இலங்கையின் முன்னணி உணவுத்துறை கண்காட்சி ‘ProFood ProPack & AgBiz 2026’ ஓகஸ்ட் 21–23 வரை BMICH இல்
இலங்கையின் முன்னணி உணவு, பொதியிடல் மற்றும் விவசாயத்துறை கண்காட்சியான ‘ProFood ProPack & AgBiz 2026’ ஓகஸ்ட் 21–23 வரை BMICH இல் நடைபெறவுள்ளது.
உணவு பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயத் துறை தொடர்பான இலங்கையின் முதன்மையான கண்காட்சியான ProFood ProPack & AgBiz 2026, எதிர்வரும் ஓகஸ்ட் 21 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மீண்டும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியானது அறிவுப் பகிர்வு, புத்தாக்கம் மற்றும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான இத்துறையிலுள்ள தலைவர்கள், புத்தாக்க
கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைக்கவுள்ளது.
இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கம் (Sri Lanka Food Processors Association - SLFPA) ஆனது, தொழில்முறை கண்காட்சி ஏற்பாட்டாளரான Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த 3 நாள் கண்காட்சியில் 30,000 இற்கும் மேற்பட்ட வணிக மற்றும் நுகர்வோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, 6 கண்காட்சி மண்டபங்களில் 450 இற்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் சீனா, இந்தியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளமை பிராந்தியத்தின் முன்னணி தொழில் துறைத் தளங்களில் ஒன்றாக இதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
நுகர்வோர் - வணிகம் (B2C) மற்றும் வணிகம் - வணிகம் இடையிலான (B2B) பங்கேற்பாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ProFood ProPack & AgBiz 2026, பொதியிடல் நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்துவோர், விநியோகஸ்தர்கள், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து, தொடர்புகளை ஏற்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், வணிக வளர்ச்சிக்குமான மதிப்புமிக்க வாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாண்டின் பதிப்பின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த SLFPA இன் தலைவர் அருண சேனாநாயக்க, “எமது துறையின் முதுகெலும்பாகத் திகழும் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவு பதப்படுத்துவோருக்கு ஆதரவளிப்பதற்கு நாம் உறுதியுடன் உள்ளோம். தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SME கூடம், முந்தைய வருடங்களில் கணிசமான எண்ணிக்கையிலான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை ஈர்த்துள்ளதுடன், இந்த பிரம்மாண்டமான நிகழ்வுக்காக பல சிறிய மற்றும் நடுத்தர கண்காட்சியாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து மகத்தான ஆதரவை வழங்கியுள்ளது. இக்கண்காட்சி சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு தங்களது புத்தாக்கமான கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவும், சந்தை வாய்ப்புகளைப் பெறவும், இறுதி நுகர்வோரிடமிருந்து மதிப்புமிக்க கருத்துக்களைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.” என்றார்.
வளர்ந்து வரும் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தமது புத்தாக்கமான தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களை தொழில்துறை நிபுணர்கள், முதலீட்டாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் சாத்தியமான வணிகப் பங்காளிகளுக்குக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேகமான தளமாக SME அரங்கு செயற்படும். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஆதரவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரங்கமானது, சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு அதிகளவான சந்தை அணுகல் மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் அவர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகுதியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் கண்காட்சி கூடத்திற்கான கட்டணத்தில் அரைவாசியை மாத்திரம் செலுத்தி இதில் பங்கேற்க முடியும். இது தமக்கான பங்குதாரர்களுடன் இணையவும் நிலைபேறான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளைப் பெறவும் அவர்களுக்கு உதவுகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள ‘Knowledge Hub’ (அறிவு மையம்) பகுதியை பார்வையாளர்கள் அணுகி தகவல்களை பெற முடியும், இங்கு தொழில்நுட்பம் மற்றும் தற்போதைய தொழில்துறை முன்னேற்றங்கள், புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த அமர்வுகளை நிபுணர்கள் முன்னெடுப்பார்கள். இந்த அமர்வுகளுக்கு மேலதிகமாக, தொழில்துறை ஆதரவு சேவைகள் (Industry Support Services) வலயத்தில் தர உத்தரவாதம், தயாரிப்பு சோதனை, உணவுப் பாதுகாப்பு, சான்றிதழ்கள் மற்றும் ஒழுங்குமுறைக்கான இணக்கங்கள் குறித்த வழிகாட்டல்களை ஆய்வகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிறுவகங்கள் வழங்கும்.
இம்முறை பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல ஈர்க்கக்கூடிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுச் சமையல் சவால் (Home Cooking Challenge) போட்டியில், கண்காட்சியில் பங்கேற்கும் வர்த்தகநாமங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தி புத்தாக்கமான உணவுகளை தயாரிப்பதற்கான வாய்ப்பை வீட்டு சமையல் கலைஞர்கள் பெறுவார்கள். இது சமையல் திறனை பாராட்டும் அதே வேளையில் பங்கேற்கும் வர்த்தகநாமங்களின் பல்வகைமைத் தன்மையையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாக அமையும்.
தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ProFood ProPack & AgBiz 2026 ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர்களான நதிஷான் குருகே மற்றும் சமீர ஜயதிலக, “ஒட்டுமொத்த உணவு பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயம் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் வணிக வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய தளமாக ProFood ProPack & AgBiz கண்காட்சி வளர்ந்துள்ளது. இவ்வாண்டின் பதிப்பானது சர்வதேச பங்கேற்பை விரிவுபடுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தல் மற்றும் வணிக தொடக்கங்கள் (startups), சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் தங்களுக்கான சாத்தியமான பங்காளர்கள்
மற்றும் நுகர்வோருடன் இணைவதற்கான பிரத்தியேக தளங்களை வழங்குவதன் மூலம் இந்த அனுபவத்தை மேலும் அதிகரிக்கும். இக்கண்காட்சியானது இலங்கையின் உணவு மற்றும் விவசாயத் துறைகளின் வளர்ச்சிக்கும் போட்டித்தன்மைக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, அறிவுப் பகிர்வு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வழிகளைத் ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும் என நாம் நம்புகிறோம்” என தெரிவித்தனர்.
முன்னணி தொழில்துறை பங்காளிகளின் ஆதரவுடன் ProFood ProPack & AgBiz 2026 கண்காட்சியின் வெற்றி மேலும் வலுப்பெற்றுள்ளது. இக்ண்காட்சிக்கு பிளாட்டினம் அனுசரணையாளர்களாக Cargills Ceylon PLC, Multivac Laraon India (Pvt) Ltd, Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Nikini Automation Systems, Pakona Engineers India (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. அத்துடன், கோல்ட் அனுசரணையாளர்களாக Aussee Oats Milling (Pvt) Ltd, Freelan Enterprises (Pvt) Ltd, Nestlé Lanka Ltd ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிப்பதோடு, Akhtari Traders (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Country Style Foods (Pvt) Ltd, CMC Engineering Export GmbH, Norfolk Foods (Pvt) Ltd, FMJ Holdings, FPT Food Process Technology Co. Ltd, Hayleys Agriculture Holdings Limited, Goma Process Technologies (Pvt) Ltd, Lablink (Pvt) Ltd, Pro Tec Global (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Nelna Agri Development (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Zellers - Maliban Biscuit Manufactories (Pvt) Ltd உள்ளிட்ட மதிப்புமிக்க சில்வர் அனுசரணையாளர்களும் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
பரந்த சர்வதேச பங்கேற்பு, விரிவான காட்சிப்படுத்தல் மற்றும் அறிவு சார்ந்த திட்டங்களுடன், ProFood ProPack & AgBiz 2026 கண்காட்சியானது உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாய புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான வளர்ந்து வரும் மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதோடு, நிலைபேறான தொழில்துறை வளர்ச்சி, முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கவுள்ளது.
editor