Prime Group இன் சர்வதேச வர்த்தக நாம தூதுவராக புகழ்பெற்ற இசைக் கலைஞர் உமாரியா சிங்ஹவன்ஸ

Sri Lanka’s leading real estate company, Prime Group, expands globally with branches in Australia and Dubai and appoints celebrated music artist Umaria Sinhawansa as its Global Brand Ambassador.

Prime Group இன் சர்வதேச வர்த்தக நாம தூதுவராக புகழ்பெற்ற இசைக் கலைஞர் உமாரியா சிங்ஹவன்ஸ

இலங்கையின் நம்பிக்கையை வென்ற ரியல் எஸ்டேட் வர்த்தக நாமமும், அவுஸ்திரேலியா மற்றும் துபாயில் கிளைகளை நிறுவியதனூடாக சர்வதேச ரீதியில் வியாபித்துள்ள இலங்கையின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனமுமான Prime Group, தனது சர்வதேச வர்த்தக நாமத் தூதுவராக இலங்கையின் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இசைக் கலைஞரான உமாரியா சிங்ஹவன்ஸவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கைகோர்ப்பினூடாக, 100% இலங்கையின் புகழ்பெற்ற இரு நாமங்களான Prime Group மற்றும் உமாரியாவை ஒன்றிணைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் திறமையையும், சிறப்பையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டில் உமாரியா பலராலும் விரும்பப்படும் இசைக் கலைஞராக அமைந்திருப்பதுடன், சர்வதேச ரீதியில் கொண்டாடப்படும் இசை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த கைகோர்ப்பு, புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) கைச்சாத்திடலினூடாக உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் Prime Group இன் பிரசன்னத்தை விஸ்தரிக்கும் வகையில் இந்த பங்காண்மை அமைந்திருப்பதுடன், அதற்காக உமாரியாவின் சர்வதேச ஆதிக்கத்தையும் பின்பற்றும். இந்த கைகோர்ப்பினூடாக, இலங்கையின் திறமை மற்றும் கலாசாரம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் அமைந்திருப்பதுடன், உள்நாட்டு சிறப்புக்கு வலுவூட்டும் Prime Group இன் கொள்கையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உமாரியாவின் பரந்த புகழ் மற்றும் ஆக்கபூர்வத் திறனுடான நோக்கு ஆகியவற்றினூடாக உலகளாவிய ரீதியில் காணப்படும் வாடிக்கையாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தவும், அணுகலை மேம்படுத்தவும் Prime Group எதிர்பார்க்கிறது.

Prime Group இன் இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் சர்வதேச புகழ் ஆகியவற்றை உமாரியா தன்வசம் கொண்டுள்ளார். Prime Group இன் நோக்கான, இலங்கையை உலகத் தரம் வாய்ந்த ரியல் எஸ்டேட் புத்தாக்க மையமாக திகழச் செய்வது என்பதுடன், அவரின் நியமனம் மிகவும் பொருந்துவதாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்து, தொழிற்துறை நியமங்களை நாம் மாற்றியமைப்பதுடன், நம்பிக்கையை கட்டியெழுப்புவது மற்றும் சர்வதேச சந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது போன்றவற்றை இலங்கையின் திறமை மற்றும் கலாசார செழுமை போன்றவற்றுடன் மேற்கொள்வோம்.” என்றார்.

உமாரியா சிங்ஹவன்ஸ கருத்துத் தெரிவிக்கையில், 

“30 வருடங்களுக்கு மேலான பெருமையைக் கொண்ட உள்நாட்டு வர்த்தகநாமமாக திகழும் Prime Group உடன் கைகோர்ப்பதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இலங்கையை உலகுக்கு கொண்டு செல்லும் பரஸ்பர நோக்கை எமது பங்காண்மை பிரதிபலிக்கின்றது. ஆற்றல்கள் மற்றும் திறமைகளை கொண்டாடுவதுடன், சர்வதேச மட்டத்தில் உறுதித் தன்மையை ஏற்படுத்துவதற்காக இணைந்து செயலாற்றுவதாக எமது பங்காண்மை அமைந்துள்ளது. Prime Group இடமிருந்து சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக எனது முதலாவது சொத்தை கொள்வனவு செய்துள்ள நிலையில், அதை நான் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட மைல்கல்லாக கருதுகிறேன். Prime Group இன் சர்வதேச வர்த்தக நாம தூதுவராக திகழ்கின்றமையையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எமது சிறப்பு பயணத்தை உலகின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இலங்கையின் பெருமை மற்றும் சர்வதேச நோக்கத்தை இணைத்து கொண்டாடும் வகையில் Prime Group மற்றும் உமாரியா சிங்ஹவன்ஸ ஆகியோரின் கைகோர்ப்பு அமைந்துள்ளது. ஒன்றிணைந்து, அவர்கள் சிறப்பை மாற்றியமைப்பார்கள்.