“சூரிய மங்களம்” கொண்டாட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த Nippon Paint
Nippon Paint Lanka kicked off the first working day after the Tamil and Sinhala New Year with vibrant cultural celebrations at Camelot Beachside Hotel in Negombo. Sheng Tong, Director at Nippon Paint Singapore Group, expressed joy in joining the festivities for the first time.
Nippon Paint Lanka, தமிழ், சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து முதல் வேலை நாளை நீர்கொழும்பு Camelot Beachside ஹோட்டலில் பாரம்பரிய கொண்டாட்டங்கள் மற்றும் களிப்பூட்டும் நிகழ்வுடன் ஆரம்பித்தது.
Nippon Paint Singapore Group இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஷெங் தொங் யின் கருத்துத் தெரிவிக்கையில்,
“முதன் முறையாக இந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, Nippon Paint Lanka அணியினருடன் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையில் Nippon Paint தன்னை பெரிதும் அர்ப்பணித்துள்ளது. வியாபாரத்தை வளர்ச்சியடையச் செய்வதில் நாம் கவனம் செலுத்துவதுடன், பொருளாதாரத்துக்கு மீளளிப்பதிலும், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் அக்கறை கொண்டுள்ளோம். இந்த சிறந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக எனக்கு அழைப்பு வழங்கப்பட்டிருந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.
Nippon Paint Lanka வணிக பணிப்பாளர்/பொது முகாமையாளர் நிமந்த அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
“நாம் சிறந்த முதல் காலாண்டை கடந்திருந்தோம், இன்று நாம் அதன் வெற்றியை கொண்டாடுகிறோம். பத்து நாட்களாக நாம் விடுமுறையிலிருந்தோம். அதனைத் தொடர்ந்து, புதுவருடத்தில் முதல் நாள் வேலை ஆரம்பிக்கையில், அனைவரும் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது போன்று பல வருடங்களாக நாம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
Nippon Paint இன் மக்களுக்கு முன்னுரிமையளிக்கும் செயன்முறை என்பது, எப்போதும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. எமது ஊழியர்களை நாம் மதிப்பதுடன், அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும், வலுவூட்டப்பட்டவர்களாக இருப்பதையும் காண விரும்புகிறோம்.” என்றார்.
Nippon Paint Lanka என்பது இலங்கையின் முன்னணி பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகள் உற்பத்தியாளராக திகழ்வதுடன், நாட்டின் நிர்மாணக் கட்டமைப்புகளுக்கு அதிகளவு வர்ணம் மற்றும் நிலைபேறாண்மையை சேர்த்த வண்ணமுள்ளது.
NIPSEA Group பற்றி (Nippon Paint Holdings Co. இன் துணை நிறுவனம்)
NIPSEA Group என்பது, மேற்பூச்சு வகைகள் மற்றும் நிர்மாணத் துறைக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் சர்வதேச முன்னோடியாகத் திகழ்கின்றது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ளதுடன், 28 பகுதிகளில் 148 NIPSEA நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை வருமானத்தைப் பொறுத்தமட்டில், ஆசிய பசுபிக்கின் 1ல் தர பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகை உற்பத்தியாக திகழ்கிறது. 60 வருட காலப்பகுதிக்கு அதிகமான வளர்ச்சியை தொடர்ந்து, NIPSEA Group தன்வசம் 31000 க்கு அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளதுடன், 118 உற்பத்தி பகுதிகளையும் கொண்டுள்ளது. அதனூடாக உற்பத்தி முதல் வாடிக்கையாளர் திருப்திகரத்தன்மை வரையில் சகல விதமான செயற்பாடுகளையும் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கிறது.
எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, எமது சகல பங்காளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இல்ல உரிமையாளர்களுக்கு உகந்த உயர் தரம் வாய்ந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்கிறோம். தொழிற்துறைக்கு NIPSEA Group இனால் வழங்கப்படும் பெருமளவு தீர்வுகளில், கட்டடக்கலை, தொழிற்துறை, வாகனங்கள், மரைன் மேற்பூச்சுகள் மற்றும் பரந்தளவு நிர்மாணத் தீர்வுகள் போன்றன பெயின்ட்களுக்கு அப்பால் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்தி, எமது சகல பங்காளர்களுக்கும் சிறந்த புத்தாக்கமான அம்சங்களை வழங்கும் ஊழியர் குழுவை நாம் கொண்டுள்ளோம்.
editor