தனது சிறப்பு வாய்ந்த 30 வருட பயணத்தை கொண்டாடும் CDB

Citizens Development Business Finance PLC (CDB) marks its 30th anniversary with a series of meaningful events, celebrating three decades of pioneering success, innovation, and leadership in Sri Lanka’s Non-Banking Financial Industry (NBFI).

தனது சிறப்பு வாய்ந்த 30 வருட பயணத்தை கொண்டாடும் CDB

இலங்கையின் வங்கி சாரா நிதித் தொழில்துறையில் (NBFI) முன்னோடியான படிகள் மூலமாகவும், சிறந்த சாதனைகள் மற்றும் வழிகாட்டும் முயற்சிகள் நிறைந்ததுமான தமது சிறப்பு மிக்க முப்பது வருட பயணத்தை நினைவுகூர்ந்தவாறு, Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம் அதன் 30ஆவது வருட விழாவை அர்த்தமுள்ள நிகழ்வுகளுடன் கொண்டாடியுள்ளது.

செப்டெம்பர் 04ஆம் திகதி முழு இரவு பிரித் நிகழ்வுடன் ஆரம்பித்து, மறுநாள் காலை தான நிகழ்வுடன் தொடர்ந்த இந்த நிகழ்வுகள் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டின. செப்டெம்பர் 08ஆம் திகதி நாடு முழுவதிலும் இருந்து ஒன்றுகூடிய பணியாளர்கள் பங்கேற்ற அதன் மகத்தான கொண்டாட்ட நிகழ்வானது, CDB நிறுவனத்தின் மக்களை மையப்படுத்திய பண்பாட்டையும் இலங்கையின் பாரம்பரிய அடையாளத்தையும் வலியுறுத்தியது. 

இதன் சிறப்பம்சமாக, CDB Heritage Pavilion திறந்து வைக்கப்பட்டது. இது, முன்னணி வங்கி சாரா நிதித் தொழில்துறையாக (NBFI) மாறிய CDB நிறுவனத்தின் மாற்றத்தின் மைல்கற்கள் மற்றும் ஊக்கமூட்டும் பயணத்தை, படைப்பாற்றலான வகையில் வெளிப்படுத்தியது. பாரம்பரியம், பண்பாடு, புத்தாக்கம் ஆகியன ஒருங்கிணைந்த இவ்விழாவானது, எதிர்காலத்திற்கான CDB நிறுவனத்தின் தூரநோக்கை மீண்டும் வலியுறுத்தியது.

இலங்கையின் பாரம்பரியத் தன்மைக்கு உண்மையாக இருந்து செயற்பட்டு வந்துள்ள நிறுவனம் எனும் வகையில், இந்தக் கொண்டாட்டங்கள் CDB யின் பாரம்பரியம், மக்கள் மற்றும் சாதனைகள் ஆகியன தொடர்பான அதன் நன்றியுணர்வை வலியுறுத்தின. 

ஒற்றுமை, பாரம்பரியத்திற்கு மரியாதை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சாதகமான நிறுவனப் பண்பாட்டை இவை வளர்த்துள்ளன. ஆன்மிகம், பண்பாடு மற்றும் குழுக்களை மையப்படுத்திய கொண்டாட்டங்கள், ‘ஸ்மார்ட்டான மற்றும் நிலைபேறான இலங்கை’ இனை உருவாக்கும் CDB நிறுவனத்தின் தொடர்ச்சியான பணி நோக்குடன் இணைந்து, அதன் இலங்கை அடையாளத்தை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது.

NBFI துறையில் புத்தாக்கம் கொண்ட, முன்னோடியான மற்றும் வழிகாட்டி என அறியப்படும் CDB, எப்போதும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நெறிமுறை, சிறந்த நிர்வாகம், நம்பிக்கை, இணங்கிச் செல்லல் மற்றும் உறுதிமிக்க சூழல் மற்றும் சமூக பொறுப்பு ஆகிய மதிப்புகள் மூலம் வேரூன்றியவாறு செயற்பட்டு வருகின்றது. 

இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பது இதற்கு சான்று பகிர்கின்றன. இது, People.Planet.Profit (மக்கள்.பூமி.இலாபம்) எனும் 3P தத்துவத்தின் கீழ் நிலைபேறான எதிர்கால வளர்ச்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

பாரம்பரியத்திற்கு மரியாதை, மனிதர்களுக்கு மதிப்பு மற்றும் நிலைபேறான முன்னேற்றத்தின் நோக்கத்தைக் கொண்ட இக்கொண்டாட்டங்கள், CDB நிறுவனத்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கின்றன. மக்களை மையப்படுத்திய, புத்தாக்கம் கொண்ட மற்றும் நிலைபேறான தன்மையை முன்னெடுக்கும் ஒரு நிதி நிறுவனமாக தனது அடிப்படை குணாதிசயங்களிலிருந்து நிறுவனம் வலிமையோடு செயற்படுகின்றது.

Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம், இலங்கையின் நான்கு பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றாகத் திகழ்கிறது. நிதிச் சேவைகளில் புத்தாக்கம், நிலைபேறான தன்மை தொடர்பான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிறுவன நிர்வாக கடைப்பிடிப்பு ஆகியன தொடர்பில் CDB சிறந்து விளங்குகின்றது. டிஜிட்டல் மாற்றத்தை மையப்படுத்தி, நிலைபேறான முன்னேற்றக் குறிக்கோள்களுடன் ஒத்திசைவான நவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிதிச் சேவைகள் துறையை CDB நிறுவனம் மீள் வடிவமைத்து வருகிறது.