‘ஆசியாவின் முன்னணி விமான நிறுவன வர்த்தகநாமம் 2026’ விருதை வென்ற Vietjet

மாலைதீவில் நடைபெற்ற World Travel Awards விருது விழாவில் Vietjet விமான நிறுவனம் ‘ஆசியாவின் முன்னணி விமான நிறுவன வர்த்தகநாமம் 2026’ என்ற விருதை வென்றுள்ளது. உலகளாவிய ரீதியில் தனது வலையமைப்பை விரிவுபடுத்தி வரும் Vietjet, இலங்கையையும் தனது புதிய பயணத் தளங்களில் ஒன்றாக இணைத்துள்ளதுடன், கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு இடையிலான நேரடி விமான சேவையையும் ஆரம்பித்துள்ளது.

‘ஆசியாவின் முன்னணி விமான நிறுவன வர்த்தகநாமம் 2026’ விருதை வென்ற Vietjet

கொழும்பு, 29 செப்டெம்பர் 2026 – மாலைதீவில் நடைபெற்ற World Travel Awards விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் முன்னணி விமான சேவை வர்த்தக நாமம் 2026 என Vietjet பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, தனது சர்வதேச பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


சர்வதேச அளவில் சர்வதேசப் போட்டித்தன்மை கொண்ட வியட்நாமிய விமான சேவை வர்த்தக
நாமத்தைக் கட்டியெழுப்பும் அதன் பயணத்தில் இதுவொரு புதிய மைல்கல்லாக அமைவதுடன்,
இலங்கை தற்போது அதன் புதிய பயணப் பகுதிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


சுற்றுலா மற்றும் பயணத் துறையில் உலகளவில் மிகவும் மதிப்பிற்குரிய விருதுகளில் ஒன்றாக திகழும் World Travel Awards, உலகளவில் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. துறை சார்ந்த வல்லுநர்கள், பயணிகள் மற்றும் நுகர்வோரின்
வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர்.


2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை “வாடிக்கையாளர் அனுபவத்தில் ஆசியாவின் முன்னணி விமான சேவை” விருதையும், 2024 ஆம் ஆண்டில் “ஆசியாவின் முன்னணி விமான சேவை வெகுமதித் திட்டம்” விருதையும் வென்றதைத் தொடர்ந்து, World Travel Awards நிகழ்வில் Vietjet பெற்றுள்ள இந்த ஆண்டின் அங்கீகாரமானது, அதன் வலுவான சாதனைப் பயணத்தை மேலும் விரிவுபடுத்துகிறது.


போட்டித்தன்மைமிக்க பயணக் கட்டணங்கள், பலதரப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உள்ளடக்கம், தனித்துவமான வர்த்தக நாம அடையாளம் மற்றும் சர்வதேச தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைக் கொண்ட பலவகைப்பட்ட பயணிகள் தொடுபுள்ளிகள் ஊடாக Vietjet முன்னெடுக்கும் தொடர்ச்சியான வர்த்தக நாம வளர்ச்சியை இப்புதிய அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. 


தனது வலையமைப்பு மற்றும் அளவை விரிவுபடுத்துவதற்கு மேலதிகமாக, Vietjet மொத்தப் பயணிகளின் அனுபவத்தையும் தொடர்ச்சியாக மேம்படுத்தியவாறு, Hybrid Airline Modelக்கு மாறி
வருகிறது. 


Vietjet இன் பிரதம நிறைவேற்று அதிகாரி குயேன் தான்ஹ் சன் கருத்துத் தெரிவிக்கையில்,


“Vietjet நிறுவனம் தனது வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைப்பதுடன், பலதரப்பட்ட தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அனுபவங்களின் போர்ட்ஃபோலியோவைக் கொண்ட முன்னணி Hybrid Airline சேவையாக தன்னை மறுபதிவு செய்து வருகிறது.


இலக்குகளைக் எய்துவது மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு சிறந்த மதிப்பு, சொகுசான அனுபவங்கள் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளையும் உருவாக்கும் Vietjet ஐ நாங்கள் தொலைநோக்காகக் கொண்டுள்ளோம். உலகளாவிய முத்திரையைக் கொண்ட ஓர் ஆசிய விமான சேவை வர்த்தக நாமத்தைக் கட்டியெழுப்புவதுடன், வியட்நாமின் புதுமைப் படைப்பாற்றலின் ஆற்றலை Vietjet புதிய எல்லைகளுக்குத் தொடர்ந்து கொண்டு செல்லும்.” என்றார்.


பிரான்ட் ஃபினான்ஸ் இன் பிரகாரம், 2026 ஆம் ஆண்டில் Vietjet இன் வர்த்தக நாமப் பெறுமதி 117% இனால் உயர்ந்து 906 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. அதனூடாக, உலகின் சிறந்த 50 பெறுமதி வாய்ந்த விமான சேவை வர்த்தக நாமங்கள் வரிசையில் நிலை நிறுத்தியிருந்ததுடன், உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமான சேவை வர்த்தக நாமமாகவும் திகழ்ந்தது. Vietjet இன் சர்வதேச விரிவாக்க மூலோபாயம், ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஐரோப்பா போன்ற தொலைதூர பகுதிகளுக்கு விரிவாக்கப்படுகின்றமை இதில் முக்கிய பங்காற்றியிருந்தது.


2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், Vietjet, 46 உள்நாட்டு மற்றும் 167 சர்வதேச பாதைகள் உட்பட 213 வான்வழிப் பாதைகளைக் கொண்ட தனது வலையமைப்பில் 72,000 விமானச் சேவைகள் ஊடாக 13.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. 


இந்நிறுவனம் இலங்கை, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கசகஸ்தான் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கான புதிய வான்வழிப் பாதைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 18, 2026 அன்று ஆரம்பிக்கப்பட்ட கொழும்புக்கும் Ho Chi Minh City இடையிலான நேரடி விமானச் சேவையானது, இலங்கைப் பயணிகளை முதன்முறையாக வியட்நாமுடன் நேரடியாக இணைக்கிறது.


வியட்நாமில் இருந்து இயங்கும் Vietjet, ஓர் ஆசிய விமான சேவை வர்த்தக நாமத்தை உலகளவில்
கொண்டு சேர்ப்பதுடன், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் பல்வேறு
இலக்குகள், மக்கள் மற்றும் வாய்ப்புகளை ஒன்றிணைக்கிறது; இதில் இலங்கையும் தற்போது
உள்ளடங்கியுள்ளது.

33 ஆவது World Travel விருதுகள் வழங்கலில் Vietjet இற்கு ஆசியாவின் முன்னணி விமானசேவை வர்த்தக நாமம் 2026 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Vietjet பற்றி:


புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.


Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.