Happy Bear புத்தக நன்கொடை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிய Fashion Bug
Fashion Bug launched the third phase of its Happy Bear Book Donation Program, providing school supplies and educational support to students affected by recent floods in Kandy’s Kamburupitiya and Naranwita areas, reinforcing its commitment to education and social responsibility.
Fashion Bug நிறுவனம் தனது Happy Bear புத்தக நன்கொடைத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பித்து, கம்பளை, நாரன்விட்ட பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், மோசமான வானிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அவசியமான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கல்விக்குத் தேவையான ஆதரவும் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, விசேடமாக வடிவமைக்கப்பட்ட Happy Bear திறப்பு கோர்வைகளை (keychain) கொள்வனவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதன் மூலம் கிடைத்த மொத்தத் தொகைக்கு இணையான பங்களிப்பை Fashion Bug நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. இந்த கூட்டுப் பங்களிப்புகள் கற்றல் உபகரணப் பொதிகளாக மாற்றப்பட்டு, 2026 ஜனவரி 03 ஆம் திகதி நாரன்விட்ட புராண விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
விசேடமாக வடிவமைக்கப்பட்ட Happy Bear திறப்பு கோர்வைகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் இந்தத் திட்டத்தில் பங்கேற்ற 1,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு Fashion Bug நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷபீர் சுபியான் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட சவால்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அத்தியாவசிய கல்வி வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சியின் வெற்றிக்கு இந்த மகத்தான ஆதரவு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். ஒன்றாக இணைந்து, ஒரு சிறிய முயற்சியை அர்த்தமுள்ள தாக்கமாக நாம் மாற்றியுள்ளோம். என அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியானது Fashion Bug நிறுவனத்தின் பிரதான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான சிசு திரிமக (Sisu Dirimaga) மாணவர் ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வலுவூட்டி வருகின்றது. இத்திட்டமானது கணனி ஆய்வக நன்கொடைகள், பசுமைத் தோட்ட திட்டங்கள், உட்கட்டமைப்புத் திட்டங்கள், மேலதிக வகுப்புகள், விசேட பங்களிப்புகள், புலமைப்பரிசில்கள் ஆகியவற்றின் மூலம் பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆதரவளித்தலை நோக்காகக் கொண்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சமாக, இளம் திறமையாளர்களை வளர்த்து வெளிப்படுத்தும் வருடாந்த சிறுவர் ஓவியப் போட்டியான ரூ சித்தம் (Roo Siththam) நிகழ்வும் அமைகின்றது.
இது குறித்து நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச்.எம். பராஸ் கருத்து வெளியிடுகையில்,
Happy Bear புத்தக நன்கொடைத் திட்டமானது, தேவையின் போது சமூகங்களுக்கு ஆதரவாக நிற்கின்ற இவ்வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது என்றார். எமது சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் மையமாக கல்வியே விளங்குகின்றது. Happy Bear போன்ற திட்டங்கள் ஊடாக, எமது வாடிக்கையாளர்களின் தாராள மனப்பான்மையை, உறுதியான ஆதரவாக மாற்ற முடிகிறது. சவால்களுக்கு மத்தியிலும் சிறுவர்கள் தங்கள் கற்றல் பயணத்தைத் தொடர இது உதவுகிறது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது மூன்றாவது கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள Happy Bear புத்தக நன்கொடைத் திட்டமானது, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் Fashion Bug கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை எடுத்துக் காட்டுகிறது. வாடிக்கையாளர்கள், சமூகங்கள், வர்த்தக நாமம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், சிறுவர்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை இந்த முயற்சியானது தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதுடன், அடுத்த தலைமுறையினரை வலுவூட்டும் Fashion Bug நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது.
editor