The Colombo Border திட்டத்தின் மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானப் பணிகளை Prime Group நிறைவு செய்தது

Prime Group இன் சொகுசு மாடிமனை மேம்பாட்டுப் பிரிவான Prime Lands Residencies PLC, பெலியகொடையில் அமைந்துள்ள The Colombo Border திட்டத்தின் Brielle, Cosmos மற்றும் Amaa ஆகிய மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளது. சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இத்திட்டம் முக்கிய கட்டுமான மைல்கல்லை எட்டியுள்ளதுடன், குடியிருப்புகளின் கையளிப்பு 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. Tower Cosmos முழுமையாக விற்பனையாகியுள்ள நிலையில், ரூ. 48 மில்லியன் முதல் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை குடியிருப்புகள் தற்போது கிடைக்கின்றன.

The Colombo Border திட்டத்தின் மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானப் பணிகளை Prime Group நிறைவு செய்தது

நவீன ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான தலைவரும், Prime Group இன் சொகுசு மாடிமனை மேம்பாட்டுப் பிரிவுமான Prime Lands Residencies PLC, The Colombo Border திட்டத்தின் மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானங்கள் (superstructures) நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இக்கட்டுமானத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

Tower Cosmos இன் உச்சக்கட்டக் கட்டுமானப் பணிகள் (topping out) முன்னர் நிறைவுற்றதைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது, ஒட்டுமொத்தத் திட்டமும் திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாக அதன் மிகச் சிக்கலான கட்டுமானக் கட்டத்தைக் கடந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.


Prime Lands Residencies PLC நிறுவனத்தின் The Colombo Border என்பது கொழும்பின் நுழைவாயிலில் நகர்ப்புற வாழ்வியலை மறுவரையறை செய்யும் ஒரு மைல்கல் முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புத் திட்டமாகும். வேகமாக வளர்ந்து வரும் பெலியகொட குடியிருப்பு மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திட்டம், வசதி, இணைப்புத்தன்மை, பொழுதுபோக்கு, நிலையான வடிவமைப்பு மற்றும் சமூக வாழ்வியல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள The Colombo Border திட்டம், Brielle, Cosmos, மற்றும் Amaa ஆகிய மூன்று குடியிருப்பு டவர்களைக் கொண்டுள்ளது. இது சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை வீடுகளையும், சில நான்கு படுக்கையறை penthouses களையும் வழங்குகிறது.

இக்கட்டுமானத்தின் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பானது, பூங்காக்கள், ஓய்வுக்கூடங்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் திறந்தவெளி பசுமைப் பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குடியிருப்பாளர்கள் வசதி, சௌகரியம் மற்றும் இயற்கைக்கு மத்தியில் சீரான வாழ்வியலை அனுபவிக்கும் வகையில் ஒரு துடிப்பான மற்றும் வளமான சூழலை உருவாக்குகிறது.


மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானங்கள் நிறைவடைந்தமையானது The Colombo Border திட்டத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதுடன், கொழும்பின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றான இதனை கணிசமான அளவில் நிறைவை நோக்கி நெருங்கச் செய்துள்ளது. அத்துடன், இதற்கான கையளிப்புப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ள வேகமானது, இதன் பின்னணியிலுள்ள வலுவான கட்டுமானத் திட்டமிடலையும், திட்டப்பகுதியில் இணையான முறையில் பணியாற்றிய இரண்டு தனித்துவமிக்க பொறியியல் குழுக்களின் ஒருங்கிணைந்த செயலாக்கத்தையும் பிரதிபலிக்கிறது. இக்குழுமத்தின் உள்வாரி கட்டுமானப் பிரிவான Prime Construction (Pvt) Ltd இரண்டு டவர்களுக்கான கட்டுமானப் பணிகளுக்குத் தலைமை தாங்குவதுடன், ஏனைய டவரின் கட்டுமானப் பணிகளுக்கு Sanken Lanka (Pvt) Ltd தலைமை தாங்குகிறது. 


அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இரண்டு கட்டுமானக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானங்கள் (superstructures) வெற்றிகரமாக நிறைவடைந்தமையானது, Prime Lands Residencies PLC இன் நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற செயலாக்கம் மற்றும் பொறியியல் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் நவீன சொகுசு மாடிமனை வாழ்வியலை மறுவரையறை செய்யும் The Colombo Border, அதன் மூலோபாய இருப்பிடம், பரந்த பசுமை இடங்கள், உயர் ரக வசதிகள், நிலையான வடிவமைப்பு மற்றும் வலுவான சமூக உணர்வு ஆகியவற்றின் மூலம் குடியிருப்பாளர்களுக்கு ஒரு சிறப்பான வாழ்வியலை வழங்குகிறது. இக்கட்டுமானத் திட்டம் மனை உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரினதும் நம்பிக்கையையும் வென்றுள்ளது. Tower Cosmos தற்போது முழுமையாக விற்பனையாகிவிட்ட நிலையில், ரூ. 48 மில்லியன் முதற்கொண்டு வரையறுக்கப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. இது The Colombo Border திட்டத்தின் சிறந்த சந்தை ஈர்ப்பு மற்றும் நீண்டகால முதலீட்டுச் சாத்தியக்கூறுகளைப் பிரதிபலிக்கிறது.

The Colombo Border என்பது தங்களது முதலீட்டு பிரிவை விரிவாக்க விரும்பும் தற்போதைய மனை உரிமையாளர்களுக்கும், கொழும்பின் மிக வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றில் எதிர்காலத்திற்கு ஏற்ற வீடொன்றைத் தேடும் புதிய கொள்வனாளர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


இந்த மைல்கல் சாதனை தொடர்பில் Prime Lands Residencies PLC தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானங்கள் (superstructures) நிறைவடைந்தமையானது எமது குழுமத்திற்கும் இத்திட்டத்தின் பரந்த வளர்ச்சிக்கும் மற்றுமொரு முக்கியமான சாதனையாகும்." எனக் குறிப்பிட்ட அவர், தரம் தொடர்பில் எந்தவொரு பாகுபாடுமின்றி இத்தகைய கட்டுமான வேகத்தைப் பராமரிப்பது, தனது திட்டங்களை உரிய நேரத்தில் கையளிப்பதில் குழுமத்திற்குள்ள நிலையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்கையில், The Colombo Border அதன் அடுத்த கட்டத்திற்கு நகரும் நிலையில், கொள்வனாளர்கள் Prime வர்த்தக நாமத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் மதிக்கப்படுகிறது. அத்துடன், சிறந்த பொறியியல் தரம் மற்றும் கட்டுமானச் சிறப்பம்சங்களுடன் நிறுவனம் தொடர்ந்து மதிப்பளிக்கும் ஒரு முதலீடாகவும் இது
அமைகின்றது. என்றார்.

The Colombo Border திட்டம் நிறைவை நோக்கி சீராக முன்னேறி வரும் நிலையில், Prime Lands Residencies PLC வெறும் மற்றொரு குடியிருப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கும் மேலாகத் தனது தளராத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றது. ஒரு முக்கிய மைல்கல் வாழ்வியல் இடமாக உருவாக்கப்பட்டுள்ள தி கொழும்பு பார்டர், விதிவிலக்கான வடிவமைப்பு, உயர்ந்த கட்டுமானத் தரம் மற்றும் நிலையான மதிப்பு ஆகியவற்றின் மூலம் நகர்ப்புற வாழ்வின்
எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை எதிர்நோக்குகிறது. Tower Cosmos ஏற்கனவே முழுமையாக விற்பனையாகிவிட்ட நிலையில்,


Towers Brielle மற்றும் Amaa இற்கான வலுவான தேவைக் காரணியானது, Prime Lands Residencies PLC மீதும், கொழும்பின் குடியிருப்பு அமைப்பை மறுவரையறை செய்யும் உருமாற்றச் சமூகங்களை வழங்கும் அதன் ஆற்றல் மீதும் கொள்வனவாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்றாக அமைகின்றது.