Selvern Trust அறிமுகம் செய்த SELVE – AI உதவியுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புதிய App

Selvern Trust நிறுவனம் SELVE எனப்படும் AI ஆதரவு மொழி கற்றல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தவும், மொழித் தடைகளை கடக்கவும் உதவுகிறது.

Selvern Trust அறிமுகம் செய்த SELVE – AI உதவியுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புதிய App

ஆங்கில மொழி தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலம் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில்நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மொழிசார் தடைகளை தீர்ப்பதற்கு உதவும் வகையில் SELVE செயலாற்றும்.

2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவச பரீட்சார்த்த காலத்தை வழங்கும் SELVE, ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைபாட்டினால் பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தொடர்பாடலை மேற்கொள்வதில் ஏற்படும் சவால்களினால், மக்கள் தமது தன்னம்பிக்கையை இழப்பது மாத்திரமன்றி, தொழில்சார் சூழல்களில் பேச முடியாமல் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்கள் அவர்களின் தோல்வி மனப்பான்மையை அதிகரிப்பதுடன், பல சிறந்த வாய்ப்புகளையும் நழுவச் செய்கின்றன என்பதை கவனத்தில் கொண்டு, அதனை சீர் செய்வதற்கு உதவும் வகையில் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கைச் சூழல்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான ஆற்றலை வழங்கும் பயனுள்ள மொழி அறிவுறுத்தல்களினூடாக, SELVE இந்தச் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குகின்றது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த app பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், 200 இற்கும் மேற்பட்ட பயனாளர்கள் இதன் மூலம் தமது ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்செயலியின் Interactive முறையிலான அணுகுமுறையினால், ஆங்கிலத்தில் பேசுவதற்கான தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க பெரிதும் ஆதரவாக அமைந்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Selvern Trust இன் ஸ்தாபக தவிசாளர் விஜேந்திரன் வொட்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இளம் தொழில் வல்லுநர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழிப் புலமை ஒரு பாரிய தடையாக இருப்பதை நாம் அவதானித்தோம். எனவே, மாணவர்கள் முதல் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வரை அனைவரினதும் வெற்றிக்கு பாதகமாக அமைந்துள்ள மொழித் தடைகளைத் தகர்த்தெரியும் வகையில், நடைமுறைக்கு சாத்தியமானதும், இலகுவில் அணுகக்கூடியதுமான ஒரு தீர்வினை உருவாக்க நாம் முனைந்தோம். இதுவரை கிடைத்துள்ள பெறுபேறுகள் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதுடன், ஏனையோரும் தமது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த இது உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

இச்செயலி பயில்வோரின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது. பயனாளர் ஒருவரின் அடிப்படை ஆங்கில அறிவு மட்டத்தை மதிப்பிடுவதிலிருந்து இது ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து, படிப்படியாக அவர்களின் மொழித் திறனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கு SELVE ஊக்குவிக்கின்றது. இந்த app, சிங்களம் மற்றும் தமிழ் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரிதும் துணையாக அமைவதுடன், வினாக்கள் புரியாத சந்தர்ப்பங்களில் தமது தாய்மொழியைப் பயன்படுத்தும் வசதியையும் வழங்குகின்றது. இருப்பினும், கற்றல் செயற்பாட்டின் போது பதில்களை ஆங்கிலத்தில் வழங்குவதன் ஊடாக, பயில்வோர் தொடர்ந்து ஆங்கில மொழியில் ஈடுபாட்டுடன் இருப்பதை உறுதி செய்கின்றது.

AI இன் வழிகாட்டலில் ஆங்கிலப் பேச்சுத் திறனைக் கற்பிப்பதில் SELVE சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது. நிஜ வாழ்க்கைச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலான ஈர்க்கக்கூடிய உள்ளடக்கங்கள் மூலம் இது பயில்வோரின் திறன்களை விரிவுபடுத்துகின்றது.

விறுவிறுப்பான தொகுப்பாளர் காணொளிகள், animationகள், interactive கதாபாத்திரங்கள் மற்றும் பயிற்சிகள் ஊடாக இக்கற்றல் அனுபவம் மேலும் மெருகூட்டப்படுகின்றது. இப்பாடங்களை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இவை செய்முறை ரீதியாக விளக்குகின்றன.

இந்த app, கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் புள்ளிகள் மற்றும் முன்னிலை வரிசைப் பட்டியல்கள் (Leaderboards) போன்ற விளையாட்டுகளுக்கு நிகரான அம்சங்களையும் (Gamification) உள்ளடக்கியுள்ளது. வினாக்களுக்குச் சரியாகப் பதிலளிக்கும் பயனாளர்கள் புள்ளிகளைப் பெற்றுத் தமது நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். தவறான பதில்களை வழங்கும் சந்தர்ப்பங்களில், ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படுவதுடன், அப்பயிற்சியை மீண்டும் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுகின்றது. இது ஒரு ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கக்கூடிய கற்றல் சூழலை இந்த app வழங்குவதை உறுதிப்படுத்துகின்றது.

விரிவான விடயங்களைப் பற்றிய அறிவை மேலும் ஆழப்படுத்த விரும்பும் கற்போருக்காக, ஒவ்வொரு பாடத்திலும் மேலதிக விளக்கங்கள், சொற்களஞ்சியப் பட்டியல்கள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளை உள்ளடக்கிய வழிகாட்டல் கையேடு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிதாகக் கற்றுக்கொண்ட திறன்களைப் பயிற்சி செய்து அவற்றை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, தொகுப்பாளர் காணொளிகளுக்கு இடையே அறிவு மேம்பாட்டுப் பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்துறைசார் கூட்டுமுயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக SELVE app அமைந்துள்ளது. இதன் எண்ணக்கருவாக்கம் மற்றும் திட்ட முகாமைத்துவத்திற்கு Artin (Pvt) Ltd நிறுவனமும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பங்காளராக Perfectus (Pvt) Ltd நிறுவனமும் பங்களிப்பு வழங்கியுள்ளன. அத்துடன், Rainbow Institute நிறுவனத்தின் மொழியியல் நிபுணத்துவமும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும், Artin (Pvt) Ltd நிறுவனம் SELVE app இன் நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களுக்கும் ஏனைய பயனாளர்களுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது SELVE app இன் ஆற்றலை மேலும் விரிவுபடுத்தி, AI இனால் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடத்தும் துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருத்தமான மற்றும் யதார்த்தமான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை முழுவதிலுமுள்ள திறமையானவர்களுக்கு, இலகுவில் அணுகக்கூடிய கல்வி வளங்கள் மற்றும் மொழி ஆதரவை வழங்குவதன் ஊடாக, அவர்கள் தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வதை Selvern Trust நோக்காகக் கொண்டுள்ளது SELVE app ஐ தற்போது App Store மற்றும் Google Play ஆகிய தளங்களிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Selvern Trust இன் ஸ்தாபக தவிசாளர் விஜேந்திரன் வொட்சன், SELVE இன் புத்தாக்கமான மொழிப் பயிற்சி தொழில்னுட்பத்தை அறிமுகம் செய்திருந்ததன் தூண்டுதல் பற்றி
கலந்துரையாடுகின்றார்.

குழுநிலை கலந்துரையாடல் (இடமிருந்து): முனைவர் சாந்த ஆர். யாப்பா -முதுநிலை கல்வித் துறை உறுப்பினர், SLIIT Business School, சதுரங்கி பத்தினிகே - முதுநிலை முகாமையாளர் - மனிதவள வணிகப் பங்காளர், Hemas Capital Hospitals Pvt Ltd. மற்றும் அஞ்சு மோசஸ் - ஆங்கிலம் மற்றும் பாடசாலைகள் கல்விப் பணிப்பாளர், British Council Sri Lanka ஆகியோர், ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்துவதில் SELVE இன் உடனடித் தேவையையும் அதன் பயன்பாட்டையும் பற்றிக் கலந்துரையாடுகின்றனர்.