நைலோன் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை மேம்படுத்த 30 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டிய Syntetica

சிக்கலான ஆடைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் பிரான்ஸைச் சேர்ந்த deeptech நிறுவனமான Syntetica, 30 மில்லியன் டொலர் Series A நிதியைத் திரட்டியுள்ளது. நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலம் நைலோன் 6 மற்றும் நைலோன் 6,6 ஆகிய இரு வகை நைலோன்களையும் ஒரே செயல்முறையின் மூலம் மறுசுழற்சி செய்ய முடியும். lululemon மற்றும் இலங்கையின் MAS Holdings உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஆதரவுடன் திரட்டப்பட்ட இந்த நிதி, Michelin நிறுவனத்துடன் இணைந்து பிரான்ஸில் முதலாவது வர்த்தக ரீதியிலான மாதிரி உற்பத்தி மையத்தை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

நைலோன் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை மேம்படுத்த 30 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டிய Syntetica

 நைலோன் 6 மற்றும் நைலான் 6,6 ஆகிய இரண்டையும் ஒரே செயல்முறையின் மூலம் மறுசுழற்சி


செய்யும் தனது பிரத்யேகத் தொழில்நுட்பத்தை Syntetica உருவாக்கியுள்ளது. இது நைலோன்
மறுசுழற்சியில் உள்ள பெரிய சவாலுக்குத் தீர்வாக அமைகிறது.


 சர்வதேச ஆடை நிறுவனமான lululemon மற்றும் உலகின் மிகப்பெரிய ஆடை
உற்பத்தியாளர்களுள் ஒன்றான MAS Holdings ஆகிய நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.


 இந்த நிதியுதவி மூலம், 'மிச்செலின்' (Michelin) நிறுவனத்துடனான கூட்டாண்மையில் தனது


முதலாவது வர்த்தக ரீதியிலான மாதிரி உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளது. சிக்கலான ஆடைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் பிரான்ஸைச்
சேர்ந்த deeptech நிறுவனமான சிந்தெடிகா (Syntetica), முன்னணித் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி ஆடை வர்த்தக நாமங்களிடமிருந்து 30 மில்லியன் டொலர் Series A நிதியைத் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசின் சார்பாக Bpifrance நிர்வகிக்கும் Ecotechnologies 2 நிதி நிறுவனம் இந்த நிதித் திரட்டலுக்குத் தலைமை தாங்கியது. பிரபல விளையாட்டு ஆடை நிறுவனமான lululemon, உலகின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றான இலங்கையின் MAS Holdings, SWEN Capital Partners, EQT Ventures மற்றும் Peugeot, Etam, Indorama Ventures குடும்ப அலுவலகங்கள் இதில் பங்கேற்றன. 

மேலும், Bpifrance மற்றும் ஐரோப்பிய புத்தாக்கப் பேரவை ((European Innovation Council) போன்ற பொது நிறுவனங்களின் ஆதரவும் இதற்கு கிடைத்துள்ளது. இதுவரை, கழிவுகளிலிருந்து நைலான் வகைகளைப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்வது மிகப்பெரும் தொழில்நுட்ப சவாலாக இருந்தது. ஆனால், சிந்தெடிகா நிறுவனம் உருவாக்கியுள்ள காப்புரிமை பெற்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம் நைலோன் 6 மற்றும் நைலோன் 6,6 ஆகிய இருவகையான நைலோன்களையும் ஒரே செயன்முறையில் மறுசுழற்சி செய்ய முடியும். ஆடை பரிமாற்றத்தின் பொருட்கள் சந்தை அறிக்கையின் படி, உலகளவில் 2024-ஆம் ஆண்டில் நைலோன் உற்பத்தி சுமார் 7 மில்லியன் டொன்களை எட்டியுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்த போதிலும், பயன்பாட்டிற்குப் பிந்தைய துணிகளை மறுசுழற்சி செய்வதில் உள்ள தொழில்நுட்பச் சவால்கள் காரணமாக, மொத்த நைலோன் சந்தையில் மறுசுழற்சி செய்யப்பட்ட நைலோன் வெறும் 2% மட்டுமே உள்ளது. வீடுகளால் தூக்கி எறியப்படும் துணிகளில் 80%-க்கும் அதிகமானவை தற்போது எரிக்கப்படுகின்றன, நிலத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது சுற்றுச்சூழலில் கைவிடப்படுகின்றன.

சிந்தெடிகாவின் புதிய தொழில்நுட்பம் இச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதோடு, ஆடைத் துறையிலிருந்து வெளிவரும் நைலோன் கழிவுகளை பெருமளவில் மறுசுழற்சி செய்ய வழிவகுக்கிறது. Victoria’s Secret மற்றும் Etam போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே சிந்தெடிகாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

ஆய்வகத்திலிருந்து தொழிற்சாலைக்கு

திரட்டப்பட்ட இந்த நிதி, பிரான்சில் அமையவுள்ள சிந்தெடிகாவின் முதல் வணிக ரீதியிலான மாதிரி உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்தத் தொழில்நுட்பம் ஆய்வக அளவிலிருந்து தொழில்முறை உற்பத்திக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான டன்கள் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி மையம் Clermont-Ferrand உள்ள மிச்செலின் நிலையான பொருட்களுக்கான மையத்துடன் ((Michelin's Centre for Sustainable Materials) இணைந்து உருவாக்கப்படும். 

இன்றைய சூழலில் கழிவுகளைக் குறைக்கவும், மூலப்பொருள் விநியோகத்தை வலுப்படுத்தவும் ஆடை நிறுவனங்களும் கொள்கை வகுப்பாளர்களும் தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்த முதலீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொழில்நுட்பங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் சுத்தமான கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்யும் நிலையில், சின்தெடிகாவின் இத்தொழில்நுட்பம் மக்கள் பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் ஆடைக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடைக் கழிவுகளில் 80% பங்கு வகிக்கும் இத்தகைய ஆடைகளே, மறுசுழற்சித் துறையில் இதுவரை பயன்படுத்தப்படாத மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் மூலோபாய மூலப்பொருள் உட்கட்டமைப்பை உருவாக்குதல்

இந்த முதலீடு, ஐரோப்பாவிற்குள்ளேயே ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு புதிய தொழிற்துறை விநியோகச் சங்கிலிகளை உருவாக்க சின்தெடிகா நிறுவனத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என்பதுடன், ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் புதிய உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

தற்போது நைலான் மறுசுழற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சின்தெடிகா நிறுவனம், எதிர்காலத்தில் ஆடைத் துறை மட்டுமன்றி, வாகன உற்பத்தி மற்றும் சிறப்பு இரசாயனங்கள் போன்ற பிற துறைகளுக்கும் ஏற்ற வகையில் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் கழிவு மேலாண்மையில் சொந்த தொழில்துறை திறன்களை பலப்படுத்த ஐரோப்பிய நாடுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனால், பிரான்ஸ் அரசின் Bpifrance மற்றும் ஐரோப்பிய புத்தாக்கப் பேரவை போன்ற முன்னணி பொது நிதி அமைப்புகளின் ஆதரவை சின்தெடிகா நிறுவனம் பெற்றுள்ளது.

இதுதொடர்பில் சிந்தெடிகா நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்கோ பெர்ட்டோன் (Marco Bertone) கருத்து தெரிவிக்கையில், ”பல தசாப்தங்களாக, கலப்பு நைலோன் கழிவுகளை பெருமளவில் மறுசுழற்சி செய்வது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக செலவுமிக்கது என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், ஆடைத் துறையால் முழுமையாகக் கைவிடப்பட்ட கழிவுகளிலிருந்தும் கூட உயர்தர மூலப்பொருட்களை மீட்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். இந்த நிதியுதவி, புதிய இரசாயனத் தொழில்நுட்பங்களை தொழில்துறையில் நடைமுறைப்படுத்தவும், மீள்சுழற்சி செய்யக்கூடிய
பொருட்களைப் பயன்படுத்துவதற்கான மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது.” என்றார்.

Bpifrance Green Venture நிறுவனத்தின் முதலீட்டு பணிப்பாளர் அலெக்சாண்டர் வாக்னர் (Bpifrance
Green Venture) கருத்து தெரிவிக்கையில், “ஆடைத் துறையின் மிகவும் சிக்கலான மறுசுழற்சி சவால்களில் ஒன்றிற்குத் தீர்வுகாணும் வகையில் சிந்தெடிகா ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. பிரான்சில் தனது தொழில்நுட்பத்தையும் உற்பத்தித் திறனையும் விரிவுபடுத்தும் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எமது முதலீட்டு மூலோபாயத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.” என்றார்.

MAS Holdings நிறுவனத்தின் குழும புத்தாக்கப் பிரிவின் பணிப்பாளர் சித் அமலியன் கூறுகையில், “வர்த்தக நாமங்களின் அர்ப்பணிப்பு, ஆடை உற்பத்தியாளர்களின் கூட்டாண்மை மற்றும் தொழில்முறை உற்பத்தி விரிவாக்க அனுபவம் ஆகிய மூன்றும் இணையும் போதுதான் மறுசுழற்சி தொழில்நுட்பம் வெற்றியடைகிறது. இந்தத் துறையில் இவை அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவந்துள்ள ஒரு சில நிறுவனங்களில் சிந்தெடிகாவும் ஒன்றாகும். எங்களது ஆடை உற்பத்தி அனுபவத்தைப் பயன்படுத்தி சிந்தெடிகாவின் தொழில்நுட்பத்தை வளர்க்க உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.