TVET மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த CAREER ONE தேசிய தளம்
The CAREER ONE digital platform awareness programme, supported by KOICA, was successfully held in Colombo, bringing together key TVET stakeholders to enhance employability, career guidance, and digital workforce readiness in Sri Lanka.
இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்த CAREER ONE டிஜிட்டல் தளத்திற்கு (www.careerone.gov.lk) தொடர்பான விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி மேல் மாகாணத்தில், கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தத் திட்டம் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தினால் (KOICA) நிதியுதவியுடன், TVET தொழில்முறைத் தளச் செயற்திட்டத்தின் (2023–2026) கீழ் முன்னெடுக்கப்பட்டது. கொரியாவின் முன்னணி Edtech நிறுவனம் UBION இந்தச் செயற்றிட்டத்தின் முகாமைத்துவ ஆலோசகராக செயல்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி அதிகாரசபை (TVEC) உடன் இணைந்து, இந்நிகழ்ச்சி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்களின் மூலம் TVET மாணவர்களின் தொழில் தயார்நிலை மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடாகியுள்ளது.
நிகழ்வின் ஆரம்ப உரையை TVEC இன் தலைவர் பேராசிரியர் தர்மஸ்ரீ விக்ரமசிங்க நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி சமந்தி சேனாநாயக்க, டிஜிட்டல் தளங்கள் TVET மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
விளக்கக்காட்சி அமர்வில் UBION நிறுவனத்தின் பிரதித் தலைவர் Yoo In Seak CAREER ONE தளத்தின் தரவு அடிப்படையிலான செயல்திறன் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார். TVEC இயக்குநர் மஞ்சுள விதானபத்திரன் மற்றும் NAITA தொழில் வழிகாட்டல் பிரிவின் பரிசோதகர் கவிந்தி முத்துமாலி ஆகியோர் டிஜிட்டல் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒவ்வொரு பங்குதாரரின் பங்களிப்பை உறுதிப்படுத்தினர்.
அம்பாறை VTA தொழில் வழிகாட்டல் அதிகாரி எம். எம். மஹ்ஸூன், CAREER ONE தளத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை விவரித்தார். Winwil Group of Companies பணிப்பாளர் லஹிரு மதுரங்க, வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பணியாளர் தயார்நிலை குறித்த தொழிற்துறை பார்வைகளை பகிர்ந்தார். KOICA இலங்கையின் நாட்டுக்கான பணிப்பாளர் Lee Yoo Li, டிஜிட்டல் மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டில் KOICA அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, TVET மாணவர்களுக்கு தளத்தில் பதிவு செய்யும் மற்றும் சுயவிபரக்கோவை (Portfolio) உருவாக்கும் நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கல்வி அமைச்சு, TVEC, VTA, DTET, NAITA, UoVT, பல்கலைக்கழகக் கல்லூரிகள், CGTTI, NYSC, LAVTC போன்ற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி CAREER ONE டிஜிட்டல் தளத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதிலும், TVET மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனையும் மேம்படுத்துவதிலும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. CAREER ONE தளம் NVQ தகுதியுடைய திறமையான வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை கண்டறிய ஒரு தேசியத் தளமாக செயல்படுகிறது., TVET துறையில் ஆதாரங்களின் அடிப்படையிலான தொழில் வழிகாட்டல் முடிவுகளை எடுப்பதிலும் இந்தத் தளத்தின் பங்களிப்பை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பயிற்சி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் அர்ப்பணிப்பை TVEC இன் இயக்குநர் மஞ்சுள விதானபத்திரன உறுதிப்படுத்தினார். அத்துடன், எதிர்கால TVET மாணவர்களுக்கான கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம் குறித்து NAITA இன் தொழில் வழிகாட்டல் பிரிவின் பரிசோதகர் கவிந்தி முத்துமாலி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், அம்பாறை VTA இன் தொழில் வழிகாட்டல் அதிகாரி எம். எம். மஹ்ஸூன், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் CAREER ONE தளத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த நடைமுறைகளை விளக்கினார்.
Winwil Group of Companies பணிப்பாளர் லஹிரு மதுரங்கவினால் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பணியாளர் தயார்நிலை குறித்த தொழில்துறை பார்வைகளை உள்ளடக்கிய முக்கிய உரையும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நிறைவில் KOICA இலங்கையின் நாட்டுக்கான பணிப்பாளர் Lee Yoo Li உரையாற்றுகையில்,
இலங்கையில் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதில் KOICA அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை வலியுறுத்தினார்.
இந்த தெளிவூட்டல் அமர்வுகளுக்கு இணையாக, தளத்தில் பதிவு செய்தல் மற்றும் சுயவிபரக்கோவை (Portfolio) உருவாக்கம் குறித்த TVET மாணவர்களுக்கான நேரடிப் பயிற்சித் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. கல்வி அமைச்சு, TVEC, தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET), தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA), தொழில்நுட்ப தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம் (UoVT), பல்கலைக்கழகக் கல்லூரிகள், இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் (CGTTI), தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC), லலித் அத்துலத்முதலி தொழிற்பயிற்சி நிலையம் (LAVTC) உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
இந்த திட்டம், CAREER ONE டிஜிட்டல் தளத்தை தழுவுவதை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் எதிர்கால பணியாளர் படையினரை ஆதரிப்பதற்காக அரசாங்க நிறுவனங்கள், TVET நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. CAREER ONE டிஜிட்டல் தளம் என்பது NVQ தகுதியுள்ள திறமையான வல்லுநர்கள் வாய்ப்புகளைக் கண்டறியும் இடமாகும். உங்கள் நிறுவனத்தையும் இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக மாற்றுங்கள் — இப்போதே CAREER ONE தளத்தில் இணைந்து, வேலைத்தளப் பயிற்சி (OJT) மற்றும் வேலைவாய்ப்புகளை இலவசமாக பதிவிடுங்கள்!
editor