இலங்கையில் 20 ஆண்டுகள் மகத்துவத்தைக் கொண்டாடும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்

இலங்கையில் 20 ஆண்டுகள் மகத்துவத்தைக் கொண்டாடும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்

பொதுக் காப்புறுதியில் இலங்கையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகளாவிய பெருநிறுவனமான Allianz SE ன் அங்கமுமான அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட், தேசத்திற்கு இடைவிடாத சேவையை வழங்குவதில் 20 ஆண்டுகள் நிறைவை பெருமையுடன் எட்டியுள்ளது. 


2005 ல் தான் இயங்க ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, பல்வகைப்பட்ட தேவைகளை  நிறைவேற்றும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளுடன், இலங்கை மக்களைக் காப்பதில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. 


மிகவும் பெறுமதியானவற்றைப் பாதுகாத்து, தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட்டின் அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்த சாதனை மைல்கல் காணப்படுகின்றது. ஜேர்மனி, மியூனிக் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள Allianz SE ன் அங்கமான அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட், உலகின் முன்னணி நிதியியல் சேவைகள் வழங்குனர்களில் ஒன்றின் ஒப்பற்ற உலகளவிய பலத்தின் நன்மைகளைக் கொண்டுள்ளது. 


காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவம் ஆகியவற்றில் அதன் நிபுணத்துவத்திற்காக புகழ்பெற்றுள்ள Allianz SE, 2024 ல் Interbrand மற்றும் Brand Finance ஆகியவற்றால் “World’s No. 1 Insurance Brand” (உலகின் முதற்தர காப்புறுதி நாமம்) என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் அலியான்ஸ் சம்பாதித்துள்ளமை மகத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் அதன் உலகளாவிய நன்மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.


20 ஆண்டுகளாக, மோட்டார் மற்றும் சுகாதாரப் காப்புறுதி முதல் விசேட வர்த்தக காப்புறுதி வரை, பல்வகைப்பட்ட தீர்வுகளுடன் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் இலங்கை மக்களை காத்து வந்துள்ளது. சர்வதேச அனுபவம் மற்றும் உள்நாடு தொடர்பான ஆழமான புரிதல் ஆகியவற்றின் இணைப்புடன், நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற நன்மதிப்பை அது சம்பாதித்துள்ளதுடன், தனிநபர்களும், வணிகங்களும் நெகிழ்திறன் மற்றும் நிதியியல் பாதுகாப்பைக் கட்டியெழுப்ப உதவி வருகின்றது. அவை விலைமதிப்பற்றவை என்பதாலேயே  அலியான்ஸ் முக்கியமானது.


அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதனை மைல்கல்லைக் கொண்டாடும் தருணத்தில், நேர்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றும் தனது இலக்கில் அந்நிறுவனம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. எதிர்காலத்தில், தனது வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை இன்னும் ஆழமாக்கி இன்னும் கூடுதலான அளவில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு மிகவும் முக்கியமானவற்றை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள உதவும் நோக்குடன் அலியான்ஸ் பயணித்து வருகின்றது.