ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணியிடங்களை அங்கீகரிக்கும் SLCHPA 2026 விருதுகள் அறிமுகம்

பணியாளர் நல்வாழ்வு, பணியிட ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் Sri Lankan Corporate Health & Productivity Awards (SLCHPA) 2026 விருதுகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. COYLE அமைப்பின் ஏற்பாட்டில், JETRO மற்றும் சம்பத் வங்கி பிஎல்சியின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த விருதுகள், ஆரோக்கியமான, ஈடுபாடுள்ள மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான பணியிடங்களை உருவாக்கும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன.

ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணியிடங்களை அங்கீகரிக்கும் SLCHPA 2026 விருதுகள் அறிமுகம்

இலங்கை முழுவதும் பணியாளர் நல்வாழ்வு, பணியிட ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ள நிறுவனங்களை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க தளமான Sri Lankan Corporate Health & Productivity Awards (SLCHPA) 2026 விருதுகள் அறிவிப்பு இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்த அறிவிப்பு, நிறுவன வெற்றியின் மையத்தில் தங்கள் ஊழியர்களை இடம்பெறச் செய்வதற்கு வணிகங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு
முயற்சியின் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இலங்கை தொழில்முனைவோர் சம்மேளனத்தின் (Chamber of Lankan Entrepreneurs - COYLE) ஏற்பாட்டில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization - JETRO) இணைந்து, சம்பத் வங்கி பிஎல்சியை தலைப்புப் பங்காளராகக் கொண்டு வழங்கப்படும் SLCHPA 2026 விருதுகள், நிலையான வணிக வளர்ச்சிக்கு அத்திவாரமாகத் தங்கள் ஊழியர்கள் மீது முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நிறுவனங்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் கூட்டாண்மை மூலம், பணியிட நலன் மற்றும் உற்பத்தித்திறன் குறித்த ஜப்பானிய நிபுணத்துவத்தையும் உலகளாவிய கண்ணோட்டங்களையும் JETRO கொண்டுவருகிறது. இது இலங்கை முழுவதும் சர்வதேச அளவில் பொருத்தமான பணியிட நடைமுறைகளை ஊக்குவிப்பதில் விருதுகளின் கவனத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

SLCHPA தொடக்கத்தில் இருந்தே, வெற்றிக்கான பாரம்பரிய அளவுகோல்களுக்கு அப்பால் உற்றுநோக்கவும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில் ஆரோக்கியமான, ஈடுபாடுள்ள பணியாளர்களின் பங்கை அங்கீகரிக்கவும் வணிகங்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள், நற்பலனை ஏற்படுத்தும் பணியிட முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், பணியாளர் நலன், பணியிடக் கலாச்சாரம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் தங்கள் அணுகுமுறையைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

இந்த வலுவான அத்திவாரத்தின் அடிப்படையில், SLCHPA 2026 நிகழ்வானது மேலும் பல நிறுவனங்களை அங்கீகரித்தல், பணியிடத்தில் மேற்கொள்ளப்படும் புதுமையான முன்னெடுப்புகளை வெளிப்படுத்துதல் மற்றும் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அதிக மதிப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் புதிய கவனத்துடன், முன்னெப்போதையும் விடப் பெரிய அளவிலும் சிறப்பாகவும் அமையும். வணிக நிறுவனங்கள் தங்கள் நடைமுறைகளை அளவீடு செய்யவும், தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெறவும், அத்துடன் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படக்கூடிய பணியிடங்களை உருவாக்குவதில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் இந்த விருதுகள் ஒரு வாய்ப்பை வழங்கும்.

மாறிவரும் வணிகச் சூழலில் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பணியிட ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதரவான பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம், நிறுவனங்கள் ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்தவும், பணியிட கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், திறமையான பணியாளர்களைத் தக்கவைக்கவும் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் முடியும். SLCHPA 2026 மூலம், மனித வளத்தில் முத லீடு செய்வது ஊழியர்கள் மற்றும் தொழில்தருநர்கள் என இரு தரப்பினருக்கும் எவ்வாறு அர்த்தமுள்ள மதிப்பை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.

இந்த நிகழ்வின் அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த COYLE-இன் தலைவர் சுரேன் சந்திரரத்ன. அவர்கள், “தங்கள் ஊழியர்களின் முக்கியத்துவத்தையும், ஊழியர்களின் நல்வாழ்வுக்கும் வணிக வெற்றிக்கும் இடையிலான தொடர்பையும் புரிந்துகொள்ளும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவே SLCHPA அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முன்னெடுப்பின் மூலம், ஆரோக்கியமான பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், இலங்கையின் வணிகச் சமூகத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தவும் அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

விருதுகள் நம்பகத்தன்மையைப் பேணுவதையும், உண்மையான பணியிடச் சிறப்பை அங்கீகரிப்பதையும் உறுதிசெய்யும் வகையில், SLCHPA 2026 மதிப்பீட்டுச் செயல்முறையானது ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான அணுகுமுறையைப் பின்பற்றும். நிறுவனங்கள் தங்களின் பணியிட முன்னெடுப்புகள், பணியாளர் நலவாழ்வுத் திட்டங்கள், உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளை முன்னிலைப்படுத்தி, பொருத்தமான பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் பங்கேற்கலாம். இந்தச் சமர்ப்பிப்புகள், நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.

பணியிட நடைமுறைகளில் அவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பின் அடிப்படையில், பிரிவுகள் வாரியாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். SLCHPA 2026 விருதுகளுக்கான விண்ணப்பங்களும் பதிவுகளும் விரைவில் தொடங்கவிருப்பதால், அனைத்து அளவுகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த மதிப்புமிக்க மேடையில் பங்கேற்க அழைக்கப்படுகின்றன. நிறுவனங்கள் தங்களின் சாதனைகளை வெளிப்படுத்தவும், தங்களின் பணியிட முன்னெடுப்புகளுக்கு அங்கீகாரம் பெறவும், இலங்கையில் ஆரோக்கியமான, அதிக உற்பத்தித்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான பணியிடங்களைக் கொண்டாடும் ஒரு தேசிய இயக்கத்தின் அங்கமாக மாறவும் ஊக்குவிக்கப்படுகின்றன.