147வது Battle of the Blues: 21 ஆண்டுகள் Dialog ஆதரவுடன் SSCயில்

S. Thomas’ College மற்றும் Royal College அணிகள் மோதும் 147வது Battle of the Blues போட்டி மார்ச் 12–14, 2026 வரை SSC கொழும்பில் நடைபெறுகிறது. 21 ஆண்டுகளாக Dialog Axiata ஆதரவு வழங்கி வருகிறது.

147வது Battle of the Blues: 21 ஆண்டுகள் Dialog ஆதரவுடன் SSCயில்

கல்கிசை S. Thomas’ College மற்றும் கொழும்பு Royal College இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க 147-ஆவது Battle of the Blues, வரும் March 12, 13 மற்றும் 14, 2026 ஆகிய திகதிளில் நாட்டின் முதன்மையான Test Cricket மைதானமான Sinhalese Sports Club (SSC)-இல் நடைபெறவுள்ளது. 

ஆழ்ந்த பாரம்பரியம் மற்றும் ஈடுஇணையற்ற வரலாற்றைக் கொண்ட இந்த புகழ்பெற்ற மோதல், உலகின் இரண்டாவது மிக நீண்ட இடைவிடாத School Cricket Series ஆகும். இது கொழும்பின் இரு முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான நட்புறவு மற்றும் விளையாட்டுத் திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகும். Battle of the Blues என்பது வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, அது சுமார் 150 ஆண்டுகளாகத் தொடரும் போட்டி மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகும். இந்த பிரம்மாண்டத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் Mustangs Trophy ஒருநாள் போட்டி (One-day encounter), March 28, 2026 அன்று புதிய Floodlit வசதிகளுடன் கூடிய SSC மைதானத்தில் மின்ஒளிப் பாய்ச்சலில் நடைபெறவுள்ளது.

தற்போதைய மற்றும் பழைய Royalists மற்றும் Thomians, தங்களது அடையாளமான Blue, Gold and Black நிற உடைகளை அணிந்து, தங்களது பாடசாலைகளின் பெருமைமிகு பாரம்பரியத்தைக் கொண்டாட மீண்டும் ஒன்றுகூடவுள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆரவாரம் மற்றும் பாரம்பரிய பாடல்களின் எதிரொலியுடன் SSC மைதானம் களைகட்டப்போகிறது.

இலங்கையின் சொந்த “Big Match” என்று கருதப்படும் இந்த கௌரவமான சந்திப்பு, பல இளம் திறமையாளர்களை தேசிய மற்றும் சர்வதேச நிலைக்கு உயர்த்தும் ஒரு தளமாக இருந்து வருகிறது. Dialog Big Match Season-இன் ஒரு அங்கமாக, இந்த வரலாற்றுச் சமர் தலைமுறைகளை ஒன்றிணைத்து நாட்டின் மிகவும் போற்றப்படும் விளையாட்டுப் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.


இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டுக்குத் தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வருகிறது. இளம் திறமைகளை வலுப்படுத்துவதிலும் (Powering young talent), அடுத்த தலைமுறை கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்குவதிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன், Battle of the Blues பாரம்பரியத்தை முன்னெப்போதையும் விட வலிமையாக்குவதை டயலொக் உறுதி செய்கிறது. இவர்களின் ஆதரவு என்பது வெறும் அனுசரணை மட்டுமல்ல, அது இலங்கையின் விளையாட்டு எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும்.

பாடசாலைகளின் இயக்கம் நின்று, அனைவரது கண்களும் மைதானத்தின் மையத்தை நோக்கி ஆவலுடனும் பதற்றத்துடனும் நோக்கியிருக்கும் காலம் இது; 11 வீரர்கள் அந்த மதிப்புமிக்க Senanayake Trophy-க்காக விளையாடுவார்கள். 147-ஆவது அத்தியாயமாக அரங்கேறும் இந்த உடைக்கப்படாத பாரம்பரியத்தில் பங்கேற்கும் இரு அணிகளுக்கும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சந்திப்பு புனித தோமியர் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரியை இணைக்கும் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரியமாக அமையட்டும். இம்முறை எம்முடன் இணைந்த அனைத்து அனுசரணையாளர்களுக்கும் கல்லூரி மற்றும் கூட்டு ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என புனித தோமியர் கல்லூரியின் வார்டன் (Warden) திரு. அசங்க பெரேரா தெரிவித்தார்.

இணைத் தலைவர் திரு. ரமேஷ் அபேவிக்ரம கூறுகையில்: “மற்றுமொரு Roy–Tho போட்டியை காணத் தயாராகும் இவ்வேளையில், சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு மத்தியிலும் 147 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்தச் சாதனையை நாங்கள் கொண்டாடுகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் CSR போன்ற அம்சங்களை உள்வாங்கி இந்தப் போட்டி பரிணாமம் அடைந்துள்ளது. இதில் டயலொக் நிறுவனம் 21 தடவைகள் பிரதான அனுசரணையாளராகப் பெருமையுடன் பணியாற்றியுள்ளது. இது ஒரு போட்டியை விட மேலானது—இது ஆளுமைகளை வடிவமைக்கும் ஒரு பாரம்பரியம்,” என்றார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் திரு. அதுல விஜேவர்தன குறிப்பிடுகையில்: “வருடத்தின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வின் வாசலில் நாம் நிற்கிறோம். 22 சிறுவர்கள் மற்றும் எண்ணற்ற பங்குதாரர்களால் 146 ஆண்டுகளாகத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த உலகப் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். இரு அணிகளுக்கும் எமது வாழ்த்துகள்,” என்றார்.

இந்த நிகழ்வு குறித்து Dialog Enterprise குழும தலைமை அதிகாரி நவின் பீரிஸ் கூறுகையில்: “பாடசாலை கிரிக்கெட் நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வான Battle of the Blues உடன் எங்களது நீண்டகாலப் பங்களிப்பைத் தொடர்வதில் டயலொக் மிகவும் பெருமிதம் கொள்கிறது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதன் மூலம் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வளர்ப்பதே எமது நோக்கம். நாளைய வெற்றியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் என்றும் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.

மார்ச் 2025-இல் நடைபெற்ற 146-ஆவது மோதலைத் தொடர்ந்து, றோயல் கல்லூரி 36 வெற்றிகளையும், புனித தோமியர் கல்லூரி 36 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன், 74 போட்டிகள் சமநிலையில் (Draw) முடிந்துள்ளன. கடந்த முறை 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரியை இம்முறை அவிநாஷ் பெர்னாண்டோ வழிநடத்துகிறார். றோயல் கல்லூரி ரேஹான் பீரிஸ் தலைமையில் மீண்டுமொரு வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருக்கிறது.

147-ஆவது Battle of the Blues மற்றும் 49-ஆவது Mustangs Trophy போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை றோயல் கல்லூரி யூனியன் (RCU) மற்றும் STCML OBA செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை இலங்கையின் முதன்மை 5G Network ஊடாக நேரலையில் ரசிக்குமாறு டயலொக் ஆசிஆட்டா பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இப்போட்டிகளை ThePapare TV (Dialog Television அலைவரிசை 126), Dialog Play Mobile App மற்றும் ThePapare.com ஊடாக நேரலையில் காணலாம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports ஆகியவற்றின் தேசிய அணிகளுக்குப் பெருமையுடன் ஆதரவளித்து வருகிறது. அத்துடன், இலங்கை Golf Open, பாராலிம்பிக் போட்டிகள் (Paralympic sports), பிரசிடென்ட் கோல்ட் கப் கரப்பந்து மற்றும் பாடசாலை ரக்பி போன்ற விளையாட்டுக்களையும் வலுப்படுத்தி வருகின்றது.