கண்டியில் வெற்றிகரமாக நடைபெற்ற CDB SMB வர்த்தகக் கண்காட்சி | உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்பு
CDB successfully hosted its sixth SMB Fair in Kandy, bringing together Sri Lanka's small and medium businesses to showcase local products, promote entrepreneurship, and introduce seamless digital payments through CDB SELF QR with a 25% cashback offer.
CDB இன் நிலைபேறான தன்மைக்கான உத்தியின் (Sustainability Strategy) கீழ், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு விசேட முயற்சியாக அதன் ஆறாவது சிறிய மற்றும் நடுத்தர வணிகக் கண்காட்சி (SMB Fair) முன்னெடுக்கப்பட்டது.
ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில், கண்டியின் ‘சஹஸ் உயன’ (Sahas Uyana) வளாகம் இத்தகையதொரு வலுவூட்டலுக்கான களமாக மாறியதுடன், சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லையும் எட்டியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வில், நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் பன்முகத்தன்மை, மீள்திறன் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் இலங்கையின் டிஜிட்டல் சந்தைத் தளத்தை (digital marketplace) நேரடியாக அனுபவித்தனர்.
இந்தக் கண்காட்சியானது உணவு மற்றும் பானங்கள், ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள், அணிகலன்கள், பத்திக் (batik) கலைப்படைப்புகள், கைவினை பைகள் மற்றும் விவசாய உற்பத்திப்
பொருட்கள் என பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒரு சிறந்த சங்கமமாக விளங்கியது.
இதில் பங்கேற்ற வர்த்தகர்களுக்கு, இந்நிகழ்வு வெறுமனே காட்சிப்படுத்துதலாக மட்டுமன்றி, வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான ஒரு தளமாகவும் அமைந்தது. தங்களுக்கு
வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு குறித்து வணிகர்கள் தங்களது நெகிழ்ச்சியான நன்றியறிதலைத்
தெரிவித்ததுடன், எதிர்காலக் கண்காட்சிகளிலும் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
சிறு வணிகங்களின் வளர்ச்சியின் உந்துசக்தியாக இந்த வர்த்தகக் கண்காட்சி பெற்று வரும் நற்பெயரை
இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குறிப்பாக CDB SELF QR கட்டண முறைகள் மூலம் வழங்கப்பட்ட பிரத்தியேக 25% பண மீளப்பெறல் (cashback) சலுகைக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததுடன், தடையற்ற டிஜிட்டல் கட்டண முறையையும் அவர்கள் முதன்முறையாக அனுபவித்தனர். இந்த மேம்படுத்தப்பட்ட வசதியானது உள்ளூர் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வணிகச் (SMB) சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க
முயற்சியாக இதைப் பல தரப்பினரும் பாராட்டியதுடன், இதன் மூலம் தரமான உள்ளூர் தயாரிப்புகளை
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வின் வெற்றி குறித்து நிறுவனத்தின் நிதிப் பிரிவின் சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர் சமத்
சிறிவர்தன (Chamath Siriwardana) கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் கண்காட்சி வெறுமனே ஒரு சந்தை
தளத்திற்கும் அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் கண்டியில், ‘உள்ளூர் வணிகங்களின் சிறந்த தயாரிப்புகள், அனைத்தும் ஒரே இடத்தில்’ எனும் வாசகம் முழுமையாகப் பிரதிபலிப்பதை நாம் உணர்ந்தோம். கண்டியில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்கள் முதன்முறையாக ஒன்றிணைந்ததில் வெளிப்பட்ட சுறுசுறுப்பும் ஆற்றலும் ஒரு முக்கிய தாக்கத்தை வெளிப்படுத்தின. இது உள்ளூர் வணிகங்களின் சிறந்த தயாரிப்புகளை வெறுமனே காட்சிப்படுத்துவதற்கும் அப்பால் செல்வதற்கான ஆற்றலை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை ஆதரவளிக்கவும், வணிகங்கள் செழித்து வளர்வதற்கான ஒரு தளத்தை வழங்கவும் கடமைப்பட்டுள்ளோம். என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை (SMBs) வலுப்படுத்துவதன் மூலம்,
இலங்கையின் பொருளாதாரத்திற்கு உறுதியான வளர்ச்சிப் பாதையை உருவாக்க நாங்கள் வழிவகுக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கண்டியில் நடைபெற்ற இந்த கண்காட்சியானது,
இலங்கையின் தொழில்முனைவு முயற்சிகளின் சிறப்பை கொண்டாடியதோடு மட்டுமன்றி, நாடு முழுவதும்
எதிர்கால வலுவூட்டல் முயற்சிகளுக்கு பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியையும் உருவாக்கியுள்ளது; இந்த
வணிகங்கள் மேலும் பெரிய அளவிலும் சிறந்த முறையிலும் வளர்வதற்கு CDB எப்போதும் ஒரு ஊக்கியாக
இருக்கும்.” என்றார்.
சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) ஆனது, இலங்கையின் நான்காவது
மிகப் பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமாகும் என்பதோடு, நாட்டின் மிகவும் புத்தாக்கமான நிதி
நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிலைபேறான தன்மை, பெருநிறுவன ஆளுகை,
பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தனக்கிருக்கும் வலுவான அர்ப்பணிப்பைக்
கொண்டுள்ள CDB இன் பெருநிறுவனப் பொறுப்புணர்வானது, தொலைநோக்குடைய தொழில்நுட்பப்
புத்தாக்கங்கள் மற்றும் அதிநவீன நிதித் தீர்வுகள் மூலம் நிதிச் சேவைகள் துறையில் புரட்சியை
ஏற்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.
editor