இலங்கை – பிரித்தானிய AI முன்முயற்சியான Happy Chimps, NVIDIA இன் Inception நிகழ்ச்சித் திட்டத்திற்கு தெரிவு
Sri Lanka-UK AI startup Happy Chimps has been selected for NVIDIA's Inception program, gaining access to advanced AI resources, cloud infrastructure support, and global innovation networks to accelerate AI solutions for small and medium-sized businesses.
கொழும்பு, இலங்கை/ லண்டன், ஐக்கிய இராஜ்ஜியம், ஜுலை 2026 – சுமார் ரூ 2.5 பில்லியன் பெறுமதி வாய்ந்த (£5 மில்லியன்), இலங்கை – பிரித்தானிய AI தொழில்னுட்ப நிறுவனமான Happy Chimps, அண்மையில் NVIDIA இன் Inception நிகழ்ச்சித் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. AI மற்றும் உயர்-செயல்பாட்டுக் கணிப்பீடு (HPC) சார்ந்த ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் virtual accelerator மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாக இது திகழ்கின்றது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் இயங்கும் முறையை மாற்றிமைப்பதற்கு AI ஐப் பயன்படுத்துகின்ற Happy Chimps நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் தெரிவு அங்கீகாரமளிக்கிறது. AI மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான முதலீடுகளும், NVIDIA உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கூட்டாண்மையும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான AI-ஆற்றல் கொண்ட operating systems இல் உலகளாவிய முன்னிலையாளராக மாறுவதற்கான இந்த ஆரம்பநிலை நிறுவனத்தின் இலக்கை விரைவுபடுத்துகின்றன.
NVIDIA இன் உலகளாவிய முயற்சி, தொழில்நுட்ப வளங்கள், கிளவுட் உட்கட்டமைப்பு ஆதரவு மற்றும் அதன் புதுமைப்படைப்பு சுற்றுச்சூழல் அமைப்பிற்கான அணுகல் ஆகியவற்றின் ஊடாக நம்பிக்கைக்குரிய AI ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Happy Chimps நிறுவனம் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 100,000 அமெரிக்க டொலர் வரையிலான cloud உட்கட்டமைப்பு ஆதரவு உள்ளிட்ட பலன்களைப் பெறவுள்ளது. இது, இந்நிறுவனம் தனது AWS உட்கட்டமைப்புச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதுடன், தனது AI திறன்களின் மேம்பாட்டை விரைவுபடுத்தவும் வழிவகுக்கும்.
அறிவித்தல் தொடர்பில் Happy Chimps இன் ஸ்தாபரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தினேஷ் மந்தாவல கருத்துத் தெரிவிக்கையில், “NVIDIA Inception நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பது Happy Chimps நிறுவனத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்பதுடன், எங்களது நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ளதொரு அங்கீகாரமுமாகும். AI நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு அளவிடக்கூடிய மதிப்பை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு சிறப்பம்சமும், வணிகங்கள் தங்களது இலாபத்தன்மையை அதிகரிக்கவும், அதிக வினைத்திறனுடன் இயங்கவும் மற்றும் தங்களது வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பவும் உதவுவதை மையமாகக் கொண்டுள்ளன. NVIDIA இன் இந்த அங்கீகாரம், அந்த இலக்கை விரைவுபடுத்துவதற்கான எங்களது திறனை மேலும் வலுப்படுத்துகின்றது.” என்றார்.
பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதை மட்டும் முதன்மையாகக் கொண்ட பாரம்பரிய POS சேவை வழங்குநர்களைப் போலன்றி, Happy Chimps நிறுவனம் வணிகங்கள் தங்களது வருமானத்தை அதிகரிக்கவும், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான AI-ஆற்றல் கொண்ட operating system ஐ உருவாக்கியுள்ளது. அத்துடன், இந்தத் தளம் தரகு இல்லாத ஒன்லைன் ஓர்டர் மாதிரியில் இயங்குவதால், வணிகங்கள் தங்களது வாடிக்கையாளர் தரவுகளின் முழுமையான உரிமையைத் தக்கவைத்துக்கொள்வதுடன், ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் அதிக இலாபத்தைத் தங்களின் வசம் வைத்திருக்கவும் அனுமதிக்கின்றது.
இதன் ஒருங்கிணைந்த தளம், வணிகங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், மீண்டும் வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் மற்றும் அதிகத் தகவலறிந்த வணிக முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும் வகையில், POS, கொடுப்பனவுகள், முன்பதிவுகள், விசுவாசத் திட்டங்கள், ஒன்லைன் ஓர்டர் செய்தல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், influencer கைகோர்ப்புகள், பகுப்பாய்வுகள், AI-ஆற்றல் கொண்ட வணிக நுண்ணறிவு மற்றும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நுகர்வோர் app ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது.
AI தொழில்நுட்பம் Happy Chimps நிறுவனத்தின் தயாரிப்பு வழிகாட்டியின் அடித்தளமாக அமைந்துள்ளது. வணிகர்கள் வாடிக்கையாளர்களின் நடத்தையைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கப்பட்ட சந்தைப்படுத்தலைத் தானியக்கமாக்கவும், தேவையைக் கணிக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் மற்றும் தரவு சார்ந்த புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும் வகையில், முன்கணிப்புச் சந்தைப்படுத்தல், AI-ஆற்றல் கொண்ட வணிக நுண்ணறிவு, வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம் (CRM) வாடிக்கையாளர் நடத்தைப் பகுப்பாய்வு மற்றும் அறிவார்ந்த வணிகப் பரிந்துரைகள் உள்ளிட்ட மேம்பட்ட திறன்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகின்றது.
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விருந்தோம்பல் வியாபாரங்களுக்கு Happy Chimps சேவைகளை வழங்குவதுடன், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியவற்றுக்கு விரிவாக்கம் செயற்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
Happy Chimps இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி – தினேஷ் மந்தாவல
Happy Chimps பற்றி
Happy Chimps ஒரு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான AI-ஆற்றல் கொண்ட operating system ஐ
உருவாக்கி வரும் ஒரு இலங்கை-பிரித்தானிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆரம்பத்தில் விருந்தோம்பல் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளை மையமாகக் கொண்டு செயற்படுகின்றது. இதன் அனைத்தையும் உள்ளடக்கிய தளம், POS, கொடுப்பனவுகள், முன்பதிவுகள், ஒன்லைன் ஓர்டர் செய்தல், விசுவாசத் திட்டங்கள், வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம் (CRM), டிஜிட்டல் சந்தைப்படுத்தல், AI-ஆற்றல் கொண்ட பகுப்பாய்வுகள் மற்றும் நுகர்வோர் ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. வணிகங்கள் தங்களது வருமானத்தை அதிகரிக்கவும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் மற்றும் வலுவான வாடிக்கையாளர் உறவுகளைக் கட்டியெழுப்பவும் உதவுவதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வளர்ச்சிக்காகத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை Happy Chimps நிறுவனம் மாற்றியமைக்கின்றது.
editor