2026ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாக SLICGL
Sri Lanka Insurance Corporation General Ltd. (SLICGL) has been recognised as Sri Lanka's Most Loved General Insurance Brand for 2026, reaffirming its leadership, customer trust, and excellence in the country's general insurance sector.
பொதுக் காப்புறுதித் துறையில் தேசத்தின் நம்பிக்கையை வென்ற ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் 2026ஆம் ஆண்டில் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் முதர்தல பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தினால் வழங்கப்படும் The Voice of Business என்ற பெருமைக்குரிய விருதுகளில் கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த அங்கீகாரமானது SLICGL நிறுவனம் மீது வாடிக்கையாளர் கொண்டிருக்கும் ஆளமான நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் நீடித்திருக்கும் நட்புறவு என்பவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. சிறந்த சேவை, புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள உயிர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதில் காணப்படும் நம்பிக்கைத்தன்மை என்பவற்றின்பால் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் சாட்சியாகவும் இந்த விருது காணப்படுகின்றது.
காப்புறுதித் துறையின் முதல்வன் என்ற தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ள SLICGL நிறுவனம், உயிர்களைப் பாதுகாப்பது, சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் நாடு முழுவதிலும் நம்பகமான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவது போன்ற தனது பணிகளை உறுதியுடன் தொடர்ந்து வருகின்றது. அத்துடன், இந்தச் சாதனையை அடைவதில்
பணியாளர்கள், விற்பனைக் குழுக்கள் மற்றும் வணிகப் பங்காளரின் அர்ப்பணிப்பான சேவையும் முக்கிய பங்காற்றியிருப்பதுடன், அவர்களின் கூட்டு முயற்சி வர்த்தக நாமத்தை வலுப்படுத்தியிருப்பதுடன், வாடிக்கையாளர்களுடனான நீண்டகால உறவை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
SLICGL நிறுவனம் காப்புறுதித் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனம் என்ற தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்த தரநிலைகளைப் பேணப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை வளர்ப்பதற்கும் இந்த அங்கீகாரம் ஊக்கமளிக்கிறது.
இன்று, அந்தப் பிணைப்பின் காரணமாக இது மேலும் சிறப்பான நிலைக்குச் சென்றுள்ளது. பொதுக் காப்புறுதித் துறையில் மறுக்க முடியாத சந்தையின் முதல்வனாகத் திகழும் SLICGL நிறுவனம், 2025ஆம் ஆண்டில் 20.2% சந்தைப்பங்கையும், மொத்த எழுதப்பட்ட பிரீமியமாக ரூ.30.3 பில்லியனையும் பதிவுசெய்துள்ளது. கடந்த வருடத்தில் இந்நிறுவனம் தித்வா சூறாவளித் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட காப்புறுதிதாரர்களுக்கு ரூ.12.3 பில்லியன் காப்புறுதிக் கோரிக்கைகள் மற்றும் நன்மைகளை வழங்கியுள்ளது. இதன் மோட்டார் காப்புறுதிப் பிரிவான மோட்டார் பிளஸ் இந்நாட்டின் முதல்தர மோட்டார் காப்புறுதிதாரராகத் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
SLICGL நிறுவனத்தின் நிலை சுயாதீனமாகவும் உறுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Fitch Ratings நிறுவனத்தினால் தேசிய காப்புறுதிதாரரின் நிதி உறுதிப்பாடு தரப்படுத்தலில் இந்நிறுவனம் ஆகத் தரப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது இலங்கையில் காப்புறுதி நிறுவனமொன்று பொற்றுக்கொண்டுள்ள உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் Brand Finance நிறுவனத்தினால் இந்நாட்டின் முதர்தர பெறுமதிமிக்க பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் SLICGL நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.
LMD அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாம விருதுகள் Lanka Monthly Digest நிறுவனத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பெருமைக்குரிய விருது என்பதுடன், வாடிக்கையாளருடன் கொண்டிருக்கும் நெருக்கம் மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றின் உயர்ந்த மட்டத்தின் வெளிப்பாடாகவும் இவ்விருது அமைகின்றது. விரிவான நுகர்வோர் ஆய்வு, வர்த்தகநாமம் பற்றிய கண்ணோட்டம் மற்றும் சந்தை தரவுகள் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விருதுகள், இலங்கை பொதுமக்களுடன் உண்மையாக ஒத்திசைவாக இருக்கும் வர்த்தக நாமங்களை வெளிப்படுத்துகின்றன.
editor