BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை
BestWeb.LK 2026 விருது விழாவில் சிறந்த வாகன இணையத்தளப் பிரிவில் OneDriver.lk வெள்ளி விருதை வென்றுள்ளது. HighFlyer Global உடனான தொழில்நுட்ப கூட்டாண்மை அதன் டிஜிட்டல் மாற்றத்திற்கு பங்களித்துள்ளது.
இலங்கையின் முன்னணி Driver-as-a-Service சேவையான OneDriver.lk, BestWeb.LK 2026 விருது விழாவில் Best Automotive Website பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி கிடைத்த இந்த அங்கீகாரம், கையால் எழுதப்பட்ட booking பதிவுகளிலிருந்து முழுமையாக தானியங்கி மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவையாக OneDriver வளர்ச்சியடைந்த பயணத்தை பிரதிபலிக்கிறது.
இந்த வளர்ச்சியில் OneDriver மற்றும் HighFlyer Global நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான கூட்டாண்மை முக்கிய பங்காற்றியுள்ளது. OneDriver பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்திய நிலையில், HighFlyer அதன் டிஜிட்டல் மாற்றத்துக்கான தொழில்நுட்பத் திட்டம், பொறியியல் ஆதரவு மற்றும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
OneDriver ஆரம்பத்தில் Drink’nDrive என்ற சேவையாக தொடங்கியது. இரவு நேர நிகழ்வுகளுக்குப் பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த வாகனத்திலேயே பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு உதவுவதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. வாடிக்கையாளரிடம் தொழில்முறை சாரதி ஒருவர் சென்று, வாடிக்கையாளரையும் அவரது வாகனத்தையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
தற்போது விமான நிலையப் பயணங்கள், நிறுவனப் பயணங்கள், நிகழ்வுகள், நீண்ட தூரப் பயணங்கள், சுற்றுலா மற்றும் வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் OneDriver சாரதி சேவைகளை வழங்கி வருகிறது.
2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும், 35க்கும் மேற்பட்ட தொழில்முறை சாரதிகளுடனும் 24 மணி நேரமும் சேவை வழங்கும் OneDriver, இலங்கையின் முன்னணி Driver-as-a-Service நிறுவனமாக வளர்ந்துள்ளது.
HighFlyer Global இன் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், கையால் எழுதப்பட்ட booking முறையானது bookings, சாரதி ஒதுக்கீடு, கட்டண நிர்ணயம், tracking, notifications, invoicing மற்றும் payments உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் ERP தளமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் agentic AI தொழில்நுட்பம் மூலம் நிர்வாகத்தினர் இயல்பான மொழியில் கேள்விகளை எழுப்பி தகவல்களைப் பெறுவதுடன், தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். சாரதிகளுக்கான உள்நாட்டு செயலி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இயங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்காக தனியான செயலியை உருவாக்க OneDriver திட்டமிட்டு தவிர்த்துள்ளது. இரவு நேர நிகழ்வுக்குப் பின்னர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, கடவுச்சொல்லை நினைவில் வைத்திருப்பதை விட, தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp செய்தி மூலம் உண்மையான ஒருவரைத் தொடர்புகொண்டு சாரதியை முன்பதிவு செய்வது எளிமையானது என நிறுவனம் கருதுகிறது.
“எமது வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு செயலி தேவையில்லை. அவர்கள் உண்மையான ஒருவருடன் பேசித் தங்களுக்கான சாரதியை முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள். அவ்வளவுதான்,” என OneDriver நிறுவனர் லக்மால் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
BestWeb.LK 2026 விருது, OneDriver இன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட சேவை அணுகுமுறைக்கும் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
editor