இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் 2025 வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே ரியல் எஸ்டேட் நிறுவனம் Prime Residencies 

Prime Residencies has been ranked among Sri Lanka’s Top 100 Most Valuable Brands for 2025, standing out as the only company from the real estate sector to achieve this recognition.

இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் 2025 வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே ரியல் எஸ்டேட் நிறுவனம் Prime Residencies 

இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் 2025 வரிசையில், ரியல் எஸ்டேட் துறையிலிருந்து உள்ளடக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமாக Prime Residencies அங்கம் பெற்றுள்ளது. 

பிரான்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சொத்துகள் பிரிவில் நம்பிக்கை மற்றும் சிறப்பை கட்டியெழுப்புவதில் மூன்று தசாப்த காலப்பகுதியை நிறுவனம் கொண்டாடும் நிலையில், இந்த உயர் கௌரவிப்பு கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையின் இதர சகல ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளர்களையும் விட உயர்ந்த ஸ்தானத்தில் Prime Residencies திகழ்வதை இந்த கௌரவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இதனூடாக நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், நாட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த மற்றும் நம்பிக்கையை வென்ற ரியல் எஸ்டேட் வர்த்தக நாமமாக அமைந்திருப்பதையும் உணர்த்தியுள்ளது.

இதுவரையில், Prime Residencies இனால் தொடர்ச்சியாக இல்லங்கள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளதுடன், சமூகங்களிடையே தரமான வாழ்க்கை நியமங்கள், நம்பிக்கை, சௌகரியம் மற்றும் நிலைத்திருக்கும் பெறுமதி போன்றன கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

Prime Group இன் குழும தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில்,

“தரம், நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான Prime இன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த சாதனை உறுதி செய்துள்ளது. வாழ்க்கையை மேம்படுத்தும் வாழிடப் பகுதிகளை உருவாக்கும் எமது நோக்கை இது வலிமைப்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் நகர அபிவிருத்தியில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

பிரான்ட் ஃபினான்ஸ் இலங்கையின் சிறந்த 100 வர்த்தக நாம தரப்படுத்தல்களின் போது, நிதி வலிமை, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வர்த்தக நாமத்தின் தாக்கம் போன்றன அளவிடப்பட்டுள்ளன. இந்த நிரலில் காணப்படும் ஒரே ரியல் எஸ்டேட் நிறுவனமாக Prime Residencies அமைந்திருப்பதுடன், அதன் உறுதியான வியாபார மாதிரி, நிதிசார் உறுதித் தன்மை மற்றும் நாடு முழுவதிலம் காணப்படும் அதன் முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களின் நிலைத்திருக்கும் பெறுமதி போன்றவற்றை உறுதி செய்துள்ளது.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் சர்வதேச முன்னோடியாக அமைந்திருக்கும் Prime Group, நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகியவற்றினால் கட்டியெழுப்பப்பட்ட 30 வருட கால கீர்த்தி நாமத்தை கொண்டுள்ளது. இதில் அங்கமாக, தொடர்மனைகள் பிரிவில் நம்பிக்கையை வென்ற நாமமாக Prime Lands Residencies PLC வளர்ச்சி கண்டுள்ளதுடன், இதுவரையில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 45 இற்கும் அதிகமான திட்டங்களை பூர்த்தி செய்துள்ளதுடன், 5 திட்டங்களை நிர்மாணித்து வருவதுடன், 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக வளர்ச்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.