சிஹான்.அன்ரோ‌ டினேஷ் எழுதிய “ The Scientific Art of Karate ” கராத்தே நூல் வெளியீடு 

ஷிஹான் அன்ரோ டினேஷ் எழுதிய ‘கராத்தேயின் விஞ்ஞானக் கலை’ (The Scientific Art of Karate) என்ற மூன்றாவது நூல் கடந்த சனிக்கிழமை (21) மாலை கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. கராத்தே கலையின் பின்னணியிலுள்ள விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும் மனித உடலின் செயற்பாடுகள் தொடர்பில் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.

சிஹான்.அன்ரோ‌ டினேஷ் எழுதிய “ The Scientific Art of Karate ” கராத்தே நூல் வெளியீடு 

சிஹான்.அன்ரோ‌ டினேஷ் எழுதிய The Scientific Art of Karate எனும் கராத்தே நூல் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பில் வெளியிடப்பட்டது.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நெசனலின் மேல் மாகாண பிரதம  பயிற்றுனர் சென்செய் அ.கபில்தேவ் தலைமையில் இடம்பெற்ற இந்ந நிகழ்வில் பிரதம விருந்தினராக  வீரகேசரி இணையத்தளத்தின் ஆசிரியர் வீ.பிரியதர்சன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக கிளரட் கல்வியக பணிப்பாளர் அஸ்வினி சொலமன் மற்றும் SKAI சபை உறுப்பினர் கிறிஸ்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்‌.

சிஹான்.அன்ரோ‌  டினேஷின் முதலாவது நூலான Martial Arts: Historical & Technical தற்காப்புக் கலைகளின் வரலாறு மற்றும் அதன் தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இரண்டாவது நூலான Art of Karate: The Path to Recognition கராத்தே கலையைக் கற்பவர்கள், பயிற்றுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் இக்கலையில் முறையான பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும், அங்கீகாரத்தை நோக்கிய பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மூன்றாவது நூலான The Scientific Art of Karate என்பது கராத்தே கலையை வெறுமனே உடல் பயிற்சியாகவோ தற்காப்புக் கலையாகவோ மட்டும் அணுகாமல், அதன் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படைகளையும் உடலின் செயற்பாடுகளையும் இந்த நூல் விளக்குகின்றது.

இந்நிகழ்வில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நெசனலின் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.