SUNGROW Solar Inverter களை இலங்கையில் அறிமுகம் செய்துள்ள E.B. Creasy Solar
E.B. Creasy & Co., PLC நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவான E.B. Creasy Solar, சூரிய வலுத் துறையில் சர்வதேச முன்னோடியான SUNGROW உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது.
2024 செப்டெம்பர் 10 ஆம் திகதி இந்த மைல்கல்லை பதிவு செய்ததுடன், இந்த கைகோர்ப்பினூடாக, இலங்கையில் SUNGROW Solar Inverterகளின் உத்தியோகபூர்வ விற்பனை மற்றும் சேவை பங்காளராக E.B. Creasy Solar ஐ நியமித்துள்ளது. அதனூடாக, நிலைபேறான எதிர்காலத்துக்கு நவீன சூரிய வலுத் தீர்வுகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர் தன்னிறைவை மேம்படுத்த முன்வந்துள்ளது.
சூரிய வலுக் கட்டமைப்புகளின் வினைத்திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் SUNGROW Inverters வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் பாவனையாளருக்கு நட்பான ஆற்றல்கள் போன்ற பல அம்சங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு சூரியக் கதிரும் வினைத்திறனான பயன்படுத்தப்படுவதை SUNGROW Inverter உறுதி செய்து, பெருமளவு வலுச் சேமிப்பு மற்றும் பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வினைத்திறனையும் உறுதி செய்யும். அதன் பிரத்தியேகமான அலங்காரத்தினூடாக தொழில்நுட்பத்தின் பரந்த தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாரியளவு வணிக பொருத்துகைகள் அடங்கலாக, பல்வேறு பிரயோகங்களுக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கச் செய்துள்ளது. அசாதாரண வானிலை மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த inverter, நீண்ட கால பாவனைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனூடாக பாவனையாளர்களுக்கு அதன் அலங்காரத்தினூடாக பயன்பெறக்கூடியதாக அமைந்திருப்பதுடன், ஒன்றிணைக்கப்பட்ட கண்காணிப்பு கட்டமைப்பையும் இலகுவானதாக கொண்டுள்ளது. தங்கியிருக்கும் தன்மை, நீடித்த பாவனை மற்றும் பாவனையாளருக்கு நட்பான உட்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட SUNGROW Inverter கள், இலங்கையில் சூரிய வலுவூட்டப்பட்ட கட்டமைப்புகளில் புதிய அத்தியாயத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
இந்த மைல்கல் நிகழ்வில் E.B. Creasy Solarஇன் தலைவர் எஸ்.டி.ஆர்.அருட்பிரகாசம், முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்ஜீவ் ராஜரட்னம், பிரதம செயற்பாட்டு அதிகாரி இசுரு லேகம்கே, விற்பனை முகாமையாளர் எக்சத் டி அல்விஸ் மற்றும் SUNGROW Power Supply Co., Ltd இன் பணிப்பாளர் ஹோவார்ட் ஃபு ஆகியோர் SUNGROW அணியினருடன் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் வலுத் துறையின் பிரதான செயற்பாட்டாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கை நிலைபேறான வலு அதிகாரசபையின் தவிசாளர் (SLSEA) ரஞ்ஜித் சேபால, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியல் நிபுணர் பேராசிரியர். அசங்க ரொட்ரிகோ ஆகியோர் இலங்கை மின்சார சபையின் தவிசாளர் நளிந்த இளங்ககோன் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
மேலும், SLSEA இல் பதிவு செய்யப்பட்ட solar PV சேவை வழங்குநர்களும் பங்கேற்றிருந்தனர்.
E.B. Creasy Solar இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசுரு லேகம்கே கருத்துத் தெரிவிக்கையில்,
“SUNGROW உடனான எமது கைகோர்ப்பினூடாக, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான E.B. Creasy Solar இன் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. SUNGROW இன் உயர் தரம் வாய்ந்த solar inverterகளை அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இந்த பங்காண்மையினூடாக, நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றின் நீண்ட கால செயற்பாட்டாளர்கள் எனும் வகையில், இலங்கையில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கியமான படிமுறையாக இந்த கைகோர்ப்பு அமைந்திருக்கும் என்பதுடன், தேசத்தை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும்.” என்றார்.
சூரியனின் வலுவை பயன்படுத்த அர்ப்பணித்துள்ள E.B. Creasy Solar மற்றும் SUNGROW ஆகியன இணைந்து புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் நிலைபேறான செயற்பாடுகளில் பல வருட கால அனுபவங்களை கொண்டுள்ளதுடன், உயர் வினைத்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றன. குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் வணிகங்கள் மற்றும் பயன்பாட்டு அளவிலான செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு வலுவூட்டும் வகையில் இயங்குவதுடன், தூய வலுவை நோக்கிய நகர்வுக்கு இரு நிறுவனங்களும் முன்னிலையிலிருந்து பங்களிப்பு வழங்குகின்றன.
editor