இலங்கை வருகிறார் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர்
Admiral Steve “Web” Koehler, Commander of the US Pacific Fleet, will visit Sri Lanka from February 19–21 to discuss maritime security, regional stability, and strengthening Indo-Pacific defense cooperation.
உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்
இவ்விஜயத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடனும், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனும் அட்மிரல் கேலர் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டு இணைந்து இயங்கும் திறன் (Interoperability), மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் கூட்டாண்மை ஆகிய விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்கு
உலகின் அரைப் பகுதியை உள்ளடக்கும் பரப்பில் இயங்கும் அமெரிக்க பசிபிக் கப்பற்படை, முக்கியமான கடல் வழித்தடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்து வருகிறது.
உலகளாவிய வர்த்தகத்திற்கும், எரிசக்தி போக்குவரத்திற்கும் முக்கியமான கடல் வழித்தடங்களின் சந்திப்பில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை இந்த விஜயம் மீண்டும் வலியுறுத்துகிறது.
அட்மிரல் கேலர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவரது இரண்டாவது விஜயமாகும். இது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
பகிரப்பட்ட பாதுகாப்பு உறுதிப்பாடு
சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான நீண்டகால உறுதிப்பாட்டை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல்சார் கள விழிப்புணர்வு (Maritime Domain Awareness), நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை சமாளித்தல் போன்ற துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான பலமான பாதுகாப்பு கூட்டாண்மையையும், இரு நாடுகளின் தொழில்முறை திறன்கள் மீதான நம்பிக்கையையும் இந்த விஜயம் மேலும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அட்மிரல் ஸ்டீவ் கேலர்
அட்மிரல் ஸ்டீபன் கேலர் ஒரு கடற்படைக் குடும்பத்தில் வளர்ந்தார். அவர் போல்டர் நகரிலமைந்துள்ள கொலராடோ பல்கலைக்கழகத்திலிருந்து 1986 ஆம் ஆண்டில் பௌதீகவியலில் விஞ்ஞான இளமானிப் பட்டமொன்றைப் பெற்றுக்கொண்ட பட்டதாரியாவார். அங்கு அவர் Naval Reserve Officer Training Corps (NROTC) படைப்பிரிவினூடாக படைத்துறைப்பணிக்காக நியமிக்கப்பட்டார்.
1989 மார்ச் மாதத்தில் கடற்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், 600 தடைவைகள் விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானங்களைத் தரையிறக்கியது உட்பட 3,900 இற்கும் மேற்பட்ட மணித்தியாலங்கள் F-14 Tomcat மற்றும் F-18 Super Hornet ஆகிய விமானங்களை ஓட்டியுள்ளார்.
கடற்படைப் போர்க் கல்லூரியிலிருந்து தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் தொடர்பான முதுமானிப்பட்டத்தினைப் பெற்றுள்ள அவர் Joint Staff College and the Navy Nuclear Program இன் பட்டதாரியுமாவார்.
கடலில் Fighter Squadron (VF)211, VF-41 பிரிவுடன் பணியாற்றிய அவர், USS Carl Vinson (CVN 70) இன் நிறைவேற்று அலுவலராகவும், Fighter Squadron (VFA) 143; USS Bataan (LHD 5); USS Dwight D. Eisenhower (CVN 69); மற்றும் Carrier Strike Group Nine ஆகிய பிரிவுகளின் கட்டளைத்தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த தொழிற்பாட்டுப் பயணங்களின் போது அவர் Operations Desert Storm, Southern Watch, Iraqi Freedom, Inherent Resolve, Freedom’s Sentinel, Deliberate Guard, மற்றும் ஹைட்டிக்கு அவசரகால பேரனர்த்த நிவாரணங்களை வழங்கிய நடவடிக்கையான Unified Response, மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் சரியிணை போட்டி நடவடிக்கைகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.
தரையில், கேலர் VF-101 இன் பயிற்சியளிக்கும் விமானியாகவும், கடற்படை அதிகாரிகள் பணியகத்தின் பணியமர்த்தல் அதிகாரியாகவும், டிஜிபூட்டியில் Joint Task Force Horn of Africa இன் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க கப்பற்படைகள் தலைமையகத்தில் கப்பற்படை பயிற்சிகளுக்கான பணிப்பாளராகவும்; அமெரிக்க இந்தோ-பசிபிக் தலைமையகத்தில் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராகவும் (J3); அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் பிரதி கட்டளைத்தளபதியாகவும்; அமெரிக்க 3ஆவது கப்பற்படையின் கட்டளைத்தளபதியாகவும், மற்றும் Joint Staff இன் மூலோபாயம், திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான பணிப்பாளராகவும் (J5) அவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியாக 2024,ஏப்ரல் 4ஆம் திகதி அவர் பொறுப்பேற்றார்.
editor