நிலைபேற்றியலில் சம்பத் வங்கி காண்பித்து வரும் தலைமைத்துவ ஸ்தானத்திற்கு ACCA Sri Lanka Awards ’24 விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பான அங்கீகாரம்
ACCA Sri Lanka Sustainability Reporting Awards 2024 விருதுகள் வழங்கும் நிகழ்வில்ரூபவ் வங்கிப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதன் மூலமாகரூபவ் மதிப்புமிக்க கௌரவத்தை சம்பத் வங்கி சம்பாதித்துள்ளது.
வெளிப்படையான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் மீது வங்கி காண்பித்து வருகின்ற இடைவிடாத அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் வெளிக்காண்பித்துள்ளது.
Association of Chartered Certified Accountants (ACCA) Sri Lanka அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கல் வைபவமானதுரூபவ் கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
2004 ம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்ற ACCA Sri Lanka Sustainability Reporting Awards விருதுகள் நிகழ்வானது சூழல்ரூபவ் சமூக மற்றும் நிர்வாக ஆட்சி (ESG) குறித்த தகவல் விபரங்களை திறன்மிக்க முறையில் வெளிக்காண்பிக்கின்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரமளிப்பதுடன், நிறுவனப் பொறுப்புணர்வின் தரஒப்பீட்டு நியமமாகக் கருதுப்படுகின்றது.
அறிக்கையிடலில் அதியுயர் தராதரங்களைப் பேணுதல் மற்றும் நிறுவன மூலோபாயம் மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை மீண்டும் வலியுறுத்துவதில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பை சம்பத் வங்கிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.
ஏனைய நிறுவனங்களும் நிலைபேற்றியல் சார்ந்த விடயங்களை வெளிக்காண்பிப்பதை மேம்படுத்துவதற்கு இவ்விருதுகள் அவற்றை ஊக்குவிப்பதுடன், அவை மிகச் சிறந்த சர்வதேச நடைமுறைகளுடன் ஒன்றியுள்ளதை உறுதிப்படுத்தி, சமூகங்கள் மற்றும் சூழல் மீதான அவற்றின் விளைவை வெளிக்காண்பிப்பதையும் ஊக்குவிக்கின்றது.
சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அயோத்யா இத்தவெல பெரேரா , இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“நிலைபேற்றியல் என்பது எமது வணிகக் கோட்பாட்டின் மையமாக தொடர்ந்தும் காணப்படுகின்றது. பொறுப்புணர்வுமிக்க வங்கிச்சேவைக்கான எமது அணுகுமுறையைச் செதுக்குவதில் அதுவே எமது உயிர்நாடியாகக் காணப்படுகின்றது.
நிதியியல் பெறுபேற்றுத்திறன், சூழல் மற்றும் சமுதாயம் ஆகியவற்றை நோக்கிய எமது பொறுப்புக்கள் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணுவதில் எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நிலைபேற்றியல் அறிக்கையிடல் மூலமாக நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை வளர்ப்பதில் ACCA Sri Lanka ஆற்றும் பங்களிப்பினை நாம் போற்றுவதுடன், அர்த்தமுள்ள விளைவுகளை முன்னெடுப்பதற்காக எமது வெளிப்படுத்தல்களை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
துறை சார் வல்லுனர்களைக் கொண்ட சுயாதீன நடுவர் குழுவால் மிகவும் கடுமையான வழிமுறைகளின் கீழ் இது குறித்த மதிப்பீட்டு நடைமுறை இடம்பெறுவதுடன், முழுமை, நம்பகத்தன்மை, மற்றும் தொடர்பாடல் போன்ற முக்கியமான வகைப்பிரிவுகளின் அடிப்படையில் அறிக்கைகளை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ESG அறிக்கையிடல் தொடர்பான சம்பத் வங்கியின் விரிவான அணுகுமுறையானது Global Reporting Initiative (GRI) Standards, Integrated Reporting, மற்றும் Task Force on Climate-related Financial Disclosures (TCFD) போன்ற சர்வதேச கட்டமைப்புக்களுடன் ஒன்றியுள்ளதுடன், இந்த அங்கீகாரத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
நிலைபேற்றியல் தொடர்பான வங்கியின் முயற்சிகள் அறிக்கையிடலுடன் மாத்திரம் நின்று விடாது, அதற்கும் அப்பாற்சென்று, நிதியியல் உள்ளடக்கம், காலநிலை நெகிழ்திறன், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளதுடன், தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் நீண்ட கால அடிப்படையில் மதிப்பைத் தோற்றுவிப்பதில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.
தனது தொழிற்பாடுகளுடன் உள்ளிணைக்கப்பட்டுள்ள அம்சமாக, சம்பத் வங்கி நிலைபேற்றியலுக்கு தொடர்ந்தும் முன்னுரிமையளித்துள்ளதுடன், நெறிமுறை கொண்ட நிர்வாக ஆட்சி மற்றும் பொறுப்புணர்வுள்ள வணிகச் செயற்பாடுகள் அதன் வளர்ச்சி மூலோபாயத்தின் மையமாகத் தொடர்ந்தும் தங்கியுள்ளதை உறுதி செய்து வருகின்றது.
தனது நீண்ட கால நோக்கத்தில் நிலைபேற்றியல் உட்பொதிக்கப்படுவதன் மீது வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதுடன், நிதியியல் வளர்ச்சியை முன்னெடுக்கும் அதேசமயம், தான் சேவைகளை வழங்குகின்ற சமூகங்கள் மத்தியில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதில் முன்னின்று உழைத்து வருகின்றது. தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் அதனுடைய ESG முயற்சிகளை தொடர்ந்தும் வலுப்படுத்திரூபவ் நெகிழ்திறன் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்தை நோக்கிய அதன் பங்களிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
(இடமிருந்து வலப்புறமாக) திரு. அன்ட்றூ பட்றிக், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கலாநிதி லலித் வேரகொட - பிரதம மனிதவள அதிகாரி, சம்பத் வங்கிரூபவ் திரு. நுவான் பத்திரண - நிலைபேற்றியல் துறை தலைமை அதிகாரி, சம்பத் வங்கி, திரு. சமிந்த குமாரசிறி, தலைவர் ACCA Sri Lanka மற்றும் நிலுஷா ரணசிங்க, தெற்காசியாவிற்கான தலைமை அதிகாரி ACCA.
editor