சர்வதேச தேயிலை தினம்: ‘Roots of Ceylon’ திட்டத்தை அறிமுகப்படுத்திய Basilur Tea

To mark International Tea Day, Sri Lankan premium tea brand Basilur Tea has launched the ‘Roots of Ceylon’ initiative. The project celebrates 202 years of Ceylon Tea heritage with the planting of 202 tea saplings and aims to connect tea enthusiasts worldwide with Sri Lanka’s rich tea legacy.

சர்வதேச தேயிலை தினம்: ‘Roots of Ceylon’ திட்டத்தை அறிமுகப்படுத்திய Basilur Tea

சர்வதேச தேயிலை தினத்தையிட்டு 'Roots of Ceylon' திட்டத்தை அறிமுகப்படுத்திய Basilur Tea


இலங்கையின் உயர்ரக ‘Ceylon Tea’ வர்த்தகநாமமான Basilur Tea, சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு 'Roots of Ceylon' எனும் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.


இது தேயிலை ஆர்வலர்களை சிலோன் தேயிலையின் (Ceylon Tea) வளமான வரலாற்றுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது.


இலங்கைக்கு முதன்முறையாக தேயிலைச் செடிகள் வந்து சேர்ந்து 202 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வருட கொண்டாட்டமானது தேயிலை வரலாறு மற்றும் கலாசாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. 'Roots of Ceylon' திட்டத்தின் ஊடாக, சிலோன் தேயிலையின் சுவையை
உலகிற்கு கொண்டு சென்ற இத்துறையை, பெருமைப்படுத்தும் விதமாக 202 புதிய தேயிலைச் செடிகளை
Basilur Tea நிறுவனம் நடுகை செய்துள்ளது.


நிறுவனத்தின் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்படும் 'Roots of Ceylon' திட்டமானது, உலகம் முழுவதிலுமுள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இத்திட்டம் Basilur Tea விரும்பும் தேயிலை ஆர்வலர்களை, இலங்கை கொண்டுள்ள சிறந்த தேயிலைப் பாரம்பரியத்துடன் இணைக்கிறது.


இது குறித்து, Basilur Tea Export நிறுவனத்தின் தலைவர் Dr. காமினி அபேவிக்ரம அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“இவ்வருடம் சர்வதேச தேயிலை தினம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இலங்கைக்கு தேயிலைச் செடிகள் கொண்டு வரப்பட்டு 202 ஆண்டுகள் நிறைவடைவதையும் இது குறிக்கிறது. Roots of Ceylon திட்டம் எமது உணர்வுபூர்வமான வரலாற்றையும் கலாசாரத்தையும் கௌரவிக்கவும், தேயிலையின் ஒரு புதிய அத்தியாயத்தை எமது நுகர்வோருடன் இணைந்து வரவேற்கவும் எமக்கு வாய்ப்பளித்துள்ளது. இலங்கையின் பாரம்பரியத்தை நினைவுகூருவதும், அந்த வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பதும் எம் அனைவருக்கும் மிகச் சிறந்த ஒன்றாக அமைகின்றது.” என்றார்.


ஒன்றிணைந்த வளர்ச்சியையும் அனைவரையும் இணைக்கும் சூழலையும் ஊக்குவித்தல் (Fostering Growth
and Inclusion) எனும் சர்வதேச தேயிலை தினத்தின் எண்ணக்கருவின் மூலம் ஈர்க்கப்பட்ட Roots of Ceylon திட்டமானது, அடுத்த தலைமுறையினருக்காக இலங்கையின் தேயிலை தொழில்துறையை வளப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

காலியின் பத்தேகமவில் உள்ள Bucsh தேயிலைத் தோட்டத்தில் (Estate) இடம்பெற்ற இந்த தேயிலைச் செடி நடுகை நிகழ்வில் Dr. காமினி அபேவிக்ரம அவர்களுடன், முகாமைத்துவப் பணிப்பாளர் துஷாரி அபேவிக்ரம, அவர்களது மகன்களான நிதிப் பணிப்பாளர் ரஜித அபேவிக்ரம, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சாரக அபேவிக்ரம ஆகியோரும், Basilur Tea தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.


உலகளவிய ரீதியில் தேயிலை கலாசாரம் பரிணமித்து வரும் நிலையில், தேயிலையை மீள்வரையறை செய்வதில் Basilur Tea முன்னணியில் திகழ்ந்து வருகின்றது. உயர்தர பரிசுப் பொருட்கள் முதல் கைவினை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடம்பரமான தேயிலைப் பொதிகள் வரை, 600 இற்கும் மேற்பட்ட தயாரிப்புகளை இவ்வர்த்தகநாமம் வழங்கி வருகிறது.


சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஒரு தேயிலை வர்த்தகநாமம் எனும் வகையில், Basilur Tea தற்போது சர்வதேச ஹோட்டல் வலையமைப்புகள், சொகுசு ஓய்வு தங்குமிடங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தமது தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகிறது. குறிக்கோளுடனான, சமூகப்பணி மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் Basilur Tea, உயர் ரக சிலோன் தேயிலையின் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக கட்டியெழுப்பி வருகிறது.