மிஸ் போல்ஸ்கி 2026 இறுதிப் போட்டியாளர்களை வரவேற்ற Sun Siyam Pasikudah – கிழக்குக் கடற்கரையின் அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சி

Sun Siyam Pasikudah welcomed Miss Polski 2026 finalists and production crew for an exclusive photoshoot, showcasing Sri Lanka’s scenic East Coast, cultural heritage, and tourism potential to an international audience.

மிஸ் போல்ஸ்கி 2026 இறுதிப் போட்டியாளர்களை வரவேற்ற Sun Siyam Pasikudah – கிழக்குக் கடற்கரையின் அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சி

மாலைத்தீவைச் சேர்ந்த சன் சியாம் ரிசோர்ட்ஸ் (Sun Siyam Resorts) நிறுவனத்தின் கீழ் இயங்கும் Sun Siyam Pasikudah இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) ஆதரவுடன் அண்மையில் போலந்து நாட்டின் மிஸ். போல்ஸ்கி 2026 (Miss Polski 2026) அழகிகள் மற்றும் புகைப் படக்குழுவினரை தனது விடுதியில் வரவேற்று உபசரித்தது.

போலந்தில் உள்ள நோவி சாட்ச் (Nowy Sącz) நகரில் ஆகஸ்ட் 2-ஆம் திகதி நடைபெறவிருக்கும் மிஸ் போல்ஸ்கி (Miss Polski) இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்த ஆண்டிற்கான 24 இறுதிப் போட்டியாளர்கள், 45 பேர் கொண்ட தயாரிப்பு மற்றும் போட்டிக் குழுவினருடன் ஜூன் 7-ஆம் திகதி 10 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.முந்தைய ஆண்டு வெற்றியாளர்களான ஒலிவியா மிகூல்ஸ்கா (2025) மற்றும் கஸாந்திரா சவால் (2024) ஆகியோரும் இவர்களுடன் வருகை தந்திருந்தனர். 

இலங்கையின் கலாசார பாரம்பரியம், இயற்கை எழில் மற்றும் வனவிலங்குகளை சர்வதேச பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில், சீகிரியாவில் தொடங்கி கிழக்குக் கடற்கரை வரை இந்தச் சுற்றுப்பயணத்தின் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 


இப்பயணம் முழுவதும் இவர்கள் அனுபவித்த நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் போலந்து நாட்டு ஊடகங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டன.


இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, குழுவினர் Sun Siyam Pasikudah ரிசோர்ட்டில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தனர். அங்கு, அந்த ரிசோர்ட்டின் மிகத் தூய்மையான கடற்கரையும், அமைதியான கிழக்குக் கடற்கரைச் சூழலும், இறுதிப் போட்டியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரத்தியேக ஊக்குவிப்பு புகைப்பட அமர்வுக்கு ஒரு சிறந்த பின்னணியாக அமைந்தன.


இந்த முயற்சியைப் பற்றி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பிரதிப்பணிப்பாளர் மசித டி தாபரவ், தெரிவிக்கையில் "இந்த கூட்டுறவானது, மிஸ் போல்ஸ்கி (Miss Polski) போன்ற தளங்கள் மூலமாக உலகளாவிய பார்வையாளர்களுக்கு இலங்கையின் அதிகம் அறியப்படாத இடங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இறுதிப் போட்டியாளர்களுக்கு இந்த நாட்டின் உண்மையான விருந்தோம்பலையும், இயற்கை அழகையும் அனுபவிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.


Sun Siyam Pasikudah இன் பொதுமுகாமையாளர் அர்ஷெட் ரிஃபாய் தெரிவிக்கையில்


மிஸ் போல்ஸ்கி (Miss Polski) இறுதிப் போட்டியாளர்களையும் அவர்களின் புகைப்படப்பிடிப்பு குழுவினரையும் தமது சொகுசு விடுதியில் வரவேற்பதில் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இது போன்ற தருணங்கள், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கு கிழக்குக் கடற்கரை எத்தகைய அழகுகளை வழங்குகிறது என்பதை நினைவூட்டுகின்றன.


அமைதியான நீலக்கடல் முதல், அவர்கள் வந்திறங்கியதும் வழங்கப்படும் அன்பான வரவேற்பு வரை அனைத்தும் இதற்கு சான்றாகும். இந்தச் சுற்றுப்பயணமானது, கிழக்குக் கடற்கரையை பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்காகப் பயணம் செய்பவர்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்கும் ஏற்ற ஒரு புதிய இடமாகக் காட்டுவதற்கும், இயற்கை அழகும் நேர்த்தியான உபசரிப்பும் நிறைந்த ஒரு தனித்துவமான தங்குமிடமாக இந்த ரிசோர்ட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.


பாசிக்குடாவின் மிகச்சிறந்த கடற்கரை பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள இந்த ரிசோர்ட், அமைதியான ஆழமற்ற காயல் நீர், மென்மையான வெண்மணல் மற்றும் விரிகுடாவின் தடையற்ற இயற்கை காட்சிகளுக்குப் பெயர் பெற்றது. 


கிழக்குக் கடற்கரையை சுற்றிலும் அசைந்தாடும் பனை மரங்களும், உலகையே மறக்கச் செய்யும் அமைதியும் இந்த இடத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இங்குள்ள எளிய மற்றும் நேர்த்தியான வில்லாக்கள் மற்றும் அறைகள், இயற்கையை மறைக்காமல் அதனுடன் இயைந்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது விருந்தினர்களுக்கு ஒரு முழுமையான தனிமையையும், நிறுவனத்தின் தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பான சேவையையும் வழங்குகிறது.


இலங்கையின் மிகக் குறைவாகத் தொட்டுப் பாதுகாக்கப்பட்ட கடற்கரைகளில் ஒன்றை ஒட்டிய அமைதியான சூழலில் அமைந்துள்ள Sun Siyam Pasikudah-இன் நவீன வடிவமைப்பிலான 34 பவிலியன்கள், இயற்கைச் சூழலுடன் இசைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்திப் பயன்பாடு, நீர் பாதுகாப்பு மற்றும்
கழிவுகளை குறைத்தல், மீள் சுழற்சி செய்தல், உரமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் உள்ளிட்ட நிலைத்தன்மை மீதான உறுதியான அர்ப்பணிப்பு, இந்த ரிசோர்ட்டின் அனைத்து செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது.

The House of Siyam-இன்பொட்டிக் தரத்திலான பிரத்தியேக தொகுப்பின் உரித்துடைமையான இந்த விடுதி, வெறும் அழகிய காட்சியை மட்டுமல்லாமல், அந்த இடத்தின் தனித்துவமான அனுபவத்தை நாடும் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில், வளைகுடாவையும் அதற்கு அப்பால் விரிந்துள்ள இந்தியப் பெருங்கடலையும் பின்னணியாகக் கொண்ட மிதக்கும் தளத்தில் வழங்கப்படும் சிறப்பு உணவு அனுபவம் போன்ற தனிச்சிறப்பான வசதிகளும் இங்கு காணப்படுகின்றன.


தமது விடுமுறை அனுபவத்தை நீடிக்க விரும்புபவர்களுக்காக, 2027 அக்டோபர் 31- ஆம் திகதி வரை தங்க விரும்புவர்களின் முன்பதிவுகளுக்கு இந்த கோடைக்காலச் சலுகை கிடைக்கிறது. இது கிழக்குக் கடற்கரை பகுதியில் நீங்கள் தங்கும் நாட்களுக்கு, ஸ்பா (spa) சிகிச்சை, கயாக்கிங் (kayaking) மற்றும் தினமும் மிதிவண்டி
சவாரி போன்ற மேலதிக சிறப்பம்சங்களை வழங்குகிறது.