2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் வரலாறு படைத்த NCQP 2026 | தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் மாநாடு
The National Convention on Quality and Productivity (NCQP 2026), organized by SLAAQP, brought together over 2,000 delegates and more than 450 improvement teams in Colombo, celebrating innovation, operational excellence, and continuous quality improvement across Sri Lanka.
தர மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறனை முன்னேற்றுவதற்கான இலங்கை சங்கமான Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP), தரம் மற்றும் உற்பத்தித்திறனுக்கான தேசிய மாநாட்டை (National Convention on Quality and Productivity - NCQP) கடந்த ஜூன் 17ஆம் திகதி கொழும்பு, மவுன்ட் லவினியா ஹோட்டலில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது இந்த மாநாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத
அளவிலான மிகப்பெரிய பதிப்பாக அமைந்தது.
‘மீளெழுச்சிமிக்க இலங்கையை உருவாக்குவதற்கான மனித ஆற்றலால் முன்னெடுக்கப்படும் தரம் மற்றும்
உற்பத்தித்திறன்’ (People-Driven Quality and Productivity for a Resilient Sri Lanka) எனும் கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட NCQP 2026 மாநாடானது, நிறுவனங்களின் விசேடத்துவம், புத்தாக்கம், நீண்டகால போட்டித்திறனை மேம்படுத்துவதில் மனிதர்கள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக் காட்டியது.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 450 மேம்படுத்தல் குழுக்களின் (improvement teams) முயற்சிகள் இம்மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. தரக்கட்டுப்பாட்டு வட்டங்கள்
(Quality Control Circles), Lean Six Sigma, தர மேம்படுத்தல் குழுக்கள், குறுக்கு செயற்பாட்டுக் குழுக்கள், Kaizen உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இக்குழுவினருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று
அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கலந்து கொண்டார். லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சி நிறுவனத்தின்
குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் சஞ்சய ரத்நாயக்க, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின்
(SLSI) தலைவர் பேராசிரியர் தீக்ஷண சுரவீர ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டின் மிக உயரிய விருதான, மதிப்புமிக்க 'Mr. Sunil G. Wijesinha QC Circle Excellence Award’ விருதானது, வருடத்தின் சிறந்த திட்டங்களாக தெரிவு செய்யப்பட்ட இரண்டு மேம்படுத்தல் திட்டங்களுக்கு
வழங்கப்பட்டது. இவ்வருடம், இந்த விருதுகளை MAS BODY WEAR - Casual line பிரிவைச் சேர்ந்த Team
Threadx’ மற்றும் ‘Elastomeric Engineering PVT LTD’ நிறுவனத்தைச் சேர்ந்த Saviya Team’ ஆகியன
வெற்றி கொண்டன.
இது குறித்து, SLAAQP இன் தலைவர் சஜீவ ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நீண்ட காலமாக சிறந்த
நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கும், முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்கும், தொடர்ச்சியான
மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாக NCQP
உருவெடுத்துள்ளது. இவ்வருடத்தில் அதிகளவானோரின் பங்கேற்பை காணக் கூடியதாக இருந்தது. இது,
தேசிய வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாக விளங்கும் தரம், உற்பத்தித்திறன், நிறுவன விசேடத்துவம்
ஆகியவற்றின் மீது பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வரும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய NCQP 2026 இன் தலைவி சகுந்தலா குணதிலக, “தமது நிறுவனங்களுக்குள்
தரம் மற்றும் உற்பத்தித்திறன் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு மனிதர்களை வலுவூட்டுவதன் முக்கியத்துவத்தை NCQP 2026 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பங்கேற்ற குழுக்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆர்வம், புத்தாக்கம், அர்ப்பணிப்பு ஆகியன, மேலும் மீளெழுச்சிமிக்க மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான, நாடு முழுவதும் உள்ள அபாரமான திறனை வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன.” என்றார்.
1989 இல் நிறுவப்பட்ட இலங்கையின் தரமுன்னேற்ற வட்ட சங்கம் (Quality Circle Association of Sri Lanka), அதன் 1996ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட தரவிருத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான இலங்கை சங்கமானது (SLAAQP), நாடு முழுவதும் தரநிலைகள், செயற்பாட்டுத் திறன், வணிக மேம்படுத்தல்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, SLAAQP நிறுவனம் தரக் கட்டுப்பாட்டு வட்டங்கள் (QCC), Kaizen, Lean Six Sigma, மொத்த தர முகாமைத்துவம் (Total Quality Management - TQM) மற்றும் ஏனைய தொடர்ச்சியான மேம்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளுடன் நிபுணர்களையும் நிறுவனங்களையும் தயார்படுத்தி, தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
NCQP, Ayano TQM Excellence Award, Green Productivity Awards மற்றும் அதன் வருடாந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடு போன்ற முதன்மை முயற்சிகள் மூலம் SLAAQP ஆனது, நாடளாவிய ரீதியில் மேம்படுத்தல்களை அங்கீகரிப்பதற்கும், அறிவைப் பகிர்வதற்கும், கட்டமைக்கப்பட்ட மேம்பாட்டு அணுகுமுறைகளை நோக்கி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு தளத்தை உருவாக்க உதவியுள்ளது.
உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்ட ஒரு அமைப்பாக, ஆசிய தர வலையமைப்பு (ANQ), தரக்கட்டுப்பாட்டு வட்டங்களுக்கான சர்வதேச மாநாடு (ICQCC), ஜப்பானிய விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் சங்கம் (JUSE), சிக்ஸ் சிக்மா முகாமைத்துவ நிறுவகம் (SSMI) உள்ளிட்ட முன்னணி சர்வதேச அமைப்புகளுடன் SLAAQP கூட்டாண்மைகளைப் பேணி வருகிறது. இக்கூட்டாண்மைகள் இலங்கை நிறுவனங்களையும் நிபுணர்களையும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், சர்வதேச கற்றல் வாய்ப்புகள் மற்றும் தரம் மற்றும் உற்பத்தித்திறன் துறையில் வளர்ந்து வரும் புதிய வழிமுறைகளுடன் தொடர்ந்து இணைக்கின்றன.
NCQP 2026 மாநாட்டிற்கு MAS Holdings (Pvt) Ltd, Vibrant Events (Pvt) Ltd, Gislaved Gummi Lanka (Pvt) Ltd, GPV Lanka (Pvt) Ltd, Dr. Mikel J. Harry Six Sigma Management Institute Inc., TV Derana/Ada Derana, Nations Trust Bank, M & R Consolidated Private Limited, Lanka Hospitals Corporation PLC, Sunshine Holdings PLC ஆகிய நிறுவனங்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தன.
இந்நிறுவனங்களின் பங்களிப்புகள் இந்த மாநாட்டின் வரலாற்றிலான மிகப்பெரிய பதிப்பை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
editor