமத்தின் முழுமையான உரிமையைக் கொண்ட துணை நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் முன்னணி காலை உணவு ஊட்டச்சத்து வர்த்தக நாமமான Nutriline, தனது காலை உணவுத் தானிய வகைகளின் புதிய தயாரிப்பான Nutriline Corn Flakes ஐ இன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நூறுவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சோளத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தயாரிப்பானது, உள்நாட்டு விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, நுகர்வோருக்குப் பெறுமதியை உருவாக்கும் உணவு உற்பத்தி வணிகங்களைக் கட்டியெழுப்புவதில் குழுமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.


“மக்கள் மற்றும் சமூகத்தின் வாழ்வில் எப்பொழுதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதையே CBL குழுமம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் அனைவரினது வீட்டையும் சென்றடைகின்றன. எனினும், எமது வணிகத்தின் தாக்கம் அதற்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. எமது உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பயிரிடும் விவசாயிகளை ‘கொவி பவுல்’ (விவசாயக் குடும்பம்) போன்ற திட்டங்கள் வலுப்படுத்துகின்றன.

விவசாயிகள் மற்றும் விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள 21,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை இத்திட்டம் சென்றடைகிறது. Nutriline Corn Flakes அறிமுகமும் இதே சிந்தனையின் மற்றுமொரு வெளிப்பாடாகும். நூறுவீதம் உள்நாட்டில் பெறப்பட்ட சோளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உள்நாட்டு விவசாய உற்பத்தியையும் அன்றாட நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் உற்பத்தியையும் நாம் ஒன்றிணைக்கின்றோம்” என CBL Food Cluster இன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுள தஹநாயக்க தெரிவித்தார்.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Nutriline Corn Flakes இல் மேலதிக நிறமூட்டிகளோ சுவையூட்டிகளோ சேர்க்கப்படவில்லை. அதிக இரும்புச்சத்தைக் கொண்டுள்ள இவ்வுற்பத்தி, புரதச்சத்திற்கான மூலமாகவும் விளங்குவதுடன், 10 அத்தியாவசிய வைட்டமின்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய பொதியிடல் அளவுகளில், நுகர்வோருக்கு ஏற்ற விலையில் இவ்வுற்பத்தி சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றது.


“குறிப்பாக பாடசாலை, தொழில் மற்றும் ஏனைய காலை நேரப் பொறுப்புகளுக்கு இடையில் நேரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டிய குடும்பங்களின் அவசரமான காலை நேர வாழ்க்கை முறையினால், இலங்கை நுகர்வோரின் காலை உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறான ஆரோக்கியமான, போஷாக்குமிக்க உணவுத் தெரிவுகளை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். 


அதேவேளை, உள்ளூர் ரீதியிலும் பெறுமதியை உருவாக்கும் வகையில் இத்தேவைகளுக்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்புகள் வணிக நிறுவனங்களுக்கு உள்ளன. சில நொடிகளில் தயாரிக்கக்கூடிய Nutriline Corn Flakes, அவசரமான காலை நேரங்களில் இலகுவான காலை உணவுத் தெரிவாக அமைகின்றது” என CBL Food Cluster இன் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சச்சி பெர்னாண்டோ தெரிவித்தார்.


CBL குழுமம் பற்றி


1968ஆம் ஆண்டு நிறுவப்பட்ட CBL குழுமம், இலங்கையின் முன்னணி உணவு உற்பத்திக் குழுமங்களில் ஒன்றாகும். பிஸ்கட், சொக்லேட், இனிப்புப் பண்டங்கள், காலை உணவு தானியங்கள், உடனடி உணவுகள், தேங்காயை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பிரிவுகளில் இக்குழுமம் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், பல நுகர்வோர் வர்த்தகநாமங்களையும் கொண்டுள்ளது. Munchee, Ritzbury, Revello, Tiara, Samaposha, Nutriline, Lanka Soy மற்றும் Sera ஆகியவை அதன் முக்கிய வர்த்தகநாமங்களாகும்.