இலங்கையில் திரைப்படங்களைப் பார்க்கச் செல்லும் அனுபவங்களை சிறப்பிப்பதற்காக, Uber One மற்றும் Scope Cinemas ஆகியன கைகோர்த்துள்ளன
Experience exclusive rewards as Uber One teams up with Scope Cinemas in Sri Lanka. Enjoy premium perks, special offers, and enhanced benefits for movie lovers through this new partnership.
திரைப்படங்களைப் பார்க்கச் செல்கின்றவர்களுக்கு பிரத்தியேகமான வரப்பிரசாதங்களை வழங்கும் வகையில், Uber மற்றும் Uber Eats ஆகியவற்றின் உயர் மட்ட அங்கத்துவ நிகழ்ச்சித்திட்டமான Uber One மற்றும் இலங்கையின் முன்னணி திரையரங்கச் சங்கிலியான Scope Cinemas ஆகியன கைகோர்த்துள்ளன.
அங்கத்தவர்களுக்கு கூடுதல் மதிப்பையும், கூடுதலான அளவில் தங்குதடையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தையும் வழங்க ஏதுவாக, உணவு மற்றும் திரைப்படங்களின் அன்றாட விருப்பத் தெரிவுகளை இக்கூட்டாண்மை வழங்குகின்றது.
இக்கூட்டாண்மையின் அங்கமாக, கொழும்பு சிட்டி சென்டர் மற்றும் ஹவ்லொக் சிட்டி ஆகியவற்றில் அமைந்துள்ள Scope Cinemas மையங்களில் திரைப்பட டிக்கெட்டுக்களுக்கு ரூபா 500 தள்ளுபடியையும், உணவு மற்றும் பான வகைகளுக்கு ரூபா 500 தள்ளுபடியையும் ஒவ்வொரு மாதமும் பிரத்தியேக சலுகையாக Uber One அங்கத்தவர்கள் பெற்று அனுபவிக்க முடியும். செயலி (app) மூலமாகக் கிடைக்கின்றவற்றுக்கும் அப்பாற்பட்ட நன்மைகளுடன், அன்றாடத் தருணங்களுக்கு மதிப்பைச் சேர்ப்பிக்கும் Uber One, வழக்கமான வெளிப்புற இரவுப் பொழுது அனுபவங்களை விசேட தருணங்களாக மாற்றியமைக்கின்றது.
Uber Sri Lanka நிறுவனத்தின் விநியோக சேவை வணிகப் பிரிவிற்கான இலங்கை முகாமையாளர் வருண் விஜேவர்த்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை மக்கள் திரைப்படங்களை மிகவும் நேசிக்கும் நிலையில், மக்கள் தாங்கள் அனுபவித்து மகிழ்கின்றவற்றை அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நாம் நேசிக்கிறோம்.
மிகச் சிறந்த திரைப்படங்கள் மிகச் சிறந்த வரப்பிரசாதங்களுக்கு தகுதியானவை என்பதால், இக்கூட்டாண்மையினூடாக சௌகரியத்தையும், அவற்றை ஈடுபாட்டுடன் அனுபவிப்பதையும் நாம் உறுதி செய்கிறோம். தினந்தோறும் சவாரிகள் மற்றும் விநியோக சேவைகள் மூலமாக மாத்திரம் சேமிப்புக்களை மேற்கொள்வதற்கு திறன்மிக்க வழிமுறையை வழங்குவது மாத்திரமன்றி, தற்போது மனமகிழ்வான சினிமா அனுபவத்தையும் Uber One வழங்குகின்றது.”
மாதமொன்றுக்கு ரூபா 599 அல்லது ஆண்டொன்றுக்கு ரூபா 5,999 என்ற தொகை மதிப்பில் Uber One அங்கத்துவம் கிடைக்கப்பெறுகின்றது. சவாரிகளுக்கு 5% தள்ளுபடி, இலவச விநியோக சேவை, முன்னுரிமை அடிப்படையில் வாடிக்கையாளர் ஆதரவு, மற்றும் பல அனுகூலங்களை இது அங்கத்தவர்களுக்கு வழங்குகின்றது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும் மதிப்பைச் சேர்ப்பித்து, வாழ்க்கைமுறைக்கான துணையாக Uber One ஐ மாற்றியமைக்கும் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சமீபத்தைய கூட்டாண்மை காணப்படுகின்றது.
Scope Cinemas ன் நிறைவேற்றுத் தலைவர் நவீட் காதர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு திரைப்பட அனுபவத்தை இன்னும் விசேடமான தருணங்களாக மாற்றும் கூட்டாண்மைகளின் தேடலில் Scope எப்போதும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. Uber One உடன் கைகோர்ப்பது கூடுதல் சௌகரியம் மற்றும் மதிப்பைத் தோற்றுவிப்பதுடன், இலங்கையிலுள்ள திரைப்பட ரசிகர்கள் பெரிய திரைகளுக்கு வருகை தந்து அவற்றை ரசிப்பதற்கு மற்றுமொரு காரணத்தையும் அவர்களுக்கு வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.”
திரைப்படம் பார்க்கச் செல்பவர்கள் Uber Eats app திரையில் தமக்கான தனித்துவமான ஊக்குவிப்புக் குறியீட்டை கண்டு கொள்ள முடிவதுடன், குறித்த சலுகையை அனுபவிப்பதற்கு Scope Cinemas இணையத்தளம் அல்லது திரையரங்கின் கருமபீடத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறைந்த பட்சமாக இவ்வளவு தொகையை செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பது குறிப்படத்தக்கது.
திரையரங்குகள் பல்வேறு திரைப்படங்களுடன் பரபரப்பாகி, பண்டிகைக்காலத்தை கொழும்பு நெருங்குகின்ற இச்சமயத்தில், பாரிய திரைகளில் திரைப்படங்களைக் கண்டுகளிப்பதில் நகரத்தில் நிலவும் அபிமானத்திற்கு கொஞ்சம் கூடுதல் விறுவிறுப்பைச் சேர்ப்பிப்பதை Uber One மற்றும் Scope Cinemas ஆகியன இதன் மூலமாக உறுதி செய்கின்றன.
editor