People’s Pinnacle Awards 2025 இல் Retail Service விசேடத்துவத்திற்கான விருதை வென்றது Fashion Bug

Fashion Bug has been honoured with the People’s Pinnacle Retail Textile Service Excellence Award 2025, recognising its long-standing commitment to customer satisfaction and service excellence at Sri Lanka’s premier awards ceremony in Colombo.

People’s Pinnacle Awards 2025 இல் Retail Service விசேடத்துவத்திற்கான விருதை வென்றது Fashion Bug

வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சேவை தொடர்பான விசேடத்துவத்தில் தனது நீண்ட கால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Fashion Bug நிறுவனம், 2025 ஆம் ஆண்டிற்கான 'People’s Pinnacle Retail Textile Service Excellence Award 2025’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான People’s Pinnacle Awards 2025, கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றதுடன், இதில் 300 இற்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் தங்களது சிறந்த செயல்பாடுகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த விருதானது, கடந்த மூன்று தசாப்தங்களாக Fashion Bug மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், அர்த்தமுள்ள, மக்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற விற்பனை (retail) அனுபவங்களை தொடர்ச்சியாக வழங்குவதில் இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள நோக்கத்திற்கு ஒரு சான்றாகவும் அமைகிறது.

இந்த உயரிய கௌரவம் குறித்து Fashion Bug நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷபீர் சுபியான் கருத்து வெளியிடுகையில், 

இந்த விருது எமது குழுவினருக்கு உரித்தானது என்பது போலவே, எமது வாடிக்கையாளர்களுக்கும் உரித்தானதாகும். 30 வருடங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் வெறுமனே பெஷனை மட்டுமல்லாமல், சிறந்த சேவையையும் வழங்குகின்ற Fashion Bug நிறுவனம் மீது எமது வாடிக்கையாளர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான விசுவாசம், ஒவ்வொரு நாளும் எமது தரத்தை உயர்த்துவதற்கும் எதிர்பார்ப்புகளை மேலோங்கச் செய்வதற்கும் எம்மைத் தூண்டுகிறது. என்றார்.

Fashion Bug தனது சேவையின் தரங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், வாடிக்கையாளர்களின் கொள்வனவுப் பயணம் முழுவதும் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொழில்துறை நடைமுறைகளுக்கு அப்பால் செயற்படுகிறது. இந்த வாக்குறுதியின் மையமாக இவ்வர்த்தகநாமத்தின் இளமையான, சுறுசுறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை குழுவினர் விளங்குகின்றனர். அவர்கள் அர்ப்பணிப்பு, நம்பிக்கை, அக்கறையுடன் பணியாற்றி, தொடர்புறும் அனைத்து வேளைகளிலும் தங்கு தடையற்ற ஆதரவை உறுதி செய்கின்றனர்.

நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச்.எம். பராஸ் இவ்விரு குறித்து தெரிவிக்கையில்,

வாடிக்கையாளர் திருப்தியே எப்போதும் எமது முக்கிய கவனமாக இருந்து வருகிறது. Fashion Bug நிறுவனத்திற்குள் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் நட்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலானது, தற்செயலானது அல்ல. இது திட்டமிட்ட முயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி, எமது குழுவினர்களிடையே காணப்படும் சேவை வழங்கும் விசேடத்துவத்திற்கான பகிரப்பட்ட ஆர்வத்தின் விளைவாகும். தொடர்புறும் ஒவ்வொரு சந்தர்ப்பமும், எமது வாடிக்கையாளர்கள் மதிப்பிற்குரியவர்களாகவும் நம்பிக்கையுடனும் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றார்.

இந்த முக்கிய தருணத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், பல தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்று, விருது வென்றுள்ள சேவையை அனுபவிக்க வருமாறு, வாடிக்கையாளர்களுக்கு Fashion Bug அழைப்பு விடுக்கிறது.