செலான் வங்கி சிங்களம் மற்றும் தமிழ் மொழித் தெரிவுகளுடன் மொபைல் வங்கிச் செயலி
வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் நலன் கருதி செலான் வங்கி சமீபத்தில் தனது மொபைல் வங்கிச் செயலியில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி தெரிவுகளை உள்ளடக்கி மேம்படுத்தியது. மும்மொழி சேவைகளின் அறிமுகத்துடன் புதுப்பிக்கப்பட்ட செயலியானது வங்கியின் online சேவைகளிற்கான உள்வாங்கிய அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Android மற்றும் iOS இல் கிடைக்கும், செலான் வங்கியின் மொபைல் வங்கிச் செயலி ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வழங்கும் அதே சேவைகளை வங்கி இப்போது இலங்கையின் இரு முக்கிய உள்ளூர் மொழிகளில் வழங்குகின்றது.
செயலியின் புதிய மொழித் தெரிவுகள், வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மொழி புலமையைப் பொருட்படுத்தாமல் அணுக வழிவகுக்கிறது.
இதனூடாக வாடிக்கையாளர்கள் அவர்கள் பெறும் சேவைகளை மதிப்பாய்வு செய்யவும், தங்களுடைய சொந்த பாதுகாப்பு கேள்விகளை அமைக்கவும், கட்டணங்களை செலுத்தவும் மற்றும் நிதி பரிமாற்றங்களையும் சிரமமின்றி மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கான நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் இந்த செயலி மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக விளங்கக்கூடிய இடைமுகத்துடன் சேமிப்புக் கணக்குகள் மற்றும் கடனட்டை கணக்குகள் உட்பட பல சேவைகளை நிர்வகிக்கலாம்.
மேலும், பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் செயலியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக பாதுகாப்பு தெரிவுகள், SMS, மின்னஞ்சல் மற்றும் soft token ஆகிய மூன்று முறையிலான ஒரு முறை கடவுச்சொல் (OTP) முறைகளை உள்ளடக்கியது. Soft token பயன்பாடு பயனர்களுக்கு இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்காக தங்கள் சொந்த OTPகளை உருவாக்க அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சொந்த கணக்கு பாதுகாப்புகளை நிறுவும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. "மூன்றாவது சவால்" என்று அம்சத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் சொந்த பாதுகாப்பு கேள்விகளைத் தனிப்பயனாக்கலாம்.
இச் செயலி வாடிக்கையாளர் சேவை அம்சத்தையும் கொண்டுள்ளது. ஏதேனும் சவால்கள் அல்லது வேறு காரணங்களிற்காக வாடிக்கையாளர்கள் வங்கியைத் தொடர்புகொள்ளக் கூடியவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலியின் புதுப்பிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த டிஜிட்டல் வங்கி சனல்களின் தலைவர் சமிந்த செனவிரத்ன, “இந்த செயலியின் சமீபத்திய மேம்படுத்தல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு online வங்கித் தெரிவுகளை தமது சொந்த மொழியூடாக பல்வேறு சேவைகளை ஆராய்வதற்கான சுதந்திரத்தை வழங்கும் முயற்சியாகும்.
இது சவால்களை நீக்கி எளிமையாகவும் செயல்திறன் உடனும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலியின் மொழி அணுகலுடன் அதன் எளிமையைப் பேணுவதற்கான எங்கள் முயற்சி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் வங்கியின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.” என்றார்,
செயலியின் பிற செயற்பாடுகள், வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி பரிமாற்ற வரலாறுகளைப் பார்வையிடவும், தொலைந்த அல்லது திருடப்பட்ட அட்டைகள் தொடர்பாக புகாரளிக்கவும், எதிர்காலத்தில் பணம் செலுத்த விருப்பமான பயனாளிகள் மற்றும் பில்லர்களை உருவாக்கவும் அனுமதிக்கின்றன.
வங்கியின் கிளைகளைத் தேடுதல் மற்றும் தற்போதுள்ள நிலையான வைப்பு மற்றும் கடன்களைப் பார்வையிடல் ஆகியன மேலதிக அம்சங்களில் அடங்கும்.
செலான் மொபைல் வங்கிச் செயலியை Google Play மற்றும் Apple App Store இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
editor