TikTok மூலம் தொடங்கிய பயணம்… இன்று படைப்பாற்றல் நிறுவனத்தின் தலைவியாக உயர்ந்த டெசாரா
Desara transformed her passion for storytelling and TikTok content creation into a successful entrepreneurial journey, founding House of Creates and building a career in branding, marketing, and creative solutions.
ஒவ்வொரு வணிகமும் சந்தையிலுள்ள ஒரு இடைவெளியை அல்லது வியூகத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஆரம்பிக்கப்படுவதில்லை. சில வணிகங்கள், அதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விருப்பம் அல்லது உணர்வை மையமாகக் கொண்டு தொடங்கப்படலாம். அது பின்னர் நமது தொழிலாக மாறும் என்பதை நாம் உணர்வதற்கு முன்பிருந்தே, நமது வாழ்நாள் முழுவதும் நம்மை அதன்பால் ஈர்த்து வைத்திருப்பதற்கு அது காரணமாக அமைகிறது. சிலருக்கு அது திட்டமிடல், தொழில்நுட்பம், இசை அல்லது விளையாட்டாக இருக்கலாம்.
ஆனால், டெசாராவைப் பொறுத்தவரை அது எப்போதும் கதைகூறல் (Storytelling) ஆக மட்டுமே இருந்தது. முன்னணி பிராண்ட் விளம்பரங்கள், உள்ளடக்க உருவாக்கம், தொழில்முனைவு மற்றும் தனது சொந்த படைப்பாற்றல் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, அவர் மனிதர்களையும் அவர்களின் பல்வேறு கதைகளையும் பெரிதும் விரும்பினார். பாடசாலை மாணவியாக இருந்த காலத்திலிருந்தே, வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான விடயங்களைச் செய்யும் பிற இளைஞர்களை சமூகத்தின் முன் கொண்டு வரும் ஒரு சிறப்பான தளத்தை உருவாக்குவது பற்றி அவர் அடிக்கடி சிந்தித்தார்.
இன்று அவர் உள்ளடக்க உருவாக்கம், பிராண்டிங், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முனைவு ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து, 'House of Creates' என்ற தனது சொந்த படைப்பாற்றல் நிறுவனத்தை வழிநடத்தும் அதே வேளையில், வுமைவுழம மூலம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் ஒரு சிறந்த கதைகூறாளராக இருந்தார். பல்வேறு துறைகளில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளைஞர்களை நேர்காணல் செய்து, அவர்களைப் பற்றிய விபரங்களை பரந்த அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கமாக இருந்தது. 'Teens Report' என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டம் அவரது முதல் வணிக முயற்சியாக அமைந்தது. பின்னர் அதை நிறுத்த வேண்டியிருந்தாலும், அது அவரது தொழில் வாழ்க்கைக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்தது என்பதில் இரகசியமில்லை. பாடசாலைப் படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் நுழைந்த பிறகு, டெசாரா தனது நிஜ வாழ்க்கை விபரங்களை மிகவும் வெளிப்படையாக இணையத்தில் பகிரத் தொடங்கினார். அவர் வுமைவுழம தளத்தில் வீடியோக்களைப் பதிவேற்றி, அதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் தொடர்ந்து வீடியோக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார், இதுவே பின்னர் அவரது வெற்றிகரமான தொழில் வாழ்க்கையாக மாறிய வணிக அடித்தளமாக அமைந்தது. எவ்வாறாயினும், அந்த நேரத்தில் அவர் ஒரு தொழில்முனைவு அல்லது நிறுவன உரிமையாளர் ஆவது பற்றி சிந்திக்கவில்லை. அன்றாடம் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளை மட்டுமே அவர் எதிர்கொண்டார். “இது இவ்வளவு பெரிய விடயமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் முன்னோக்கிச் சென்றேன், அவ்வளவுதான்,” என்று அவர் கூறினார்.
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது தனது வாழ்நாள் கனவு என்று கூறும் பல படைப்பாளர்களைப் போலல்லாமல், தன்னை இந்த நிலைக்குத் தூண்டிய உண்மையான காரணத்தை அவர் மிகவும் நேர்மையாக வெளிப்படுத்துகிறார். நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற கடுமையான அழுத்தமும் தாக்கமுமே நான் இதில் ஈடுபடக் காரணம் என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்கள் மூலம் உள்ளடக்கங்களை உருவாக்குவதை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், டெசாரா பாரம்பரிய கருத்துக்களுக்கு சவாலாக விளங்க வேண்டியிருந்தது. அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை அவருக்கு ஏற்பட்ட விமர்சனங்கள் காரணமாகவே அமைந்தது. இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பணிபுரிந்து கொண்டே, அவர் தனது TikTok ரசிகர் சமூகத்தையும் வளர்த்தெடுத்தார். பின்னர், பல இளம் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் ஒரு தீர்மானத்தை அவரும் எதிர்கொண்டார். அதாவது, தொடர்ந்து மற்றொருவரின் வணிகத்தை உருவாக்குவதற்காக உழைப்பதா, அல்லது தனது சொந்த வணிகத்தை உருவாக்குவதற்கான சவாலை எதிர்கொள்வதா என்பதாகும். வுமைவுழம மூலம் அவர் கற்றுக்கொண்ட கதைகூறும் திறன், பார்வையாளர்களின் உளவியல் மற்றும் ரசிகர் சமூகங்களை உருவாக்குவதில் பெற்ற அனுபவங்கள் ஆகியவை அவரது புதிய வணிகத்தின் அடித்தளமாக மாறின.
#WomenInBusiness, #Entrepreneurship, #SmallBusiness, #TikTokSriLanka ஆகிய ஹேஷ்டேக்குகள் ஊடாக டெசாரா வெறும் வீடியோக்களை மட்டும் பதிவிடாமல், தன்னைப்போலவே ஒரே நோக்கத்திற்காக உழைக்கும் சக தோழமைகளையும் கண்டறிந்தார். காலப்போக்கில், இந்தத் தொடர்புகள் மூலம் வணிக வாய்ப்புகள் உருவாகத் தொடங்கின. சாதாரண உள்ளடக்க உருவாக்கத்துடன் தொடங்கிய இந்தப் பயணம், வேறு எந்த வகையிலும் பெற்றிருக்க முடியாத பிராண்ட் கூட்டாண்மைகள், வணிக உறவுகள் மற்றும் வாடிக்கையாளர் வாய்ப்புகள் வரை நீண்ட தூரம் பயணித்தது. ஒவ்வொரு புதிய விளம்பரப் பிரச்சாரமும் அவருக்குத் தொடர்பாடல் பற்றிய ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. இன்று, அவரது வணிக நிறுவனம் தங்களுடன் இணைந்து பணியாற்றும் பிற பிராண்டுகளுக்காகவும் இந்த வெற்றிகரமான கதைகூறும் கலையை பயன்படுத்துகிறது.
தனது வணிக நிறுவனம் பரந்த அளவிலான சந்தைப்படுத்தல் மற்றும் படைப்பாற்றல் சேவைகளை வழங்கிய போதிலும், இவை அனைத்தும் உருவான விதம் குறித்து டெசாராவிடம் ஒரு அடக்கமான பெருமிதம் உள்ளது. அவரது நிறுவனம் தனது இரண்டாவது ஆண்டைக் குறிக்கும் இந்த வேளையில், தனது வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க அவர் மறக்கவில்லை. “எங்களது முதல் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில், இந்தப் பயணத்தில் பங்காளிகளாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த அனைத்து சவால்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்றார்.
editor