ProFood ProPack மற்றும் AgBiz 2026 கண்காட்சியில் தனது முழுமையான தயாரிப்பு வரிசையை காட்சிப்படுத்திய New Anthoney’s Farms
ஆகஸ்ட் 21 முதல் 23 வரை BMICH இல் நடைபெற்ற ProFood ProPack மற்றும் AgBiz 2026 கண்காட்சியில் New Anthoney’s Farms நிறுவனம் தனது முழுமையான கோழி மற்றும் இறைச்சி தயாரிப்பு வரிசையை வெற்றிகரமாக காட்சிப்படுத்தியது. தனது 40ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிறுவனம், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாத கோழி இறைச்சி உற்பத்தி, தரநிலைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, HarithaHari மற்றும் Crizzpys வர்த்தகநாமங்கள், Chicken Havens HORECA தயாரிப்பு வரிசை மற்றும் Meatlery விற்பனை வலையமைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது.
நியூ அன்டனிஸ் பார்ம்ஸ் [New Anthoney's Farms], மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகப்பெரிய உணவு பதனிடல் மற்றும் பொதியிடல் மற்றும் விவசாயக் கண்காட்சியான ProFood ProPack மற்றும் AgBiz 2026 இல் தனது இடத்தைப் பிடித்தது, இந்த ProFood ProPack மற்றும் AgBiz 2026 கண்காட்சியானது ஆகஸ்ட் 21 முதல் 23 வரை BMICH இல் நடைபெற்றது.
D20, D21, D34 மற்றும் D35 ஆகிய அரங்குகளில் விரிந்திருந்த நிறுவனத்தின் கண்காட்சி கூடங்கள், கண்காட்சியில் ஏற்கனவே தொடர்ச்சியான அங்கீகாரங்களைப் பெற்றுள்ள நிலையில் அதன் பங்கேற்பைத் தொடர்ந்தது, இதில் 2023 இல் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் சிறந்த கண்காட்சிக் கூடம் மற்றும் 2024, Agri Biz இல் சிறந்த கண்காட்சிக்கூடம், ஆகிய விருதுகளும் அடங்கும்.
கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களைக் கவர்ந்த விஷயம் மிகவும் எளிமையானதாகும் : இந்த நிகழ்விற்காக நியூ அன்டனிஸ் நிறுவனம் தயாரித்திருந்த உணவுகளைச் சுவைப்பது, மற்றும் ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகத் தன் நற்பெயரைக் கட்டியெழுப்பிய ஒரு வர்த்தகநாமத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்புகளை நேரில் காண்பதுமே ஆகும். , குஞ்சு பொரிப்பகம் முதல் சமையலறை வரை ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாகப் பரிசோதிக்கப்பட்டு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் இன்றி கோழிகள் வளர்க்கப்படுவதே இந்நிறுவனத்தின் கொள்கையும் சிறப்பம்சமும் ஆகும்.
இதனுடன், மே 9 அன்று இலங்கையின் முதலாவது ‘மாஸ்டர்செஃப்’ (MasterChef) வெற்றியாளராக மகுடம் சூடிய ஹசலகவைச் சேர்ந்த சஞ்சுல மனோஜ் வழங்கிய சமையல் கலையரங்கம் இந்த நிகழ்வின் சுவாரசியத்தை மேலும் அதிகரித்தது.
ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில், அவர் அந்த சமையல் அரங்கில் ஹரிதஹரி (HarithaHari) மற்றும் கிரிஸ்ப்பிஸ் (Crizzpys) கோழி இறைச்சியைக் கொண்டு சமைத்துக் காட்டினார். இலங்கையின் முதலாவது உள்ளூர் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ கோழி இறைச்சி வழங்குநராக நியூஅன்டனிஸ் (New Anthoney's) நிறுவனம் வகிக்கும் பங்கிற்கு மதிப்பளிக்கும் விதமாக இது அமைந்திருந்தது.
நிறுவனத்தின் கண்காட்சிக்கூடத்தின் சொந்த கிரிஸ்ப்பீஸ் (Crizzpys) ஊக்குவிப்பு பிரசாரம் சமூக ஊடகங்களில் இதற்கு இணையாக நடைபெற்றது. இது அந்த வர்த்தகநாமத்தின் உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடிய உறைவிக்கப்பட்ட மொறுமொறுப்பான கோழி இறைச்சி தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.மூன்று வெற்றியாளர்களுக்கு, முதல் சீசன் இறுதிப் போட்டியாளருடன் இணைந்து மாஸ்டர்ஷெப் ஸ்ரீலங்கா (MasterChef Sri Lanka)
சமையலறைக்குள் நுழைந்து, தங்களது சொந்த 'கிரிஸ்பிஸ்' (Crizzpys) உத்வேகத்தால் ஆன சமையல் குறிப்பை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நியூ அன்டனிஸின் தயாரிப்புகள் FSSC 22000, ISO 22000, HACCP மற்றும் GMP தரச்சான்றுகளை பூர்த்தி செய்வதுடன் இந்நிறுவனமானது சர்வதேச ஹலால் (Halal) சான்றிதழைக் கொண்டுள்ளது, மேலும் நெதர்லாந்தின் கண்ட்ரோல் யூனியனால் (Control Union Netherlands) சான்றளிக்கப்பட்ட ISO 14064-1:2018 இன் கீழ் பசுமை இல்ல வாயு (GHG) சரிபார்ப்பு அறிக்கையைக் கொண்டுள்ளது. இது அந்த சுற்றுச்சூழல் நற்சான்றிதழைப் பெற்ற நாட்டின் ஒரே கோழிப்பண்ணை நிறுவனமாகும். ஹரிதஹரி (HarithaHari) மற்றும் கிரிஸ்பிஸ் (Crizzpys) ஆகியவற்றுடன், இந்நிறுவனத்தின் தயாரிப்புப் பட்டியலில் தொழில்முறை சமையலறைகளுக்கான சிக்கன் ஹேவன்ஸ் HORECA (Chicken Havens HORECA) வரிசையும், ஆடம்பர இறைச்சி சில்லறை விற்பனை நிலையங்களின் மீட்லரி (Meatlery) சங்கிலியும் அடங்கும்.
நியூ அன்டனிஸ் நிறுவனம் 1986 இல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இந்நிறுவனம் தனது 40வது ஆண்டைக் கொண்டாடுகிறது. தொழில்துறையில் தொடர்ந்து பெற்று வரும் பல விருதுகள், உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களில் மிகச் சிலரே பெற்றிருக்கக்கூடிய சான்றிதழ்கள் மற்றும் புரோஃபுட் புரோபேக் (ProFood ProPack) கண்காட்சியில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அதன் கண்காட்சிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு இடையே, இந்த ஆண்டின் கண்காட்சி இந்நிறுவனம் அடுத்து எதை நோக்கிச் செல்லப் போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்தது.
editor