Neptune Recyclers அறிமுகப்படுத்தும் EduCycle: இலங்கையில் இளைஞர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முன்னோடியான இயக்கம்

Neptune Recyclers has officially launched the Neptune EduCycle initiative, a national campaign targeting schools and universities across Sri Lanka. The program aims to cultivate a culture of plastic waste management and environmental responsibility among youth.

Neptune Recyclers அறிமுகப்படுத்தும் EduCycle: இலங்கையில் இளைஞர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முன்னோடியான இயக்கம்

இலங்கை இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் Neptune Recyclers நிறுவனமானது, Neptune EduCycle எனும் பெயரில் தேசிய ரீதியிலான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மையப்படுத்திய ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உத்தியோகாபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதிலான கலாசார மாற்றத்தை இளைஞர்களின் மூலம் உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது.

இது ஒரு திட்டமிட்ட, செயல் ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முயற்சி ஆகும். PET பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வது தொடர்பான உற்சாகம் மிக்க மற்றும் கலந்துரையாடல் அடிப்படையிலான கற்றல் அனுபவங்களை வழங்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் தினசரி பிளாஸ்டிக் மீள்சுழற்சி பழக்கங்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோளாகும். பாடசாலைகள், வீடுகள் மற்றும் சமூகத்தில் இளைஞர்கள் நிலைத்தன்மை (Sustainability) தூதுவர்களாக உருவெடுக்க இந்த EduCycle திட்டம் வழிவகுக்கின்றது.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டம், அஹுங்கல்ல ராஜபக்ஷ பாடசாலை, கொழும்பு 10 ஆனந்தா கல்லூரி, பலபிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி, களனி பல்கலைக்கழக வைத்திய பீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற, பங்குபற்றலுடன் கூடிய வெற்றிகரமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆரம்பமானது. இந்த முன்னோடித் திட்டங்கள் தொடர்பில் சாதகமான பின்னூட்டங்கள் கிடைக்கப் பெற்றதோடு, நடைபெற்ற பயிற்சிகளில் மாணவர்கள் மீள்சுழற்சி, கழிவுகளை வெவ்வேறாக பிரித்தல் மற்றும் பசுமையான நடைமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதில் அதிக உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

பிளாஸ்டிக் கழிவுகளின் வாழ்க்கை வட்டம் மற்றும் அதன் சூழல் தாக்கம் குறித்து மாணவர்களிடையே புரிதலை உருவாக்கும் வகையில், இந்த செயன்முறை ரீதியான பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மனப்பாங்கு மாற்றம் மற்றும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயற்படுகின்றன. மாணவர்களிடையே தனக்குரித்தான விடயம் எனும் பொறுப்புணர்வு உருவாகும்படி செயற்பட்டு, தூய்மையான, பசுமையான இலங்கைக்கான பாதையை Neptune EduCycle திட்டம் அமைத்துக் கொடுக்கிறது.

Neptune EduCycle திட்டத்துடன் இணையுமாறு கல்வியாளர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், நிறுவன சமூக பொறுப்பு (CSR) குழுக்கள், அரச நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு Neptune Recyclers அழைப்பு விடுக்கின்றது. இந்தச் செய்தியை பரவச் செய்வதில் ஒவ்வொரு பங்காளரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். சூழல் தொடர்பான கல்விக்கான அர்த்தமிக்க பங்களிப்பு மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான மேடையாக இருப்பதன் காரணமாக, குறிப்பாக CSR மற்றும் பெருநிறுவன நிலைத்தன்மை துறையினருக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். கல்வியாளர்களைப் பொறுத்தவரை, இது மாணவர்களிடையே வாழ்நாள் மதிப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒரு நுழைவாயிலாகும்.

நிலைத்தன்மை கழிவு முகாமைத்துவம் தொடர்பான விடயங்களில் வழங்கி வரும் தமது உறுதியான பங்களிப்புக்காக புகழ்பெற்ற நிறுவனமாக Neptune Recyclers நிறுவனம் விளங்குகின்றது. இந்த EduCycle திட்டம் வெறுமனே கல்வியூட்டும் முயற்சியாக மட்டுமல்லாது, மாணவர்கள் முன்னிலை வகிக்கும் சமுதாயங்களை ஊக்குவிக்கும் சுயவளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு பயணமாகவும் Neptune Recyclers நிறுவனத்தால் பார்க்கப்படுகிறது. இது கூட்டாளர்களையும், சமூகங்களையும் ஊக்குவித்து, தூய்மையான, பசுமையான இலங்கைக்கு அடித்தளம் அமைக்கின்றது.

 EduCycle திட்டமானது அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இவ்வேளையில், அது பரவலடைவதை மேலும் விரிவுபடுத்தவும், பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் தாக்கத்தை அதிகரிக்கவும் புதிய கூட்டாண்மைகள் உருவாக்கும் முயற்சியில் Neptune Recyclers தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது. கல்வி, ஈடுபாடு மற்றும் ஊக்கமளிப்பு மூலமே ஒரு நிலைத்தன்மை தேசத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை நிறுவனம் கொண்டுள்ளது.