95 வயது ஷின்சோன்ஜி தலைவர் லீ மான்-ஹீ விடுதலைக்கு ஐரோப்பிய அறிஞர்கள் கோரிக்கை

This press release contains allegations and opinions from Shincheonji Church and participating scholars regarding the detention of Lee Man-hee. For balanced reporting, it is advisable to attribute these claims clearly (e.g., "according to Shincheonji Church" or "participants at the conference said") and include the South Korean authorities' position or legal response if available.

95 வயது ஷின்சோன்ஜி தலைவர் லீ மான்-ஹீ விடுதலைக்கு ஐரோப்பிய அறிஞர்கள் கோரிக்கை

95 வயதான மதத் தலைவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது கொரியாவின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் காரியமாகும் : தலைவர் லீ மான்-ஹீயை விடுதலை செய்ய ஐரோப்பிய மத ஆய்வாளர்கள் கோரிக்கை....

ஷின்ஷோன்ஜி சபையின் 95 வயதான தலைவர் லீ மான்-ஹீ தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய மத ஆய்வாளர்கள் தென் கொரிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். 

தலைவர் லீ, அரசியல் கட்சிகள் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜூன் 24 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூன் 30 அன்று அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2021 ஜூலை முதல் 2024 ஜனவரி வரை, சுமார் 50,000 சபை உறுப்பினர்களை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் பதிவு செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தியதாக, போலீஸ்–வழக்கறிஞர் ஒன்றிணைந்த விசாரணை தலைமையகம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதற்கு பதிலளித்த ஷின்ஷோன்ஜி சபை, உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தலைவர் லீ மற்றும் சபை முழு விசாரணை காலத்திலும், சோதனைகள் மற்றும் ஆவண பறிமுதல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்திலும் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் தெரிவித்தது. மேலும், 95 வயதான முதியவரை தடுப்புக் காவலில் வைப்பது, உண்மையில் அவருக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதற்கு சமமானது என்று சபை தமது ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.


வன்முறையற்ற குற்றச்சாட்டுகளுக்காக முதியவரை தடுப்புக் காவலில் வைப்பது சர்வதேச சட்ட மீறல் என மத ஆய்வாளர்கள் கருத்து


ஐரோப்பா முழுவதும் உள்ள மத ஆய்வாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இணைக்கும் இலாப நோக்கமற்ற கல்வி வலையமைப்பான ஐரோப்பிய மத ஆய்வு அகாடமி (EuARe) தனது 9வது ஆண்டு மாநாட்டை ஜூலை 3 அன்று இத்தாலியின் ரோம் நகரில் நடத்தியது. அந்த மாநாட்டில், ஷின்ஷோன்ஜி சபை தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. "உலகளாவிய சூழலில் கொரியாவின் புதிய மதமாகிய ஷின்ஷோன்ஜி" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், பல ஐரோப்பிய மத ஆய்வாளர்கள் ஷின்ஷோன்ஜி சபையைப் பற்றிய தங்களது ஆய்வு அறிக்கைகளை கையளித்தனர். அப்போது, தலைவர் லீ கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட தென் கொரியாவின் சமீபத்திய நிலைமை பற்றியும் பங்கேற்பாளர்கள்  கலந்துரையாடினார் .

மத சமூகவியலாளர் மற்றும் CESNUR (Center for Studies on New Religions) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர் மாசிமோ இன்ட்ரோவிக்னே கூறியதாவது:
 


“ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களை சிறையில் அடைப்பது மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவசியமெனில் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுவர். அதுவும் வன்முறை குற்றங்கள் அல்லது உயிர் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ள சந்தர்ப்பங்களில் மட்டுமே. இங்கு அத்தகைய வன்முறை குற்றங்கள் எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகள் தேர்தல் சட்டம் தொடர்பானவை மட்டுமே.”

“இந்த முதிய மதத் தலைவரை தென் கொரியா நடத்தும் விதம், ஐக்கிய நாடுகள் சபையின் 'மண்டேலா விதிமுறைகள்' (Mandela Rules) உட்பட சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. குறிப்பாக, விசாரணைக்கு முன் தடுப்புக் காவல் என்பது பொதுவான நடைமுறையாக இருக்கக் கூடாது, மாறாக மிகவும் அரிதான விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே முதிய கைதிகளுக்கு அது பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாகும். இதன் பின்னணியில் அரசியல் மற்றும் மத ரீதியான ஓர் பழிவாங்கும் நோக்கம் மறைந்துள்ளது.”


இந்த நிகழ்வில் பங்குபற்றிய, மத நல்லிணக்க செயற்பாட்டாளரும், மத சுதந்திரத்திற்கான ஐரோப்பிய மதங்களுக்கு இடையேயான மன்றத்தின் (EIFRF) தலைவருமான எரிக் ரூவ் தனது உரையில் கூறியதாவது:

 “95 வயதான ஒருவரை சிறையில் அடைப்பது, மனித கண்ணியத்தை மதிக்கும் நோக்கிற்கு எந்த விதத்திலும்  பொருத்தமற்றது .அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், இந்த வயதுடைய ஒருவரை சிறையில் அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். எனவே, தென் கொரியாவின் சர்வதேச நற்பெயருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நிலைமையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். அந்த நபரை உடனடியாக சிறையிலிருந்து விடுவியுங்கள். அதை இப்போதே செய்யுங்கள். 

விளம்பர அநுபந்தம்