கொழும்பில் Pepsi Street Kala 2.0 – இளம் படைப்பாற்றல், இசை மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் கொண்டாட்டம்

Pepsi Street Kala 2.0 brought together Sri Lanka’s art, music and culinary experiences at Colombo’s Excel World, creating a vibrant cultural celebration featuring local artists, live performances and interactive experiences.

கொழும்பில் Pepsi Street Kala 2.0 – இளம் படைப்பாற்றல், இசை மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் கொண்டாட்டம்

இலங்கையின் கலை, இசை மற்றும் சுவைகளை ஒரே மேடையில் கொண்டாடும் வகையில், Pepsi Street Kala தனது இரண்டாவது பதிப்பை 2026 ஜூலை 4 ஆம் திகதி கொழும்பு Excel World வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது. நாள் முழுவதும் இடம்பெற்ற இந் நிகழ்வு, இலங்கைக் கலாச்சாரத்தின் பல்வகை சிறப்புகளை உயிர்ப்புடன் கொண்டாடும் வண்ணமயமான அனுபவமாக அமைந்தது.

Pepsi®ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொது கலை முன்முயற்சி, ஆயிரக்கணக்கான மக்களை கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையின் கீழ் ஒன்றிணைத்தது. உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமம் என்பதையும் தாண்டி, உள்ளூர் அடையாளத்துடனும் கலாச்சாரத்துடனும் இணைந்த நம்பிக்கைக்குரிய பங்காளியாக Pepsi®, இளம் இலங்கையர்களின் விருப்பங்களையும் வாழ்க்கை முறையையும் இந்நிகழ்வூடாக பிரதிபலித்து அவர்களுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தியது.

“Pepsi®இல், மக்களை ஒன்றிணைக்கும் ஆர்வங்களைக் கொண்டாடுவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை
கொண்டுள்ளோம். மேலும் Pepsi Street Kala அந்த உணர்வின் பிரதிபலிப்பாகும். Pepsi Street Kala அதன் இரண்டாவது பதிப்புடன், உள்ளூர் படைப்பாற்றலை ஆதரித்து, சமூக இணைப்புகளை வளர்த்து, இலங்கையின் துணிச்சலான, துடிப்பான உணர்வைக் கொண்டாடும் ஒரு உயிரோட்டமான தளமாகத் தொடர்ந்து பரிணமித்து வருகிறது.” என்று PepsiCo நிறுவனத்தின் மேற்கு பிராந்தியம் மற்றும் இலங்கைக்கான பிரான்சைஸ் (Franchise) பிரிவின் தலைவரும் இணை பணிப்பாளருமான அன்ஷுமன் மிஷ்ரா தெரிவித்தார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, Academy of Design (AOD) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஓவியக்
கண்காட்சி அமைந்திருந்தது. இதில் வளர்ந்து வரும் உள்ளூர் கலைஞர்கள், Pepsi®ஐ மையமாகக் கொண்டு
உருவாக்கிய தங்களது தனித்துவமான படைப்புகளைப் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்த ஒத்துழைப்பு, புதிய திறமையாளர்களுக்கு பரந்த பார்வையாளர் வட்டத்தை அடைய உதவியதோடு, சர்வதேச வர்த்தகநாமமான Pepsi®ஐயும் இலங்கையின் வளர்ந்து வரும் கலை உலகையும் இணைக்கும் அர்த்தமுள்ள முயற்சியாக அமைந்தது. இதனுடன், நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த ஊடாடும் (Interactive) ஓவியத்தில், பங்கேற்பாளர்களும் தங்களது கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் வண்ணத் தூரிகையைப் பயன்படுத்தி பொதுவான canvasஇல் தங்களது படைப்பாற்றலைச் சேர்த்தனர். நாள் முழுவதும் பலரின் பங்களிப்புடன் அக் கலைப்படைப்பு தொடர்ந்து விரிவடைந்து, அனைவரையும் இணைத்த படைப்பாற்றலின் சின்னமாக மாறியது.

மேடையில், இலங்கையின் பிரபல இசைக்குழுவான Knights உடன் வஸ்தி, நிலான் ஹெட்டியாராச்சி, ரவீன் தாருக, தினேஷ் மற்றும் கைசர் மற்றும் ஹனா ஷஃபா ஆகியோரின் உற்சாகமூட்டும் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவர்களின் நிகழ்ச்சிகள், இலங்கை இசையின் பல்வகைத் தன்மையையும் துடிப்பையும் விழாவின் மையமாக மாற்றின.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டதுடன், பல உணவுக் கூடங்களில் வழங்கப்பட்ட உள்ளூர் சுவைமிக்க உணவுகளையும் இரசித்தனர். அவற்றுடன் குளிர்ச்சியான Pepsi அருந்திய அனுபவம் மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இதனுடன், Pepsi®ஐ அடிப்படையாகக் கொண்ட புத்துணர்ச்சி தரும் மொக்டெயில்களை (Mocktails) வழங்க அமைக்கப்பட்ட சிறப்பு மொக்டெயில் பார் (Mocktail Bar) பங்கேற்பாளர்களுக்கு புதிய சுவை அனுபவத்தையும் வழங்கியது. இவ்வனைத்தும் அனைவரும் இணைந்து மகிழக்கூடிய அனுபவத்தை உருவாக்கியத்துடன், இளைஞர்களுடன் இன்னும் ஆழமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

நகரம் முழுவதும் திறந்தவெளிக் கலைக் கண்காட்சியாகத் தொடங்கிய இந்த முயற்சி, இன்று இலங்கையின் படைப்பாற்றலை பல்வேறு பரிமாணங்களில் கொண்டாடும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாக வளர்ச்சியடைந்துள்ளது. 

வளர்ந்து வரும் கலைஞர்கள், நேரடி இசை நிகழ்ச்சிகள், சுவைமிக்க உணவுகள் மற்றும் அனைவரும் பங்கேற்று மகிழக்கூடிய ஊடாடும் அனுபவங்கள் ஆகியவற்றை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது திகழ்கிறது. என்று Varun Beverages (VBL) நிறுவனத்தின் நாட்டுத் தலைவரான அமித் ஜோஷி தெரிவித்தார்.

உள்ளூர் கலாச்சாரத்துடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்கி, சமூகங்களுடன் நெருக்கமாக இணைவதற்காக Pepsi® மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந் நிகழ்வு மேலும் வலுப்படுத்தியது. இதன் மூலம், பங்கேற்பாளர்கள் தாங்கள் மதிக்கப்படுகிறோம், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுடன் விழாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்ததோடு, Pepsi® உள்ளூர் சமூகங்களுடன் கட்டியெழுப்பி வரும் வலுவான உறவையும் பாராட்டினர்.