வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டங்களை அறிவித்த ACAP

ACAP Stockbrokers (Pvt) Ltd. has announced a strategic business transformation aimed at strengthening Sri Lanka’s capital markets and attracting foreign investors. Under new leadership and Stallion Consultancy stewardship, the company is focusing on research-driven investment advisory, sustainable growth, and enhanced global investor engagement through the Colombo Stock Exchange.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டங்களை அறிவித்த ACAP

ACAP Stockbrokers (Pvt) Ltd. நிறுவனமானது, Stallion Consultancy நிறுவனத்தின் மேற்பார்வையில்
தனது பயணத்தின் புதிய கட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வகையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முதலீட்டு ஆலோசனையின் புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.


மே 5 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இந்த நிதி சேவை நிறுவனமானது தனது புதிய வர்த்தகநாம அடையாளத்தை வெளியிட்டதுடன், ஆய்வு மையப்படுத்தப்பட்ட அணுகு முறைக்கான மாற்றத்தையும் அறிவித்தது. மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தக முன்னுரிமைகள், இலக்குகள் மற்றும் இலங்கை பங்குப்பரிவர்த்தனைக்கு அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.


இலங்கையில் ஒரு தசாப்த காலமாக செயற்பட்டு வரும் ACAP நிறுவனமானது இலங்கை
பங்குப்பரிவர்த்தனையின் (CSE) உரிமம் பெற்ற உறுப்பினராகவும் திகழ்வதுடன், இலங்கை
பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டு மேற்பார்வையின் கீழும் இயங்கி வரும் நிலையில் இலங்கையின் மூலதன சந்தைகளுக்கு நம்பகமான அணுகலை வழங்கும் நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பானது, உயர்தரமான ஆய்வு, சிறப்பான வாடிக்கையாளர் சேவை வழங்குதல், மற்றும் நாட்டிற்குள் வெளிநாட்டு முதலீட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பினை வழங்குதல் ஆகியவற்றில் நிறுவனத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்தியது. 


இந்த ஊடகவியலாளர் மாநாடானது, சாதனையுடன் கூடிய மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய முகாமைத்துவக்குழுவினை அறிமுகப்படுத்தியது; நிறுவனத்திற்கான புதுப்பிக்கப்பட்ட மூலோபாய திசையையும் தெளிவான நீண்டகால பார்வையையும் கொண்டு வர உறுதியாக செயல்படும் குழுவாக அது விளங்குகிறது.


இந்த பெருநிறுவன மாற்றம் தொடர்பாக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மாலிக் பெர்னாண்டோ தெரிவிக்கையில் ஒழுக்கம், நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் வலுவான நிறுவனங்கள் காலப்போக்கில் கட்டியெழுப்பப்படுகின்றன என்று நாம் நம்புகிறோம். எமது அர்ப்பணிப்பானது நீண்ட கால அடிப்படையிலானதாக விளங்குவதுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவை, உயர்தர ஆய்வு மற்றும் நீடித்த உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். முக்கியமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் வெற்றிபெற அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதை நாம் நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறோம்.


உலகளவில் சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டை ஆசியாவின் சிறந்த
செயல் திறன் கொண்ட எல்லைப்புற சந்தைகளில் ஒன்றாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE) அறிவித்துள்ளது.இது 40% க்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளது. நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் நேரடியாக நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. குறிப்பாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு, நிதி ரீதியான லாபத்துடன் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துவதால், இது மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.ACAP நிறுவனம், வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான முதலீட்டு வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவதற்காக, தனது புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மேம்பட்ட முதலீட்டாளர் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.


இருப்பினும், விரைவான விரிவாக்கத்தைத் தொடர்வதற்குப் பதிலாக, ACAP நிறுவனமானது சீரான தன்மை, நம்பிக்கை மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்து, அளவிடப்பட்ட மற்றும் இயற்கையான வளர்ச்சி உத்தியைக் கடைப்பிடிக்கிறது. மேலும் இந்நிறுவனமானது இலங்கை மூலதனச் சந்தையில் நீண்ட கால பெறுமதி உருவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உறுதியான அர்ப்பணிப்புடன்செயற்பட்டு வருகிறது.


ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான அர்ப்பணிப்பானது ACAP-இன் புதுப்பிக்கப்பட்ட மூலோபாயத்தின் முக்கிய தூணாகும். இலங்கையின் மாறிவரும் பொருளாதார மற்றும் நிறுவனச் சூழலில், முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு, தெளிவான, நம்பகமான மற்றும் செயல்படக்கூடிய சந்தை நுண்ணறிவுகளை உருவாக்குவதில், நிறுவனத்தின் பிரத்தியேக ஆய்வுக்குழுவானது கவனம் செலுத்துகிறது.


அதே வேளை, ACAP நிறுவனமானது அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தனது மூலோபாய
கவனத்தை கூர்மைப்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் தனது வலையமைப்பு மற்றும் வலுவான சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி, எல்லைப்புறச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் உலகளாவிய முதலீட்டாளர்களை நிறுவனம் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. இதன் மூலம், இலங்கைக்குள் நுழையக்கூடிய ஒரு நம்பகமான நுழைவாயிலாக அது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.


ஊடகவியலாளர் மாநாட்டின்போது, கொழும்புபங்குப்பரிவர்த்தனை (CSE) மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) ஆகியவை வெளிப்படையான, முறையான ஒழுங்குமுறை கொண்ட மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதை ACAP ஏற்றுக் கொண்டது. சந்தையின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலும், நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் அவற்றின் தொடர்ச்சியான முயற்சிகள் முக்கிய கருவிகளாக உள்ளன.


இந்தத் துணிச்சலான புதிய எல்லையில் முன்னோக்கிச் செல்லும்போது, ACAP தனது வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளிக்கும் கொள்கையில் உறுதியாக நிலைத்திருக்கிறது - தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு அக்கறையுடன் தொடர்ந்து சேவையாற்றுவதுடன், அதே நேரத்தில் இலங்கையின் மூலதனச் சந்தைக்கு புதிய முதலீட்டாளர்களையும் வரவேற்கிறது.

ACAP Stockbrokers Director Jayasankha Alahendra, Director Dr. Manil Fernando, Managing Director Malik Fernando, Chairman Stefan Abeyesinhe and Chief Operating Officer Ruwan Rodrigo

ACAP Stockbrokers Managing Director Malik Fernando

ACAP Stockbrokers Chairman Stefan Abeyesinhe

ACAP Stockbrokers Director Dr. Manil Fernando

ACAP Stockbrokers Team