குருணாகல் வயல் வெளியில் மீட்கப்பட்ட சிசுவின் வீடியோவா ? 

A video circulating on social media claiming to show an infant discovered in a Kurunegala paddy field has been proven fake by a fact-check conducted by mininewshub.com.

குருணாகல் வயல் வெளியில் மீட்கப்பட்ட சிசுவின் வீடியோவா ? 

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு mininewshub.com உண்மை சரிபார்ப்பில் ஈடுபட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் “இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்னப்பட்ட சிசு தாதியர்களால் பராமரிக்கப்படும் காட்சி.. என்றும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தும் சிசுவின் காணொளியென்ற ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இது உண்மையென நினைத்து பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில பிரதான ஊடகங்களும் அதனை செய்தியாக்கி பகிர்ந்துள்ளன. 

Fact Check (உண்மைஅறிவோம்)

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் கடந்த வியாழக்கிழமை (17.07.2025) பிற்பகல் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியில் பின்னணியில் தற்போது, குழந்தை தொடர்பில் பல காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.

நாம் குறித்த காணொளிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இரு காணொளிகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

https://www.awesomescreenshot.com/video/42263403?key=2d598c838c8e8fd34aa46aaf05e20f1c

காணொளி

">

இது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி  ihaan_aizel என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததமை காணக்கிடைத்தது.


மேலும் இதே குழந்தையின் பல காணொளிகள் குறித்த இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது.

https://www.awesomescreenshot.com/video/42267174?key=de0ef199fdbb0f8d5b84b6dfa83d1423 

காணொளி

இது borncutebabies என்ற யூடியுப் தளத்தில் கடந்த 15 ஆம் திகதி (15.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குறித்த குழந்தை சிங்கபுரவீதி வயல் வெளியில் கடந்த 17 ஆம் திகதி (17.07.2025) தான் கிடைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் இந்த காணொளிகள் அதற்கு முன்னரே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாம் தொடர்ந்து இது தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்ட நிலையில், සංකුට්ටි என்ற பேஸ்புக் பக்கத்தில் குறித்த குழந்தையின் காணொளி பதிவேற்றப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. 

https://www.facebook.com/100066420192542/videos/1396493721463786


Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு சமூக ஊடகங்களில் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94741148928) தொடர்புகொள்ளுங்கள்.