City Of Dreams Sri Lanka திறப்பு விழாவில் பங்கேற்க இலங்கை வந்த பொலிவூட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்

South Asia's first integrated luxury resort, City of Dreams Sri Lanka, was officially opened in Colombo on Saturday, August 2, 2025. Bollywood actor Hrithik Roshan attended the grand event as a special guest.

City Of Dreams Sri Lanka திறப்பு விழாவில் பங்கேற்க இலங்கை வந்த பொலிவூட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்

தென் ஆசியாவின் முதலாவது Integrated Luxury Resort எனப்படும் City Of Dreams Sri Lanka  இன்று சனிக்கிழமை (02.08.2025 ) கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு பொலிவூட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையின் John Keells Holdings நிறுவனத்தால் 1.2 Billion அமெரிக்க டொலர் செலவில் இது கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த (Integrated Luxury Resort) ஆடம்பர விடுதி எனப்படும் ‘City of Dreams Sri Lanka’, இலங்கையின் சுற்றுலா துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் இந்த மாபெரும் திட்டம், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆசியாவில் மிக முக்கியமான Luxury & Entertainment Hub ஆக மாறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த திட்டம், Melco Resorts & Entertainment மற்றும் இலங்கையின் முன்னணி தனியார் கம்பெனியான John Keells Holdings PLC ஆகியோரின் கூட்டு முதலீட்டின் பலனாக உருவாகியுள்ளது.

இங்குள்ள பிரதான அம்சங்களாக ஐந்து நட்சத்திர தர ஹோட்டல்கள், உலகத் தரமான காசினோ,  சொகுசு பல்பொருள் அங்காடி, முதற்தர உணவங்கள், Swimming pools, Spas, Wellness Centers, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் வசதிகள் போன்றன காணப்படுகின்றன.

திட்டத்தின் மொத்த முதலீடு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறப்பு விழாவில், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

https://web.facebook.com/Mininewshubcom/videos/709178618781843

John Keels குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா கருத்துத் தெரிவிக்கையில்,

“இது இலங்கைக்கு ஒரு திருப்புமுனையான தருணம். City of Dreams, நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் முதலீடாகும் – இது ஒரு லட்சியமிக்க தேசிய தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பித்துள்ளது. இது ஒரு கட்டுமானத்தை விட மேலானது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், நமது உலகளாவிய மதிப்பை உயர்த்தவும், எதிர்வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு நவீன, முன்னோக்குச் சிந்தனையுள்ள இலங்கையை வடிவமைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த இடமாகும்” என தெரிவித்தார்.

Melco Resorts and Entertainmentஇன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி Lawrence Ho இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், 

“இந்த தொலைநோக்குத் திட்டத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். City of Dreams Sri Lanka, Melcoவின் நிபுணத்துவத்துடன் இலங்கையின் அன்பு மற்றும் கலாசாரத்தை இணைத்து ஒரு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது. NÜWA மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கெசினோ வசதிகளை இயக்குவதில் எங்களது பங்கின் மூலம், தெற்காசியாவில் ஆடம்பரம் மற்றும் விருந்தோம்பலுக்கான புதிய தரநிலைகளை அமைக்கும் அதே வேளையில், இலங்கையின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டாடும் ஒரு இடத்திற்குப் பங்களிப்பு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இலங்கை என்பது மாபெரும் சுற்றுலா சாத்தியங்களை கொண்ட நாடாகும். City of Dreams Sri Lanka திட்டம் இந்த நாட்டின் திறமையை உலகிற்கு காட்டும் ஒரு வாயிலாக அமையும்.” என தெரிவித்தார்.

City Of Dreams Sri Lanka வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஒற்றை இடத்தில் அனைத்து வசதிகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் சர்வதேச வர்த்தக, சுற்றுலா மற்றும் பொருளாதார சூழலை மாற்றக்கூடியதாக கருதப்படுகிறது.