தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுகள்

இலங்கையில் LankaQR அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் 6,000 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தகுதியான பரிவர்த்தனைகள் தானாகவே குலுக்கலில் சேர்க்கப்படும்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுகள்

ஒரு வெற்றியாளருக்கு ரூ. ஒரு மில்லியன் வரை வாராந்த மற்றும் மாதாந்தப் பரிசுகள்


தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம், தனது ‘அதிர்ஷ்டக் குலுக்கலை’ விரைவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இதற்கான முதற்கட்ட குலுக்கல்கள் எதிர்வரும் 2026 அக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.


எந்தவித முன்பதிவும் அவசியமில்லாத இந்த நாடளாவிய குலுக்கல் முறையானது, வாடிக்கையாளர்களும் வணிகர்களும் அன்றாடப் பரிவர்த்தனைகளில் LankaQR கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, அதற்குப் பரிசளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 2027 பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் LankaQR கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இக்குலுக்கல்களுக்கு தகுதி பெறும். 2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் LankaQR-ஐப் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் வணிகரும் தாமாகவே குலுக்கலுக்குத் தகுதி பெறுவதால், இதற்கென தனியாக பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை.


பங்கேற்பாளர்கள் அனைவரும் பின்வரும் இரு வகையான ரொக்கப் பணப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொள்வார்கள்: 


● ரூ. 5,000 வாராந்தக் குலுக்கல் (வாரந்தோறும் 250 வெற்றியாளர்கள்).

● மாதாந்தப் பெரும் குலுக்கல்: ரூ. 1,000,000 (இரு வெற்றியாளர்கள்); ரூ. 500,000 (இரு வெற்றியாளர்கள்); ரூ. 250,000 (இரு வெற்றியாளர்கள்).


நடைபெறவுள்ள வாராந்தக் குலுக்கலில் 250 வெற்றியாளர்கள் (125 வணிகர்கள் மற்றும் 125 வாடிக்கையாளர்கள்) தெரிவு செய்யப்படுவர்.

மாதாந்தப் பெரும் குலுக்கலில் ஆறு வெற்றியாளர்கள் (மூன்று வணிகர்கள் மற்றும் மூன்று வாடிக்கையாளர்கள்) தெரிவு செய்யப்படுவர். ஆறு மாத காலத்திற்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 51,000,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தகுதியான LankaQR பரிவர்த்தனையும் (P2M - வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் மற்றும் P2P - தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டும் தகுதி பெறும்) இரு தரப்பினருக்குமே இவ்விரு குலுக்கல்களிலும் பங்குபற்றும் வாய்ப்பை வழங்கும்.


குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கான நான்கு வாராந்தக் குலுக்கல்களும் மாதாந்தக் குலுக்கலும் அதற்கு அடுத்த மாதத்தில் நடத்தப்படும். இதற்கமைய, செப்டம்பர் மாதத்தை உள்ளடக்கிய நான்கு வாராந்தக் குலுக்கல்களும் மாதாந்தப் பெரும் குலுக்கலும் அக்டோபர் 27ஆம் திகதி நடத்தப்படும் பங்குபற்றும் வங்கிகள் மற்றும் LankaPay வழங்கும் பரிவர்த்தனைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, GovTech வின் பங்களிப்புடன் இக்குலுக்கல் நடத்தப்படுகிறது.


முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணும் நோக்கில், நியமிக்கப்பட்ட குலுக்கல் மேற்பார்வைக் குழுவொன்று ஒவ்வொரு குலுக்கல்களையும் கண்காணிக்கும். இக்குழுவில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,
இலங்கை மத்திய வங்கி, மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒருவராவது கட்டாயம் அங்கம் வகிப்பர் வெளிப்படைத்தன்மையைப் பேணும் நோக்கில், குலுக்கல் முடிவடைந்த இரண்டு வாரங்களுக்குள் வெற்றியாளர்கள் தொடர்பான விபரங்கள் அந்தந்த வங்கிகளினாலும், பரிசுத்தொகை விநியோகம் தொடர்பான விபரங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech ஆகியவற்றினாலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்

LANKAQR பற்றி


LANKAQR இன் அதிநவீன QR தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் இலகுவாக பணப்பரிவர்த்தனைகளை முன்னெடுக்க வழிவகுக்கிறது. QR ஸ்டிக்கர்கள் (Stickers) அல்லது கையடக்க /POS முனையங்கள் மூலம் கையடக்கத் தொலைபேசி களைப் (ஸ்மார்ட்போன்களைப் ) பயன்படுத்திப் பாதுகாப்பாகவும் துரிதமாகவும் கொடுப்பனவுகளைச் செலுத்த முடிகிறது. சர்வதேச உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளுடன், LANKAQR ஆனது நிதி நிறுவனங்களுக்கு தங்களின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை மேம்படுத்தவும் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. விசேடமாக, இக்குலுக்கல் ஊக்குவிப்புத் திட்டக் காலத்தில் ரூபா 5,000 இற்குக் குறைவான அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மற்றும் வணிகர் கட்டணங்கள் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளன.


GovTech பற்றி

GovTech Sri Lanka (Pvt.) Ltd. ஆனது இலங்கை அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தை முன்னெடுக்கும் முதன்மை நிறுவனமாகும். இது இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடிப்படை டிஜிட்டல் பொதுக் உட்கட்டமைப்புகள் (Digital Public
Infrastructure - DPI), தகவல் தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் நசேவைகளை வழங்கி வருகிறது.

அனைத்துப் பிரஜைகளுக்கும் பொதுச் சேவைகளை எளிமையானதாகவும், வேகமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும்அரச சேவைகளை அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலமும், வணிகங்களுக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், மக்கள் மற்றும் நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் , டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட அனைவருக்குமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் GovTech அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.