அன்ரோ டினேஷின் ‘தி சயன்டிஃபிக் ஆர்ட் ஒஃப் கராத்தே’ நூல் அயர்லாந்தில் வெளியிடப்பட்டது
கராத்தே நிபுணர் அன்ரோ டினேஷ் எழுதிய ‘தி சயன்டிஃபிக் ஆர்ட் ஒஃப் கராத்தே: பவர், பிரிசிஷன், பிரின்சிபிள் & லீடர்ஷிப்’ நூல் அயர்லாந்தின் அத்லோனில் வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் அன்ரோ டினேஷ் இன் கராத்தேயின் அறிவியல் கலை: சக்தி, துல்லியம், கோட்பாடு, தலைமைத்துவம் The Scientific Art of Karate : Power, Precision, Principle, Leadership எனும் நூல் அயர்லாந்தின் அத்லோனில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
பிரதம விருந்தினராக கவுன்சிலர் பிராங்கீனா Frankie Keena முதல் பிரதியினைவெளியிட்டதோடு, நிகழ்வு SKAI கலையக சபை உறுப்பினர் காண்டீபன் சோமசூரியசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
வணிக நிர்வாக முதுகலைப் பட்டதாரியான அன்ரோ டினேஷ் கராத்தே கலையில் சிஹான் தரத்தினை 2012 இல் ஜக்கிய அமெரிக்காவிலும், 2017 இல் ஜப்பானிலும், கியோஷி தரத்தினை 2020 இல் ஜக்கிய அமெரிக்காவிலும் நேரடியாக உயர்தர பயிற்சிகளை கற்று, உயர்தர டான் டிப்ளோமா தேர்வில் தேர்ச்சிபெற்று பெற்றுள்ளார்.
மேலும் அன்ரோ டினேஷ் தற்காப்புக்கலை வரலாறு மற்றும் நுட்பங்கள், கராத்தே கலை அங்கீகாரத்திற்கான வழிமுறை எனும் இரண்டு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் கராத்தே சம்மேளனம் JKF இன் உறுப்பினரான அன்ரோ டினேஷ் ஸ்ரீலங்கா கராத்தே தேசிய அணியை தெரிவுசெய்யும் தெரிவிக்குழவின் தலைவராகவும் பணியாற்றியுள்தோடு, அங்கீகரிக்கப்பட்ட கராத்தே நடுவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
editor