விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சவாரி : ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் பாதுகாப்பு
Sri Lanka Insurance Corporation General Ltd joined the Air Force Cycling Tour 2026 as the official insurance partner, providing comprehensive protection for cyclists, officials, and spectators at the national event.
தேசத்தின் நம்பிக்கையான காப்புறுதிதாரரான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் நிறுவனம், இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்படும் இலங்கையின் முன்னணி சைக்கிளோட்டப் போட்டி நிகழ்வான விமானப்படையின் சைக்கிள் ஓட்டுதல் சவாரி 2026 நிகழ்வில் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக இணைந்துகொண்டது.
1999ஆம் ஆண்டு முதல் இந்த சைக்கிளோட்டப் போட்டி நடத்தப்பட்டு வருவதுடன், இது நாட்டின் மிகவும் முக்கியமான சைக்கிள் பந்தையப் போட்டியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் 2026ஆம் ஆண்டுக்கான போட்டி இலங்கை விமானப்படையின் 75வருடப் பூர்த்தியுடன் இணைந்ததாக தொடர்ச்சியாக 27வது வருடமாகவும் நடத்தப்பட்டது.
இந்த வருடப் போட்டியானது 500 கிலோமீற்றர்களை உள்ளடக்கியதாக மூன்று நாட்கள் நடைபெற்றதுடன், இது வெளிநாட்டு சைக்கிள் பந்தய வீரர்கள் உள்ளடங்கலா 150ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்திருந்தது. போட்டித் தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் இலங்கை விமானப்படை கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுக்கு சான்றாகவும் இது அமைந்தது.
இந்த சைக்கிள் ஓட்டுதல் சவாரி பெப்ரவரி 27ஆம் திகதி நீர்கொழும்பில் ஆரம்பித்து முதல் நாள் சிலாபத்தில் நிறைவடைந்தது. இரண்டாவது நாள் சிலாபத்திலிருந்து ஆரம்பித்து தம்புள்ளையிலும், இறுதி நாள் தம்புள்ளையில் ஆரம்பித்து மார்ச் 1ஆம் திகதி இலங்கை விமானப் படையின் தலைமையகத்தில் பூர்த்தியடைந்தது. பெண்களின் சைக்கிள் ஓட்டப் போட்டி மார்ச் 1ஆம் திகதி மீரிகமவிலிருந்து விமானப்படை தலைமையகம் வரையிலும் இடம்பெற்றது. இது தேசிய மட்டப் போட்டிகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் வலுவாக நம்புகின்றது. தனிமனித சாதனைகளை வளர்ப்பது, சமூகங்களைக் கட்டியெழுப்புவது மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பது ஆகிய நெறிமுறைகளுக்கு விளையாட்டு மையமாக விளங்குகிறது. எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உறுதியுடன், இலங்கையர்கள் தங்கள் ஆர்வங்களைத் தொடரவும், தங்கள் வரம்புகளைத் தாண்டிச் செல்லவும் சுதந்திரம் உள்ளது என்பது இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனத்தின் பங்களிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட சைக்கிள் பந்தை வீரர்கள் மற்றும் நிகழ்வின் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி உள்ளடங்கலான விரிவான பாதுகாப்பை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் வழக்கியது. அத்துடன், பார்வையாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு பொதுப் பொறுப்புக் காப்புறுதி, பாகாப்பு வழங்கிய பொலிஸ் வாகனங்களுக்கு தற்காலிக மோட்டார் காப்புறுதி என்பவற்றையும் வழங்கியது. தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையுடன் பந்தைய வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும், விளையாட்டு மற்றும் நல்வாழ்வுடன் இணையும் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம், சைக்கிள் பந்தயங்களுக்கும், தனது மெடிபிளஸ் சுகாதார காப்புறுதித்
தீர்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்கின்றது.
விளையாட்டு வீரர்களின் பாதுகாவலராகச் செயல்படும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் தடுப்புப் பராமரிப்புடன் இணைக்கும் வகையில் சுகாதாரக் காப்புறுதித் தீர்வுகளை வழங்குகிறது. ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனமானது, ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும், காப்புறுதி மற்றும் நல்வாழ்வுத் துறையினருக்கிடையிலான நம்பிக்கையை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விளையாட்டு முயற்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
editor