இலங்கையில் ‘கஸ்பர்ஸ்கி-பாதுகாப்பான வாழ்க்கை’ நிகழ்வு வேகமான அச்சுறுத்தல் பதிலளிப்புக்கு அழைப்பு விடுக்கிறது

Kaspersky showcased the importance of rapid cyber threat detection and response at its KasperskySecure Live in Sri Lanka event, highlighting AI-powered security, XDR solutions, SOC transformation, and evolving cyber threats facing Sri Lankan organizations.

இலங்கையில் ‘கஸ்பர்ஸ்கி-பாதுகாப்பான வாழ்க்கை’ நிகழ்வு வேகமான அச்சுறுத்தல் பதிலளிப்புக்கு அழைப்பு விடுக்கிறது



கஸ்பர்ஸ்கி [Kaspersky] நிறுவனம் அண்மையில் இலங்கையில் கஸ்பர்ஸ்கி- பாதுகாப்பான வாழ்க்கை [KasperskySecure: Live] நிகழ்வை நடத்தியது. கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 80 முதல் 90 வரையிலான சைபர் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், வங்கித் துறை பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப பங்குதாரர்கள்
கலந்துகொண்டனர். ஒரு அச்சுறுத்தல் கண்டறியப்பட்ட பின்னர், ஒரு நிறுவனம் அதற்கு உண்மையில் எவ்வளவு விரைவாகப் பதிலளிக்க முடியும்? என்ற ஒரே முக்கியக் கேள்வியை மையமாகக் கொண்டு இந்த மாலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு ஜூலை 16 ஆம் திகதி சினமன் ஃலைப் ஹோட்டலில் நடைபெற்றது.


இலங்கையில் மாறிவரும் சைபர் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்த பார்வையுடன் இந்த மாலை நிகழ்வு ஆரம்பமானது. இந்த அமர்வை, கஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா (SEA) மற்றும் AEC பிராந்தியங்களுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் எலிசபெத் ஷென் மற்றும் இலங்கைக்கான AEC பிராந்திய ஊடக முகாமையாளர் மொஹ்னிஷ் மனுகுலசூரிய ஆகியோர் இணைந்து வழிநடத்தினர்.


நாளாந்தம் புதிய தீம்பொருள்[malware] தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும் , 2019-ல் 340,000 ஆக இருந்த புதிய மாதிரிகள் 2025-ல் 500,000 ஆக அதிகரித்ததையும் ஷென் விளக்கினார். இவை சிக்கலான இலக்கு தாக்குதல்களை விட சாதாரணக் குற்றங்களே ஆகும். மேலும் ஹண்டாலா இயக்கம் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் மீறல் போன்ற சம்பவங்களின் மூலம் ஒற்றை ஊடுருவலின் தாக்கத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

Safe Project (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபைசான் மரிக்கார், இலங்கையில் கஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்கியதுடன், தற்போதைய அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுவது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.அதனைத் தொடர்ந்து, Safe Project (Pvt) Ltd நிறுவனத்தின் முறைமைகள் பொறியியலாளர் மற்றும் OSMP மற்றும் XDR தீர்வுகள் நிபுணரான மிலிந்தன் நிமேஷ், கஸ்பர்ஸ்கியின் Open Single Management Platform மற்றும் XDR Expert தளங்களின் திறன்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, மொஹ்னிஷ் மனுகுலசூரிய தலைமையில் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் செயற்பாட்டு உத்தியை உருவாக்குவது குறித்து நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்புச் செயற்பாடுகள் நிலையம் (Security Operations Centre — SOC) மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது — மனிதவளம், செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் — என அவர் விளக்கினார். மேலும், பார்வைத்திறன் அடுக்காக SIEM மற்றும் பதிலளிப்பு அடுக்காக XDR ஆகியவற்றின் தொடர்புடைய பங்குகளையும் அவர் விளக்கினார்.


அவர், EDR Foundations, EDR Optimum மற்றும் XDR Expert ஆகிய நிலைகளில் வழங்கப்படும் Kaspersky Next தீர்வையும் அறிமுகப்படுத்தினார். கணினி சாதன பாதுகாப்பு[ Endpoint Detection], நுண்ணறிவு அச்சுறுத்தல் [Threat Intelligence],
தீங்கிழைக்கும் கருவிகளை கண்டறிந்து முகாமைத்துவம் செய்தல் [Managed Detection and Response] மற்றும் வலையமைப்பு கண்டறிதல்[Network Detection] ஆகிய திறன்களை ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் இந்தத் தீர்வானது, முன்கூட்டியே உள்ளமைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்புகளைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கஸ்பர்ஸ்கியின் தளத்தில் நவீன SOC ஒன்று எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கமும் வழங்கப்பட்டது. இதில், அதன் தீங்கிழைக்கும் கருவிகளை கண்டறிந்து முகாமைத்துவம் செய்தல் சேவை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான நேர்மறை எச்சரிக்கைகளை சுமார் 30 சதவீதம் குறைத்து, எச்சரிக்கைகளை வகைப்படுத்தி முன்னுரிமைப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தும் விதமும் விளக்கப்பட்டது. இதன் மூலம், மேலதிக ஊழியர்களை நியமிக்காமல், பாதுகாப்புக் குழுக்களுக்கு ஒருங்கிணைந்த நோக்கு த்திறனையும் நிபுணர் ஆதரவையும் வழங்க முடிகிறது.


“இலங்கை நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. இது ஒரு நல்ல விடயமாகும். அதேவேளை தாக்குதலுக்குள்ளாகும் பரப்பளவும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. மீண்டும் மீண்டும் நாம் காண்பது கருவிகளின் பற்றாக்குறை அல்ல; ஒருங்கிணைப்பின் பற்றாக்குறையாகும். குழுக்களுக்கு ஒரு இடத்தில் பார்வைத்திறன் இருக்கிறது, மற்றொரு இடத்தில் பதிலளிக்கும் திறன் இருக்கிறது. தாக்குதலாளர்கள் துல்லியமாக அந்த இடைவெளியையே பயன்படுத்திக் கொள்கிறார்கள்,” என மனுகுலசூரிய தெரிவித்தார்.

மாலை நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘இலங்கையில் சைபர் மீள்திறனை வர்த்தக முன்னுரிமையாக முன்னெடுத்தல்’ (Driving Cyber Resilience as a Business Priority in Sri Lanka) என்ற தலைப்பிலான கலந்துரையாடலில், மொஹ்னிஷ் மனுகுலசூரிய, Safe Project (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மிதில பெரேரா
மற்றும் South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப மூலோபாய அதிகாரி ஷபீர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் அச்சுறுத்தல் நிலைமை எவ்வாறு மாறிவருகிறது என்பது குறித்து குழுவினர் கலந்துரையாடினர். தாக்குதல்களிலும் பாதுகாப்பிலும் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் பங்கு, நடைமுறையில் உண்மையில் பயனளிக்கும் பாதுகாப்பு அணுகுமுறைகள் மற்றும் நாட்டில் மாறிவரும் ஒழுங்குமுறை இணக்கப்பாட்டு சூழல் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதில் இலங்கை மத்திய வங்கியின் புதிய சம்பவ அறிக்கையிடல் தேவைகள், தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் எதிர்வரும் சைபர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கும். நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை, இணக்கப்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் போதுமா அல்லது உண்மையான பாதுகாப்பை உறுதி செய்ய அதற்கு அப்பாலும் செல்ல வேண்டுமா என்ற முக்கியக் கேள்வியுடன் கலந்துரையாடல் நிறைவடைந்தது.


இலங்கையில் கஸ்பர்ஸ்கியின் செயல்பாடுகள், நிறுவனங்களின் பாதுகாப்புச் செயற்பாட்டு நிலைய (SOC) மாற்றத்தை முன்னெடுப்பதற்கான பரந்த பிராந்திய அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகப் பெற்ற நிறுவன அனுபவத்தையும், உலகளவில் 17,500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களையும் 200,000 நிறுவன வாடிக்கையாளர்களையும் கொண்ட வலையமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு, அச்சுறுத்தலைக் கண்டறிவதற்கும் அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் இடையிலான இடைவெளியை குறைக்க உள்ளூர் பாதுகாப்புக் குழுக்கள் முயன்று வருகின்றன.