யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் 111ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் 111ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 03 இல் நடைபெறவுள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் மற்றும் அனைத்து ஆயுட்கால உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் 111ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு – 03, இலக்கம் 40, சேர் மொஹமட் மக்கான் மாக்கார் மாவத்தையில் அமைந்துள்ள Automobile Association Auditorium (AA) மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
கொழும்புக் கிளையின் அனைத்து ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளிட்ட, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு பொதுச் செயலாளர் ம. யூட் டினேஷை 0779498889 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
editor